You are here : Arts

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




அரச சிறுவர் ஓவிய விழா – 2019 நீங்களும் முயற்சிக்கலாமே!

2019-03-11


வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும்; அரச கட்புலக்கலை ஆலோசனைக் குழு ஏற்பாடு செய்கின்ற அரச சிறுவர் ஓவிய விழா -2019 இன் ஆரம்ப சுற்றுக்கான ஓவியங்களை 2019 பெப்ரவரி 01 ஆம் திகதி  தொடக்கம் 2019 ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை கொழும்பு -07, தேசிய கலாபவனத்தில் ஏற்றுக்கொள்ளப்படும். இவ் ஓவியங்களிலிருந்து ஒரு மாவட்டத்திற்கு 150 ஓவியங்கள் தேர்ந்தெடுக்கப்படுவதோடு இரண்டாம் சுற்றுக்காக முன்னனுப்பப்படுவர். இரண்டாம் சுற்று போட்டி மாகாண மட்டத்தில் விசேட பயிற்சி பட்டறை மூலம் நடாத்த செய்யப்பட்டுள்ளதுடன் முதலாம் சுற்றின் அனைத்து வெற்றியாளர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்;. இரண்டாம் சுற்றில் தீட்டப்படுகின்ற ஓவியங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் படைப்புக்கள் “2019 அரச சிறுவர் ஓவிய விழாவிற்காக சமர்ப்பிக்கப்படும். இவற்றில் இருந்து வெற்றிப்பெறும் பிள்ளைகளுக்கு அரச சிறுவர் ஓவிய விழாவின்போது விருதுபன் பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். என கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

 போட்டி பிரிவுகளும்  வயதெல்லையும்               

போட்டி பிரிவுகள்           வயதெல்லை               பிறந்த வருடம்

01.   பாலர் பிரிவு            வயது வருடம்      05 – 06          2013-2012

02.   சிறுவர் பிரிவு            வயது வருடம்      07 – 09          2011-2010-2009

03.   கனிஷ்ட பிரிவு           வயது வருடம்      10 – 12          2008-2007-2006

04.   சிரேஷ்ட பிரிவு                வயது வருடம்      13 – 15          2005-2004-2003

05.   அதி சிரேஷ்ட பிரிவு      வயது வருடம்      16 – 18          2002-2001-2000


போட்டி நிபந்தனைகள்
01.  நீங்கள் விரும்பிய தலைப்பினை தெரிவு செய்துகொள்ளமுடியும்


02.  நீங்கள் விரும்பிய வடிவத்தில் ஓவியம் தீட்டலாம்.


03.  ஓவியம் 18 ஒ 14 அங்குலத்தைப் கொண்டிருத்தல் வேண்டும்.


04.  ஒருவர் ஒரு ஆக்கத்தினை மாத்திரமே போட்டிக்கு சமர்ப்பிக்க முடியும்.


05.  அனுப்பப்படும் ஆக்கம் இதற்கு முன்னர் வேறு எந்த போட்டிக்காகவும் சமர்பித்ததாக இருக்ககூடாது.


06.  ஓவியம் அனுப்பும்போது தங்களின் சொந்த வதிவிட மாவட்டத்திலிருந்து அனுப்புதல் வேண்டும்.


07.  தங்களால் அனுப்பப்படும் ஆக்கங்களில் நடுவர் குழுவினரால் தெரிவுசெய்யப்படும் மாணவர்கள் மட்டும் குறிப்பிட்ட மாவட்டத்தில் போட்டிக்காக தெரிவுசெய்யப்படுவர், போட்டிகள் நடைபெறும் திகதி, நேரம் மற்றும் இடம் என்பன பின்னர் அறிவிக்கப்படும்.


08.  ஓவியத்தின் பின்புறத்தில் கீழ்க்காணப்படும் விடயங்களை சரியான முறையில் தமிழ் அல்லது ஆங்கில மொழியில் பூர்த்தி செய்தல் வேண்டும். இந்த விடயங்கள் சரியான முறையில் வழங்கப்படாத ஆக்கங்கள் போட்டியிலிருந்து நீக்கப்படும்.


09.  இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள அருகில் உள்ள பிரதேச செயலகத்தில் அல்லது மாவட்ட செயலகத்தில் உள்ள கலாசார உத்தியோகத்தரை நாடவும்.

விண்ணப்பப்படிவம் 


ஓவியங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
தேசிய ஒருங்கிணைப்பாளர்
அரச கட்புல கலை ஆலோசனைக் குழு
தேசிய கலா பவனம்
ஆனந்த குமாரசுவாமி மாவத்தை,
கொழும்பு -07.

ஓவியம் அனுப்பும்போது கடித உறையின் அல்லது பொதியின் இடதுபக்க மேல் மூலையில் “அரச சிறுவர் ஓவிய விழா -2019” என்று குறிப்பிடவும்.

தொடர்புகளுக்கு:- 011-2882551 /011-2872031

மேலதிக விபரங்களுக்கு அனைத்து பிரதேச செயலக மற்றும் மாவட்ட செயலக கலாசார உத்தியோகத்தர் ஊடாகவும் மற்றும்  www.culturaldept.gov.lk என்ற இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.