You are here : Arts

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




வயலின் இசைக் கலைஞர் பத்மா சங்கர் உடனான நேர்காணல்

2019-04-09


 

உங்களைப் பற்றி..?


நான் மும்பையில் பிறந்து வளர்ந்த வள். ஐந்து வயதாக இருக்கும்போது வயலின் எனக்கு அறிமுகமானது. என்னு
டைய தாயார் திருமதி லட்சுமி நாராயணன். ஒரு வீணை இசைக்கலைஞர் மட்டுமல்ல வாய்ப்பாட்டு கலைஞரும்கூட. அத னால் நான் கருவிலிருக்கும்போது இசை எனக்கு ஊட்டப்பட்டது. மூன்று வயதிலிருந்து வாய்ப்பாட்டு பாடக் கற்றுக்கொண்டேன். 5 வயது முதல் வயலின் வாசிக்கக் கற்றுக்கொண்டேன். அதன் பிறகு சென்னை பல்கலைக்கழ கத்தில் இசைத்துறையில் முதுகலை பட்டம் பெற்றேன். அதனைத் தொட ர்ந்து, இசைமேதை பாலமுரளி கிருஷ்ணா உள்ளிட்ட பல முன்னணி வாய்ப்பாட்டு கலைஞர்களுக்கும், பிறகு தனியாகவும் கச்சேரிகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிறேன்.


உங்களது குருவைப் பற்றி...?


மும்பையில் ராமகிருஷ்ணா ஷர்மா என்பவரிடம்தான் முதன் முதலில் வயலினை கற்றுக்கொண்டேன். இவர் இசைமேதை லால்குடி ஜெயராமன் அவர்களின் சீடர். அதன் பிறகு, லால்குடி ஜெயராமன் அவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக மும்பையிலிருந்து சென்னைக்கு இடம் பெயர்ந்து வந்து அவரிடம் 12 ஆண்டு காலம் வயலினை கற்றுக்கொண்டு என்னை மேம்படுத்திக் கொண்டேன். என்னுடைய குரு லால்குடி அவர்களைப் பற்றி பல விடயங்களைச் சொல் லிக் கொண்டேயிருக்கலாம். அவர் ஓவியத்தில்  கூட இசை இருக்கிறது என்பார். இயற்கையிலும் இசை இருக் கிறது என்பார். வண்ணங்களில் இரு க்கும் இசையை அறிமுகப்படுத்தியி ருக்கிறார். இசை எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்திருக்கிறதுஅதை  நாம் உன்னிப்பாக ஆழ்ந்து கவனித் தால் அதன் நுட்பமும் இனிமையும் புலப்படும் என்பார். என்னுடைய குரு கர் நாடக இசை மேதை மட்டுமல்ல, உல கிலுள்ள அனைத்து இசை வடிவங் களையும் ரசிப்பவர். அதிலுள்ள நல்ல விடயங்களை எடுத்துரைப்பவர்.


இசைத்துறையில் உங்களின் பங்களிப்பு...?


இசை என்பது ஒரு நதியின் பயணம் போன்றது. எம்முடைய குரு எனக்குக் கற்பித்தார். நான் அதனை எம்முடைய சீடர்
களுக்கு – இசையில் ஆர்வம் உள்ளவர்
களுக்கு கற்பிக்கிறேன். பிரபல பின்ன ணிப் பாடகரும், இசைக்கலைஞருமான சங்கர் மகாதேவன் தொடங்கியிருக்கும் இசைக்கான இணையப் பல்கலைக் கழகத்தில் கர்நாடக இசை பிரிவின் துறை தலைவராக பணியாற்றி வருகிறேன். இன்றைய திகதியில் இளம் கலைஞர்களுக்கு அதிலும் இசையில் ஆர்வமுள்ள மாணவர்க ளுக்கு இசையை கற்றுக்கொள்வதற் காக இசைக்கலைஞர் இருக்குமிடத் திற்குச் சென்றுவருவது என்பதும், அங்கு சென்று கற்றுக்கொள்வது என்பதும் நடை முறையில் பல்வேறு காரணங்களால் இயலாத சூழல் இருக்கிறது. அதேபோல் அவர்களை இசையை கற்பதற்கு உதவி புரியவும் பெற்றோர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. இத னால் இணையத்தளத்தின் மூலமாக இசையை கற்கும்போக்கு, வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. இதனை ஒரு டிஜிற்றல் குருகுலம் என்றும் சொல்லலாம். ஏனெனில் குருவுக்கும், சீடர்களுக்குமிடையே ஒரேயொரு கணினி திரையும், கமெராவும் மட்டுமே இருக்கும்.


மேலைத்தேய இசைக்கும், இந்திய இசைக்கும் என்ன வேறுபாடு..?


இந்திய இசை என்பது ஹிந்துஸ்தானி, கர்நாடக இசை என இரண்டு பெரும் பிரிவுகளைக் கொண்டது. இந்த இரண்டு பெரும் பிரிவுகளிலும் ஆதார சுருதி என்பது ஒன்றாகத்தான் இருக்கும். இதில் எந்தவித மாற்றமும் இருக்காது. ஆனால் மேலைத்தேய இசையில் இசைக் கலைஞர்கள் உருவாக்கிய இசைக் கோர்வைக்கு ஏற்ப, தங்களின் ஆதார சுருதியில் சில மாற்றங்களை செய்து கொண்டு வாசிப்பர்.
வயலினைப் பற்றிய தங்களுக்கு 
தெரிந்த அரிய தகவல்..?
வயலினை இன்றைய தலைமுறை யினர், இது ஒரு மேலைத்தேய இசைக்க
ருவி என்று எண்ணிக்கொண்டிருக்கின் றார்கள். ஆனால் இதன் வரலாற்றை ஆய்வு செய்தால், இந்தியாவில் ‘ராவ ணஸ்தரவம்’ என்ற பெயரில், வேறு வடிவமைப்பிலிருந்த இசைக் கருவி தான் இது என்பது வெகு சிலருக்கே தெரிந்த உண்மை. அதேபோல் வாய்ப் பாட்டு கலைஞர்களால் மூச்சை உள் ளிழுத்து சில சாஹித்யங்களை பாடுவ தைக்  காட்டிலும் அதிக கால அவகாசத் தில் வயலினில் வாசிக்க இயலும்.


நீங்கள் புதிதாக தொடங்கியிருக்கும் ‘செலக்ட் கிளப்’..?


இந்த செலக்ட் கிளப் என்பது, இசை ஆர்வலர்களையும், ரசிகர்களையும் ஒன்றி
ணைத்து, நேரடி இசை நிகழ்ச்சிகளுக்கு ஈர்க்கும் வகையிலும், அவர்கள் முறையாக இசையை வாசிப்பதற்கும் கற்றுக் கொள்வதற்கும், அதனை கற்றுக்கொள்வ தற்கு தூண்டும் வகையிலும் உருவாக் கப்பட்ட ஒரு டிஜிற்றல் தளம்தான் இது. 
இந்த தளத்திற்கு பதினைந்து டொலர் முதல் 52 டொலர்வரை கட்ட ணம் செலுத்தும் பிரத்தியேகமான சந் தாதாரர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. இதில் நீங்கள் உறுப்பினராகிவிட்டால் என்னுடைய அண் மைய இசைப் பதிவுகளை கேட்கலாம்.  என்னுடைய இணையப்பக்கங்களில் எழுதுவதை வாசிக்கலாம், சிறப்பு இசை காணொளிகளையும் மற்றும் கச்சேரிக ளையும் நேரடியாகவும்,  உயர்தரத்துடன் பதிவு செய்ததையும் காணலாம். வேறு எந்த சமூக ஊடகங்களிலும் இத்தகைய வசதிகள் கிடைக்காது என்பது இதில் உள்ள சிறப்பு. இது தொடர்பாக மேலதிக தகவல்களை தெரிந்துகொள்ள வேண் டுமென்றால் எங்களுடைய இணைய ப்பக்கத்திற்கு வருகை தரலாம். இது இந்தியாவில் மேற்கொள்ளப்படும்  முதல் முயற்சி என்பதும், இசைத்துறை யில் சாதாரண ரசிகர்களாக இருப்பவர் களை, சாதனையாளர்களாக உயர்த்து வதற்கான ஒரு புதிய முயற்சி என்றும் இதனைக் குறிப்பிடலாம்.  


இத்தகைய முயற்சி முதல் முறையாக ஒரே குடையின் கீழ் இணைக்கும் வகையில் இந்த இணையத்தளம் வடிவ மைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

நன்றி 

வீரகேசரி