You are here : Arts

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS
குறு­நதிக் கரை­யினில் -– ஓர் பார்வை

2019-08-12


இலங்கை மலை­யக மக்­க­ளது வர­லாற் றைப் பொறுத்­த­வரை 1968 – 1969 ஆம் ஆண்­டுகள் திரிசங்கு நிலை காலகட்­ட­மாகும்.சிறிமா – சாஸ்­திரி ஒப்­பந்­தத்­தின்­படி இலங்கை வாழ் நாடற்ற மலை­யக மக்கள் இந்­தியா அல்­லது இலங்கை குடி­யு­ரிமை கோரி விண்­ணப்­பிக்க வேண்­டிய இறுதி ஆண்­டு­க­ளாகும். சிறிமா- சாஸ்­திரி உடன்­ப­டிக்­கை­யின்­படி மலை­யக மக்கள் இந்­திய குடி­யு­ரி­மைக்கு விண்­ணப்­பிப்­பதா ? அல்­லது இலங்கை குடி­யு­ரி­மைக்கு விண்­ணப்­பிப்­பதா? என்ற தடு­மாற்ற நிலையில் வாழ்ந்­தனர். மறு­பு­றத்தில் இலங்கை அர­சியல் வர­லாற்றில் முதல் ஆயுதக் கிளர்ச்­சிக்­கான கருக்­கட்டல் இக்­கா­ல­கட்­டத்­தி­லேயே நடந்துக் கொண்­டி­ருந்­தது. தோழர் சண்­மு­க­தா­சனின் தலை­மை­யி­லான இலங்கை கம்­யூ­னிசக் கட்சி ஆயத புரட்­சிக்­கான கருத்­துக்­களை முன்­வைத்து செயற்­பட்­ட­துடன் அக்­கட்­சி­யி­லி­ருந்து பிரிந்து சென்ற இளை­ஞ­ரான காமினி யாப்பா கீழைக்­காற்று என்ற இயக்­கத்தை ஆரம்­பித்து புரட்­சிக்­கான முன்­னெ­டுப்­பு­களை முன்­னெ­டுத்­த­துடன் தோழர் சண்­மு­க­தா­சனின் கட்­சி­யி­லி­ருந்து பிரிந்த இன்­னு­மொரு இளைஞர் ரோஹன விஜே­வீர மக்கள் விடு­தலை முன்­னணி இயக்­கத்தை உரு­வாக்கி ஆயுதப் புரட்­சிக்­கான முன்­னெ­டுப்­பு­களை முன்­னெ­டுத்தார். ரோஹன விஜே­வீர தமது இயக்­கத்தில் தமிழ் இள­ஞர்­களை இணைத்­துக்­கொள்­ள­வில்லை. காமினி யாப்பா தமது இயக்­கத்தில் தமிழ் இளைஞர்­களை இணைத்துக் கொண்டார். காமினி யாப்பா மற்றும் இலங்கை கம்­யூ­னி­சக்­கட்சி மலை­யக இளை­ஞர்­களை தமது இயக்­கத்­திற்குள் வென்­றெ­டுத்து  அவ்­வி­யக்­கங்­களில் இணைந்த இளை­ஞர்கள் புரட்­சிக்­கான நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­ட­துடன் படைப்­பி­லக்­கி­யங்­க­ளிலும் தடம் பதித்­தனர். இவ்­வாறு தடம் பதித்­த­வர்கள் தம் பெற்றோர் இந்­திய குடி­யு­ரி­மைக்கு விண்­ணப்­பித்­தி­ருந்­த­மை­யினால் எழு­ப­து­களின் பின்­னி­று­தியில் இந்­தியா செல்­ல­வேண்டி நேர்ந்­தது. அவ்­வாறு சென்­ற­வர்கள் தனது பிறந்த நாட்டின் அனு­ப­வங்­களை இலக்­கி­யங்­க­ளாக பதிவு செய்­தனர். அவ்­வாறு பதிவு செய்­த­வர்­களில் சென்று வரு­கிறேன் என் ஜன்ம பூமியே எனும் கவி­தையை எழு­திய மறைந்த சிவா­னந்தன் முத­லி­டத்தைப் பெறு­வ­துடன் அவரைத் தொடர்ந்து இந்­தி­யா­விற்கு குடி­பெ­யர்ந்த சிலர் தமது அனு­ப­வங்­களை படைப்­பி­லக்­கி­யங்­க­ளாக பதிவு செய்­துள்­ளனர்.


இவ்­வாறு பதிவு செய்­த­வர்­களில் சிவா­னந்தன் பிறந்த கொட்­ட­கங்க தோட்­டத்தை பிறப்­பி­ட­மாகக் கொண்ட   மு.சி. கந்­தையா   குறு நதி கரை­யினில் எனும் நாவலை  வெளிக்­கொ­ணர்ந்­துள்ளார்.   கந்­தையா   எழு­ப­து­களில் தோழர் சண்­மு­க­தா­சனின் இலங்கை கம்­யூனிஸ்ட் கட்சி இயக்­கத்தில் இணைந்து செயற்­பட்­ட­துடன் 1977 ஆகஸ்ட் இனக்­க­ல­வ­ரத்தின் பின்னர் சிறிமா –சாஸ்­திரி ஒப்­பந்­தத்தின் விளை­வாக நிரந்­த­ர­மாக தமி­ழகம் திரும்­பினார். தமி­ழகம் திரும்­பும்­வரை இட­து­சாரி அர­சியல் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்ட   மு.சி. கந்­தையா 1973 பிற்­ப­கு­தியில் இலக்­கிய துறையில் ஆர்வம் காட்டி கவி­தைகள் சில படைத்­த­துடன் நதி எனும் இலக்­கிய சஞ்­சி­கை­யையும் கண்­டியில் வெளிக்­கொ­ணர்ந்தார். எழு­ப­து­களின் பின்­னி­று­தியில் தமி­ழகம் திரும்­பிய கந்­தையா கூட­லூரில் தன் புதிய வாழ்க்­கையை ஆரம்­பிக்­க­லானார். கூடலூர் கொட்­ட­கங்க தோட்டத் தொழி­லா­ளர்­களின் இன்­னு­மொரு கொட்­ட­கங்­கை­யாக அமைந்­தது. கொட்­ட­கங்க தோட்­டத்தில் பிறந்த சிவா­னந்தன்  முதல் மு.சி.கந்­தையா உள்­ளிட்ட பல இள­ஞர்கள் கூட­லூரில் குடி­ய­மர்ந்த போதிலும் தனது ஜன்ம பூமியை நினைத்து பார்க்­காது வாழ­வில்லை. தனது வாழ்க்­கையின் இளம் காலத்தை மீட்­டுப்­பார்ப்­பதன் மூலம் அதனை பதிவு செய்­ய­லா­யினர். அம்­மு­யற்­சியின் வெளிப்­பா­டாக மு.சி.கந்­தையா 2015 ஆம் ஆண்டு சிதைக்­கப்­பட்ட மக்கள் எனும் பெயரில்  இன்றைய மலை­யக மக்­க­ளது மூதா­தை­யர்கள் எவ்­வாறு கால­னி­யத்­தினால் வேர­றுக்­கப்­பட்டு தமி­ழ­கத்­தி­லி­ருந்து இலங்­கைக்கு கொண்டு வரப்­பட்­டனர். பின்னர் இலங்கை மற்றும் இந்­திய தேசிய முத­லா­ளித்­து­வத்­தினால் இலங்கை வாழ் மலை­யக மக்­களின் புதிய தலை முறை­யி­னரின் ஒரு பகு­தி­யினர் எவ்­வாறு வேற­றுக்­கப்­பட்டு இந்­தி­யா­விற்கு அனுப்பப்பட்­டனர் என்­பது பற்­றிய வர­லாற்றை சிதைக்­கப்­பட்ட மலை­யகத் தமி­ழர்கள் என்ற நூலின் ஊடாக பதிவு செய்­துள்ளார்.  


அறு­ப­து­களின் பின்­னி­றுதி முதல் எண்­ப­து­களின் அரை­யி­றுதி வரை­யி­லான காலப்­ப­கு­தியில் மலை­யக மக்­க­ளது வாழ்க்கை வர­லாறு எவ்­வாறு இருந்தது என்­பதை குறு நதிக் கரை­யினில் என்ற நாவலில் பதி­வு­செய்­துள்ளார். இவ்­வ­ர­லாற்றை பதிவு செய்­கையில் தாம் வாழ்ந்த கொட்­ட­கங்க தோட்­டத்தை மையப்­ப­டுத்­தியே இவ்­வ­ர­லாற்றை பதிவு செய்­துள்ளார். அங்கு  எவ்­வா­றான தொழிற்­சங்க அர­சியல் முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. எண்­ப­து­களில் முனைப்­ப­டைந்த ஈழப் போராட்டம் எவ்­வா­றான தாக்­கத்­தினை மலை­ய­கத்தில் ஏற்­ப­டுத்­தி­யது மற்றும் மலை­யக இளை­ஞர்கள் எவ்­வா­றான தாக்­கத்­திற்கு உட்­பட்டு செயற்­பட்­டனர் என்­பதை இந்­நா­வலில் பதிவு செய்­துள்ளார்.  இலங்­கையில் சம­தர்ம ஆட்­சியை உரு­வாக்­கு­வ­தற்­காக தம்மை அர்ப்­ப­ணித்­த­வர்­களில்  ஒரு சிலர் ஈற்றில் எவ்­வாறு இலங்­கையை விட்டு தமி­ழகம் செல்ல நேர்ந்­தது, கூட்டுக் குடும்­ப­மாக வாழ்ந்த குடும்­பங்கள் எவ்­வாறு அர­சி­யல்­வா­தி­களின் நாக­ரீ­க­மற்ற, ஜன­நா­ய­க­மற்ற உடன்­ப­டிக்­கை­யினால் பிரிக்­கப்­பட்­டனர், எவ்­வாறு காத­லர்கள் பிரிய நேர்ந்­தது என்­ப­தையும் மிக ஆழ­மாக பதிவு செய்­துள்ளார். இதே­வேளை ஈழப்­போ­ராட்­டத்தின் காரண­மாக அக­தி­க­ளாக தமி­ழகம் சென்ற தோட்டத் தொழி­லாளர் குடும்­பங்கள் எவ்­வாறு சீர்­கு­ழலைந்­தன என்­ப­தையும் பதிவு செய்­துள்ளார் இந்­நா­வலில் புனை­வுகள் இல்லை மாறாக தாம் அனு­ப­வித்த மற்றும் தாம் சந்­தித்த நிஜ மனி­தர்­களின் வாழ்க்­கை­யையே பதிவு செய்­துள்ளார்.  


இந்­நாவல் இலங்­கையின் மலை­யக மக்கள்  மற்றும் தமி­ழ­கத்தில் வாழும் மலை­யக மக்­க­ளது மூன்று தசாப்த வர­லாற்றை படம்­பி­டித்து காட்­டி­யுள்­ளது. இன்றைய புதிய தலை­மு­றை­யினர் தமது இடைக்­காலத் தலை­மு­றை­யினர் எவ்­வா­றான வாழ்க்கைப் பின்­ன­ணி­யினை கொண்­டி­ருந்­தனர் என்­பதை தெரிந்­து­கொள்ள இந்­நாவல் பெரிதும் வாய்ப்பு அளிக்­கின்­றது. நாவ­லா­சி­ரியர் தமி­ழ­கத்தில் மூன்று தசாப்­தங்­களை கழித்­த­மையின் விளை­வாக சில தமி­ழக வழக்குச் சொற்கள் நாவலில் காணப்­ப­டு­கின்­றன. ஒரு சில சொற்கள் இலங்கை வாழ் மலை­யக மக்­க­ளினால் புரிந்துகொள்ள முடி­யா­த­தாக இருக்­கலாம். குறிப்­பாக விடுப்பு என்ற சொல் இலங்கை வழக்கில் லீவு அல்­லது விடு­முறை என்று பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. எனவே இச்­சொல்லின் அர்த்­தத்­தினை இலங்கை வாச­கர்கள் புரிந்து கொள்­வது நன்று. நாவ­லா­சி­ரி­யரின் இம்­மு­யற்­சி­யா­னது அமெ­ரிக்க, லத்தீன் அமெ­ரிக்க கறுப்பிலக்கியவாதிகளின் முயற்சிக்கு சமமானதாக அடையாளம் காண முடிகின்றது. அமெரிக்க  இலத்தீன் அமெரிக்க படைப்பிலக்கியவாதிகள் தமது மூதாதையர் கள் எவ்வாறு காலனியாதிக்கவாதிகளினால் அடிமைகளாக குடியமர்த்தப்பட்டனர் என் பதை இலக்கியங்களாக படைத்து வருகின் றனர். 


அந்தவகையில் மு.சி.கந்தையாவும் அவ்வாறான முயற்சியில்  ஈடுபட்டு  இந் நாவலை வெளிக்கொணர்ந்திருப்பது பாராட் டுக்குரியதாகும். இந்நாவல் இலங்கை மற் றும் இந்தியாவில் வாழும் மலையக மக்களது உரிமை தொடர்பாக குரல் எழுப்பும் அனை வரினதும் கையில் இருக்க வேண்டிய நூலா கும். ஏனெனில் இந்நாவல் மலையக மக்கள் என்ற இனப்பிரிவினர் எவ்வாறான உரிமை மறுப்புகளுக்கு ஆளாகியுள்ளனர் மற்றும் இரு க்கின்றனர் என்பதை கதையாக கூறுகின்றது.

-பெ.முத்­து­லிங்கம்