You are here : Arts

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




இனி எண்ணற்ற தமிழ் புத்தகங்களை செலவின்றி படிக்கலாம் - புதிய செயலி

2019-05-12


தமிழில் எண்ணற்ற நூல்கள் காணப்பட்டாலும் அவற்றின் பயன்பாடு குறைவாகவே உள்ளது. தொலைபேசிகளையும் கணணிகளையும் கையில் ஏந்தும் எம்மவர்களுக்கு புத்தகத்தை கையில் ஏந்துவதற்கு நேரம் கிடைப்பதில்லை. எனவேதான் தொழில்நுட்பத்தின் ஊடாக உங்கள் கைகளில் புத்தகங்களை ஏந்தச்செய்யும் நோக்கில் புதிய தமிழ் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. 


இந்திய தமிழ் இளைஞர் குழாமின் முயற்சியில் தமிழ் வாசகர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயலி Free Tamil ebook (FTE) என பெயரிடப்பட்டுள்ளது. இதன் அங்குராப்பனம் இன்றைய தினம் விழுப்புரத்தில் இடம் பெற்றுள்ளது. 


இந்த FTE Android App மூலமாக எண்ணற்ற தமிழ் புத்தகங்களை வாசிக்கவும், முன்னனி எழுத்தாளர்களின் படைப்புகளை இலவசமாக பெறவும் முடியும் என்பது விசேட அம்சமாகும்.