You are here : Astrology

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




குருவால் உங்களுக்கு பொற்­காலம் பிறக்­கும்

2019-08-12


குரு­ப­கவான் விருச்­சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இன்னும் சில மாதங்­களில் பெயர்ச்சி அடை­யப் ­போ­கிறார். வாக்­கி­யப் ­பஞ்­சாங்­கப்­படி குருப்­பெ­யர்ச்சி ஒக்­டோபர் 29ஆம் திக­தியும், திருக்­க­ணிதப் பஞ்­சாங்­கப்­படி நவம்பர் 5ஆம் திக­தியும் நிகழ்­கி­றது. விருச்­சிக குருவால் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் பொரு­ளா­தார வளர்ச்சி, திரு­மணம், புத்­தி­ர­பாக்­கியம் வேண்­டுவோர் இந்த குருப்­பெ­யர்ச்­சியை ஆவ­லுடன் எதிர்­பார்த்­துக் ­கொண்­டி­ருக்­கின்­றனர். கடந்த பல வரு­டங்­க­ளா­கவே கண்ணீர், துயரம், வேத­னை­களை அனு­ப­வித்து வரும் தனுசு ராசிக்­கா­ரர்­க­ளுக்கு துய­ரங்கள் தீரும் காலம் வந்து விட்­டது. ஜென்ம குரு வரப்­போ­கி­றதே என்று கவ­லைப்­பட வேண்டாம். ஜென்ம குரு வரும் போது புத்­தியில் தடு­மாற்றம் ஏற்­படும் என்­பது உண்­மைதான்.

காரணம் இராம­ருக்கு ஜென்­மத்தில் குரு இருந்த போதுதான் இராமர் பட்டம் துறந்து வன­வாசம் சென்­றதும் சீதையை பிரிந்து தவித்­ததும் நடந்­தது. தனுசு ராசிக்­கா­ரர்­க­ளுக்கு ஜென்­மத்தில் குரு அமர்­வது தீது செய்­யாது. காரணம் குருவின் வீடு தனுசு ராசி. சொந்த வீட்டில் குரு அமரும் போது நன்­மை­களை மட்­டுமே செய்வார். குரு பகவான் உங்­க­ளுக்கு கை கொடுக்க வந்து விட்டார். ஜென்ம சனி, ஜென்ம கேது, களத்­திர ராகு என பிரச்­சி­னை­களை அனு­ப­விப்­ப­வர்­க­ளுக்கு குரு நன்மை செய்வார். மனதில் இருந்த எதிர்­மறை எண்­ணங்­களை தடுத்து தன்­னம்­பிக்­கையை அதி­க­ரிப்பார். கட­வுளே இல்லை என்று வெறுத்­துப்­போ­ன­வர்­க­ளுக்கு கூட குரு­ப­கவான் கடவுள் பற்­றிய நம்­பிக்­கையை தருவார். இந்த குருப் பெயர்ச்சி காலத்தில் தனுசு ராசிக்­கா­ரர்­க­ளுக்கு வேலை வாய்ப்பு, கல்வி, திரு­மணம், குழந்தை பாக்­கியம் எப்­படி இருக்­கி­றது என்று பார்க்­கலாம்.


குரு பகவான் ஜென்ம ராசியில் அமர்­கிறார். சொந்த வீடான தனுசு ராசியில் குரு அமர்­வது பொற்­கா­ல­மாக இருக்­கப்­போ­கி­றது. ஜென்ம குரு சீரைக்­கு­லைக்கும் என்­பார்­களே. குரு தனது வீடான தனுசு மீனம் ராசி­களில் அமரும் காலத்தில் எ ந்த கெடு­தலும் செய்­ய­மாட்டார். தனுசு ராசிக்­கா­ரர்­க­ளுக்கு இது மகிழ்ச்­சி­யான குரு பெயர்ச்­சி­யாக அமை­யப்­போ­கி­றது. எல்­லை­யில்­லாத வெற்­றி­களைத் தருவார். 
குரு பக­வானால் மறக்க முடி­யாத கால­மாக அமை­யப்­போ­கி­றது. வெயிலின் அருமை நிழலில் தெரியும். ஏழரை சனியால் படாத பாடு பட்­டுக்­கொண்­டி­ருக்­கி­றீர்கள். ஜென்ம குரு உங்­க­ளுக்கு நன்­மை­களைத் தருவார். வேலையில் பல­ருக்கு பிரச்­சினை ஏற்­பட்­டது. குடும்ப வாழ்க்­கையில் திண்­டாட்டம் ஏற்­பட்­டது. சிக்­கல்­க­ளுக்கு விடி­வு­காலம் எப்­போது வரும் என்று ஏங்­கித் ­த­வித்த உங்­க­ளுக்கு மிகப்­பெ­ரிய சந்­தோஷம் வரப்­போ­கி­றது.


குரு பகவான் ஓயாமல் உழைக்க வைப்பார். உழைக்க தயங்­கா­தீர்கள். நல்ல வேலை கிடைக்கும். ஊதிய உயர்­வுடன் புதிய வேலை கிடைக்கும். இதுநாள் வரை வேலை­களில் வேலை செய்யும் இடங்­களில் இருந்து வந்த பிரச்­சி­னைகள் தீரும். வீடு, மனை சொத்து சுகங்­க­ளிலும் வேத­னைதான் ஏற்­பட்­டது. வேத­னைகள் முடியும் காலம் வந்து விட்­டது. வியா­பாரம் விருத்­தி­யாகும். பதவி பட்­டங்கள் தேடி வரும். நோய்கள் தீரும் எதி­ரிகள் தொல்­லைகள் தீரும். தொழிலில் இருந்த பிரச்­சி­னைகள் தீரும்.


கடந்த காலங்­களில் வரு­மானம் தடை கடு­மை­யான செல­வுகள் வீண் விரயம் ஆகி­யவை கடும் மனக் கஷ்­டத்தைக் கொடுத்­தது. குருவின் பார்வை படும் 5, 7, 9, ஆகிய ஸ்தானங்கள் வலு­வ­டைய போகி­றது. ஐந்தாம் பாவத்தை கோசார குரு பார்த்தால் உயர்­ப­தவி கிடைக்கும், புது முயற்­சிகள் கை கூடும். குடும்­பத்தில் சுப­கா­ரியம் நடக்கும்.
இது வாழ்க்­கையில் முன்­னேற்­றத்தைத் தரக்­கூ­டிய குருப்­பெ­யர்ச்சியாக அமை­யப்­போ­கி­றது. குரு பகவான் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டை பார்­வை­யி­டு­கிறார். கணவன் மனைவி உறவு உற்­சா­க­ம­டையும். உயர்­கல்­வியை படிக்க ஆர்வம் அதி­க­ரிக்கும். குழந்தை பாக்­கியம் இல்­லாமல் கஷ்­டப்­பட்­ட­வர்­க­ளுக்கு குழந்தை பாக்­கியம் கிடைக்கும். பிள்­ளை­க­ளினால் ஏற்­பட்ட பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு கிடைக்கும். ஆண் பிள்­ளைகள் இல்­லா­த­வர்­க­ளுக்கு ஆண் குழந்­தைகள் பிறக்கும் எல்லா கன­வு­களும் பூர்த்­தி­யாகும்.
குருவால் எந்த பிரச்­சி­னை­க­ளையும் தனி­யாக சந்­தித்து சாதிப்­பீர்கள். சங்­க­டங்­களை தீர்த்து பலத்தை அதி­க­ரிப்பார். பிரச்­சி­னை­களை தீர்க்க நல்ல மனி­தர்­களின் நட்பு கிடைக்கும். மன காயங்­க­ளுக்கும், உடல் காயங்­க­ளுக்கும் மருந்­தாக அமையும். உங்கள் ராசிக்கு ஏழாம் வீடான களத்­திர ஸ்தானத்தை குரு பார்­வை­யி­டு­கிறார். குரு பார்­வையால் குடும்பம் குதூ­க­ல­ம­டையும். குருவின் பார்வை படும் இடங்கள் எல்லாம் சுப பலன்கள் கிடைக்கும்.


பாக்கிய வீட்டின் மீது குரு பார்வை விழுகிறது. 9 ஆம் வீட்டை குருபார்த்த பலன் சகல பாக்கியத்தையும் நீங்க அடைய போவது உறுதி. அன்பும் ஆதரவும் கிடைக்கும். நான்கு ஆண்டுகளில் பட்ட பாட்டிற்கு பலனாக தைரியம், தன்னம்பிக்கை தரக்கூடிய குருவாக உங்கள் ஜென்ம ராசியில் குரு அமர்கிறார். புதன் கிழமை பெருமாள் கோயிலுக்கு சென்று துளசி மாலை சாற்றுங்கள். அதே போல் ஹயக்ரீவரையும் வழிபாடு செய்யலாம்.