You are here : Arts

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS
நூறாண்டு சென்­றாலும் மறக்­க­மு­டி­யாத அமரர் ‘அருள்­மொ­ழி­அ­ரசி’

2019-03-13


அருள்மொழி அரசி, வித்துவான் வசந்தா வைத்தியநாதன் அமரராகி இன்றுடன் ஒருவருடம்

உல­கிற்கு நன்­நெறி காட்­டிய ஓர் உயர்ந்த ஆன்மா ஓய்­வ­டைந்து ஓராண்டு பூர்த்­தி­யா­கி­றது. ‘அருள்­மொ­ழி­அ­ரசி’ வித்வான் திரு­மதி வசந்தா வைத்­தி­ய­நாதன் அம்­மை­யாரின் நிரப்­ப­மு­டி­யாத இழப்பால் ஈழத்தின் சைவத்­தமிழ் உலகு பெருந்­து­ய­ருற்று நிற்­கி­றது. தமிழ்­நாட்டில் பிறந்து தர்­ம­புர ஆதீனக் கல்­லூ­ரியில் சைவத்­தையும் தமி­ழையும் துறை­போகக் கற்று, வித்வான் பட்டம் பெற்று, பேர­றி­ஞ­ராக மிளிர்ந்த அன்­னையார் தனது மைத்­து­ன­ரா­கிய யாழ்ப்­பாணம் நீர்­வே­லியைச் சேர்ந்த  வைத்­தி­ய­நாதனின் கரம்­பி­டித்து, ஈழத்தார் செய்த தவப்­ப­யனால் இம்­மண்ணின் மரு­ம­க­ளாக வந்து சேர்ந்தார். 
வங்கி முகா­மை­யா­ள­ராகப் பணி­யாற்­றிய வைத்­தி­ய­நாதன்  தன் இல்ல விளக்காய் வந்த துணை­வி­யாரின் அறி­வாற்­றலை வியந்து, இவர் வீட்­டுக்கு ஒளித­ர­ வந்த விளக்கு மட்­டு­மல்ல இந்­நாட்­டுக்கும் ஒளி தர­வந்த விளக்காம் என முடிவு செய்தார். அம்­மை­யாரின் தமிழ், சைவ அறிவை இந்­நாட்டின் தமி­ழு­லகும் சைவ உலகும் பயன்­பெறும் வண்ணம் அன்­னையை ஈழத்தின் ஆல­யங்­க­ளிலும் சமய, இலக்­கிய விழாக்­க­ளிலும் தானே அழைத்துச் சென்று சொற்­பொ­ழி­வாற்ற வைத்து இம்மண் பய­னுறச் செய்தார். 


தன் கண­வ­னாரின் மறைவின் பின்னர் தமி­ழ­கத்தில் வாழ்ந்த அவ­ரது குடும்­பத்தார் அங்கு வந்­து­வி­டும்­படி எவ்­வ­ளவோ வலி­யு­றுத்தி வேண்­டியும் இந்த மண்தான் என்னை வாழ வைத்த மண் இதனை விட்டு எக்­கா­ரணம் கொண்டும் அங்கு வர­மாட்டேன்" எனக் கூறி உறு­தி­யுடன் எத்­த­னையோ இடர்­க­ளுக்கு மத்­தி­யிலும் தனித்து அவற்­றுக்கு முகம் கொடுத்து வாழ்ந்­தவர் நம் அம்­மையார். 


அம்­மை­யாரின் வாக்­குத்­திறன் அபூர்­வ­மா­னது. ஈழத்தில் பெண் பேச்­சா­ளர்கள் அதிகம் இல்லை என்ற குறையை அக்­கா­லத்தில் நீக்­கி­ய­வர்கள் இருவர். ஒருவர் அமரர் சிவத்­தமிழ்ச்­செல்வி தங்­கம்மா அப்­பாக்­குட்டி. மற்­றவர் ‘அருள்­மொ­ழி­அ­ரசி’ அமரர் வித்வான் திரு­மதி வசந்தா வைத்­தி­ய­நாதன். வேறு சில பெண்­பேச்­சா­ளர்கள் இருந்­த­போதும் இவ்­விரு­வரைப் போல் சைவத்­திற்­கா­கவும் தமி­ழிற்­கா­கவும் தம்மை முழு­மையாய் அர்ப்­ப­ணித்த பெருமை அவர்­க­ளுக்கு வாய்க்­க­வில்லை. 


சிவத்­த­மிழ்ச்­செல்வி சமய உரை­க­ளோடு நின்­று­வி­டாமல் சமய சாத­னை­களும் புரிந்தார். நம் அருள்­மொ­ழி­அ­ரசி அம்­மையார்  படிப்­பது, படித்­ததை மற்­ற­வர்­க­ளுக்கு உரைப்­பது, உரைத்­த­தன்­படி தான் வாழ்ந்து காட்­டு­வது என தமது வாழ்வை மற்­ற­வர்­க­ளுக்­கான ஒரு முன்­னு­தா­ர­ணமாய் ஆக்கிப் புகழ் கொண்டார். அம்­மை­யா­ரு­டைய இந்­தியப் பாணி­யி­லான சொற்­பொ­ழிவு  நடை நம் மண்ணில் பல­ரையும் கவர்ந்­தது. அதனால் ஓய்­வுக்கு நேர­மின்றித் தினமும் எங்கோ ஓர் இடத்தில் சொற்­பொ­ழி­வாற்ற வேண்­டிய நிலையில் அவர் இருந்தார். 


அம்­மை­யாரின் ஞாப­க­சக்தி அபூர்­வ­மா­னது. தமி­ழிலோ சைவத்­திலோ எந்த விட­யத்தை எப்­போது எவர் கேட்­டாலும் உடன் பதில் சொல்லக் கூடிய ஒரு நட­மாடும் நூல­க­மா­கவே அம்­மையார் திகழ்ந்தார். சமய வாழ்வைப் பொறுத்­த­ளவில் தாம் கற்ற அனைத்­தையும் அம்­மையார் தன் தனி­வாழ்வில் நூற்­றுக்கு நூறு­வீதம் கடைப்­பி­டித்தார். அந்­தணர் குலத்தில் தோன்­றிய அம்­மையார்  அக்­குல ஆசா­ரங்கள் எத­னையும் எக்­கா­ரணம் கொண்டும் விட்­டு­வி­டாமல் பேணி வந்தார். வெளிநா­டு­க­ளுக்கு விமா­னத்தில் பயணம் செய்யும் போது­கூட தனக்­கான உணவைத் தானே தயா­ரித்து எடுத்துச் செல்­லு­ம­ள­விற்கு ஆசாரம் பேணு­பவர் அவர். 


கொழும்பு விவே­கா­னந்த சபை, ஸ்ரீஇ­ரா­ம­கான சபை, இந்து கலா­சார அமைச்சு போன்ற அமைப்­புக்­களில் அம்­மை­யா­ரு­டைய பங்­க­ளிப்பு மிக முக்­கி­ய­மா­னதாய்த் திகழ்ந்­தது. இந்து கலா­சார அமைச்சின் நூல் வெளியீ­டு­க­ளிலும், அது நடத்­திய பரீட்­சை­க­ளிலும்  கருத்­த­ரங்­கங்­க­ளிலும் அம்­மையார் ஈடு­பாட்­டோடு பணி­யாற்றி வந்தார். அது­மட்­டு­மன்றி இந்­நாட்டின் ஊட­கங்கள் அனைத்­திலும் அம்­மை­யாரின் பணி மிக­முக்­கி­ய­மா­ன­தாக இருந்­தது. 


தன்­னோடு பழகும் அனை­வ­ரையும் அன்­பான வார்த்­தை­க­ளாலும் செய­லாலும் ஈர்த்து வந்த அம்­மையார் தன் இல்லம் தேடி வரு­கி­ற­வர்­க­ளுக்கு உண­வி­டாமல் ஒரு­நாளும் அவர்­களைத் திருப்பி அனுப்­ப­மாட்டார். எங்கள் கம்­பன் ­க­ழ­கத்­திற்கு வரும் இந்­திய இசைக்­க­லை­ஞர்கள் அம்­மை­யாரின் உப­சா­ரத்தில் மயங்கி அவரை அன்­ன­பூ­ரணி" என்றே அழைப்­பார்கள். 
1980 ஆம் ஆண்டு முதல் எங்­களின் கம்­பன் ­க­ழ­கத்­தோடு இணைந்து செயற்­பட்ட அம்­மையார் எமது கழ­கத்தைப் பல­வ­ழி­க­ளாலும் நெறிப்­ப­டுத்­தினார். நாம் கொழும்­புக்கு வந்த பிறகு 2000 ஆம் ஆண்­ட­ளவில் தனித்­தி­ருந்த அம்­மையார் எம்­மு­ட­னேயே வந்து தன் இறு­தி நாள் வரை கழ­கத்தில் தங்கி ஒரு தாயாய் எம்மைப் பேணி உட­னி­ருந்து காத்தார். எமது கம்­பன் ­க­ழகம் அமைத்த தத்­துவத் திருக்­கோயில் அம்­மை­யாரின் ஈடு­பாட்­டுக்­கு­ரிய ஆல­ய­மாக மிளிர்ந்­தது. உயிர் பிரியும் அன்­று­கூட அம்­மையார் அன்­னையின் வழி­பாட்டை முடித்­தி­ருந்தார். கம்­பன்­க­ழகப் பிள்­ளை­களை தனது பிள்­ளை­களாய்ப் போற்­றிய அன்­னையின் இழப்பால் கம்பன் கழகம் பெருந்­து­ய­ருற்று நிற்­கி­றது. 


அம்­மையார் தனது வாழ்நாள் முழு­வதும் சொற்­பொ­ழி­வு­களால் சேர்த்த செல்­வத்தை கம்­பன்­ க­ழ­கத்­திடம் ஒப்­ப­டைத்து அதனை ஓர் அறக்­கட்­ட­ளை­யூடு இன்­னென்ன வகையில் பயன்படுத்தவேண்டும் என்று எம்மைப் பணித்துள்ளார். அடுத்த மாதத்தில் கம்பன் கழகமும் இந்து கலாசாரத் திணைக்களமும் இணைந்து நடத்தவுள்ள அம்மையாரின் நினைவஞ்சலிக் கூட்டத்தின் போது இவ் அறக்கட்டளையை நாம் ஸ்தாபிக்கவுள்ளோம். 


எங்கோ பிறந்து இம்மண்ணைத் தன் சொந்த மண்ணாய் நினைந்து தினம் தினம் தன் கணீரென்ற குரலால் தமிழையும் சைவத்தையும் போதித்து நின்ற அன்னை மறைந்து ஓராண்டு நிறைவடைகிறது. அவரது தூய வாழ்வால் பல்லாண்டுகள் ஈழமக்கள் மனதில் அவர் வாழ்வார் என்பதில் ஐயமில்லை.

கம்­ப­வா­ரிதி இ.ஜெயராஜ்- 

-நன்றி வீரகேசரி