You are here : Arts

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




நீங்­களும் எழு­தலாம் - நூல் வெளி­யீட்டு விழா

2019-05-09


நீங்­களும் எழு­தலாம் வாசகர் வட்­டத்தின் ஏற்­பாட்டில் ராணி சீத­ரனின் 'புறங்கைச் சுமை ' கட்­டுரை நூல் அறி­முக விழாவும்,  நீங்­களும் எழு­தலாம் 25 வது கவி­தை­யிதழ் வெளி­யீட்டு விழாவும்,  மூத்த எழுத்­தாளர் ஷெல்­லி­தாசன் கெள­ர­விப்பு நிகழ்வும் திரு­கோ­ண­மலை நக­ர­சபை மண்­ட­பத்தில் 07-.04-.2019 ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை 4.30 மணிக்கு ஊட­க­வி­ய­லாளர் திரு­மலை நவம் தலை­மையில் இடம்பெற்­றது.

ஆரம்ப நிகழ்­வாக மங்­கல விளக்­கினை உத­விக்­கல்­விப்­ப­ணிப்­பாளர் (தமிழ்) E . மகா­தேவன் ஏற்­றி­வைப்­ப­தையும்,  திரு­மலை நவம் தலை­மை­யுரை வழங்­கு­வ­தையும், புறங்­கைச்­சுமை நூலின் அறி­முக உரையை ஆசி­ரியர் சௌ.  சந்­தி­ர­கலா வழங்க,  நீதி­மன்ற பதி­வாளர் எம்.எஸ்.நியாஸ்  நிகழ்த்­தினார். 

நூலின் முதல் பிர­தியை நூலாசி­ரியர் ராணி சீதரன் நிகழ்வின் முதன்மை விருந்­தி­ன­ரான தமிழ் மணி அக­ளங்­க­னுக்கு வழங்கி வெளி­யிட்டு வைப்­ப­தையும், நீங்­களும் எழு­தலாம் 25 ஆவது இதழின் முதல் பிர­தியை நிகழ்வின் அதி­தி­யான அக­ளங்கன் மூத்த எழு­த்­தாளர் சூசை எட்­வேட்­டுக்கு வழங்கி வைப்­ப­தையும், ஆசி­ரியர் சி. பிரகாஷ் அறி­முக உரை நிகழ்த்­து­வ­தையும்,  புலோ­லியூர் வேல் நந்­த­குமார் ஆய்­வுரை வழங்­கு­வ­தையும், ஷெல்­லி­தாசன் கெள­ர­ விக்­கப்­ப­டு­வ­தையும், எஸ்.ஆர்.தனபாலசிங் கம் ஏற்புரை வழங்குவதையும் படங்களில் காணலாம். 

- நன்றி வீரகேசரி
       (படங்கள்-: சேனையூர் நிருபர்)