You are here : Astrology

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




பெண்­க­ளுக்கு பெருமை தரும் நட்­சத்­தி­ரங்கள் பாகம் 02

2019-09-09


http://kalaikesari.lk/article.php?category=Astrology&num=4591 (தொடர்ச்சி) 


அனுஷம் நட்­சத்­தி­ர­மு­டைய பெண்­க­ளுக்கு வாழ்­வியல் சிறப்பு நிறை­வாக அமையும் பல­னுண்டு. நட்­சத்­திர அதி­பதி சனீஸ்­வரன் ராசி ­அ­தி­பதி செவ்வாய் ராசி நிலை குடும்­பஸ்­தான அதி­பதி குரு களத்­தி­ர­கா­ரகன் சுக்­கிரன் எதையும் அமை­தி­யாக  பொறு­மை­யாக செயல்­ப­டுத்தும் ஆற்றல் இவர்­கட்கு இருக்கும். குடும்­பத்­திலே அனை­வ­ரையும் அனு­ச­ரித்து செயற்­ப­டு­கின்ற குண இயல்பு சிறப்­பாக இருக்கும். தமது குடும்ப விட­யங்­களை நேர்த்­தி­யாக கொண்டு செயற்­படும் ஆற்றல் அமைந்­தி­ருக்கும். மற்­ற­வர்­களின் மன­நி­லையை நன்கு புரிந்து செயற்­படும் நிலை­யி­ருக்கும். எண்­ணமும் செயலும் நலன் தரும் நிலையில் தமது மனோ­பாவம் கொண்டு பொறுப்­போடு செய­லாற்றும் இவர்­க­ளுக்கு இடை­யி­டையே சிறு சிறு பிரச்­சி­னைகள் சிக்கல் நிலைகள் தோன்றி மறையும். மன­தி­னிலே ஏதோ ஒரு­வகை சஞ்­சல நிலை இருந்து கொண்­டே­யி­ருக்கும்.  உடல் நிலைச்­சேர்வு நிலையம் இவர்­க­ளுக்கு இடை­யி­டையே அமையும்.
இருப்­பினும் எதையும் மிகவும் தன்­னம்­பிக்­கை­யோடு செய்யும் ஆற்­றலும் துணிவும் இவர்­க­ளிடம் அமைந்­தி­ருக்கும். குடும்­பத்­திலே பல­வி­த­மான குழப்­பங்­க­ளையும் எதிர்­கொண்டு சமா­ளித்து நேர்த்­தி­யாக செயற்­ப­டு­கின்ற ஆற்றல் கொண்­டி­ருப்­பார்கள்.   ஏதோ ஒரு­வ­கை­யிலே இவர்­க­ளுக்கு ஆத­ரவும் உத­வியும் அமைந்த வண்ணம் இருக்கும். 


நல்ல தெய்வ பக்­தி­யோடு செயற்­ப­டு­கின்ற குணம் இருப்­பினும் நேர்­மை­யாக  வெளிப்­ப­டை­யாக எதையும் பேச முடி­யா­த­வர்­க­ளாக எல்­லா­வற்­றையும் சமா­ளித்து செயற்­ப­டு­கின்ற குண இயல்பை கொண்­டி­ருப்பர். இதனால் பல­வி­த­மான  பிரச்­சி­னை­களை எதிர்­கொள்ளும் நிலையும் இவர்­க­ளுக்கு உண்டு. இருப்­பினும் வாழ்வில் வெற்றி பெறுவர்.


உத்­த­ராடம்
நட்­சத்­தி­ர­மு­டைய பெண்கள் மிகவும் வெளிப்­ப­டை­யான பேச்சும் குண இயல்பும் கொண்டு செயற்­ப­டு­ப­வர்கள்.  சுறு­சு­றுப்­பாக இயங்கி கொண்டு செயற்­படும் இவர்­களின் குடும்ப வாழ்வில் நல்ல நிர்­வா­கத்­திறன் கொண்டு செயற்­ப­டு­வார்கள். மற்­ற­வர்­களின் மன­நிலை புரிந்து செயற்­படும் குணமும் இருக்கும்.  யாராக இருந்­தாலும் தமது சில குண இயல்பை விட்­டுக்­கொ­டுக்க மாட்­டார்கள்.


அதே­நேரம் தமது குடும்­பத்தை நிறை­வாக பார்த்துக் கொள்ளும் குண இயல்பை பெற்­றி­ருப்­பார்கள். இவர்­களின் நட்­சத்­திர அதி­பதி சூரியன் ராசி அதி­ப­தி­யாக குரு, சனி அமை­கின்­றனர். களத்­தி­ரஸ்­தான அதி­ப­தி­யாக புதன், சந்­திரன் அமை­கின்­றனர்.
எதையும் மிகவும் நேர்த்­தி­யாக செய்யக்­கூ­டிய ஆற்றல் அமைந்­தி­ருக்கும். குடும்ப நிலையில் தமது ஆளு­மையை நிலை நிறுத்தி செயற்­படும் தன்­மை­யி­ருக்கும். நல்ல  விட­யங்­களில் ஈடு­பாடு கொள்ளும் குண­மி­ருக்கும். எல்­லோ­ருக்கும் உதவி செய்யும் மனப்­பாங்கு அதி­க­மாக இருக்கும். தன்­னு­டைய குடும்பம் எனும் அதி­க­மான பற்­றுதல் இருக்கும். பொது­வாக இவர்­களின் குடும்ப வாழ்வு எப்­படி அமைந்­தாலும் அதை ஏற்று செயற்­படும் தன்­மையைக் கொண்­டி­ருப்­பார்கள்.


மனதில் தைரி­ய­மான போக்கும் வாதி­டு­கின்ற திறனும் மிக அதி­க­மாக  அமைந்­தி­ருக்கும். எந்த நிலை­யிலும் தமது மன தைரி­யத்தை விடாமல் செயற்­ப­டு­கின்ற நிலை இவர்­க­ளிடம் மிக அதி­க­மாக அமைந்­தி­ருக்கும். எதையும் வெற்றி கொள்ளும் எண்ணம் மேலோங்கி இருக்கும். மனதை அமை­தி­யாக வைத்­தி­ருக்கும் குண இயல்பு இவர்­க­ளிடம் மிகவும் குறை­வா­கவே காணப்­படும். நல்ல சுறு சுறுப்பும் தொட­ரான  உழைப்பும் அதிகம் கொண்டு செயற்­பட்டு வாழ்வில் வெற்றி பெறுவர்.


திரு­வோ­ணம் ஆளு­மை­யான குண இயல்பு அதிகம் கொண்ட இந்த நட்­சத்­திரப் பெண்கள் எதையும் சாதிக்­கின்ற ஆற்றல் கொண்­ட­வர்கள். நிறைந்த உழைப்­பா­ளிகள் மனதில் அதி­க­மான தைரியம் கொண்­ட­வர்கள். இவர்­களின் நட்­சத்­திர அதி­பதி சந்­திரன் ராசி அதி­பதி சனீஸ்­வரன் இவர்­களின் குடும்ப ஸ்தான அதி­ப­தியும் சனீஸ்­வரன் களத்­தி­ரஸ்­தான அதி­பதி சந்­திரன். எனவே குடும்ப நிலையில் இவர்­களின் மன­தி­ருப்­திக்கு ஏற்­றது போல் குடும்ப வாழ்வு அமையும் நிலை மிகவும் குறைவே. இருப்­பினும் எதையும் சமா­ளித்து தங்கள் குடும்­பத்தை தமது கட்­டுப்­பாட்­டுக்குள் வைத்து செயற்­ப­டு­கின்ற குண இயல்பு கொண்ட பெண்­க­ளாக திகழ்­வார்கள்.


பிறந்த வீட்­டிலும் சரி, புகுந்த வீட்­டிலும் சரி மிகவும் சாது­ரி­ய­மாக செயற்­பட்டு தங்கள் இருப்பை மிகவும் முதன்­மை­யா­ன­தாக வைத்துக் கொள்­வார்கள். தாம் நினைக்கும் விட­யங்­களை சாதித்து விடும் ஆளுமை இவர்­களின் தனித்­து­வ­மாகும்.  பொது­வா­கவே தங்­களின் தகை­மை­களை குறைந்து போக விடவே மாட்­டார்கள். தமக்­கு­ரிய தகு­தியை தக்கவைத்துக் கொள்ளும் ஆற்றல் இவர்­களின் தனித்­து­வ­மா­ன­தாகும். மனதில் புதிய சிந்­த­னை­களை கொண்டு வாழ்வின் உயர்வை மெரு­கேற்றிக் கொள்­வார்கள்.  தமது கணவர்,  பிள்­ளைகள் உயர்வில் மிகவும் அக்­கறை கொண்டு செயற்­ப­டுவர். ஏழ்­மை­யான குடும்­பத்தில் இருந்­தாலும் மிகவும் வச­தி­யான  குடும்­பத்தில் இருந்­தாலும் அந்த நிலைக்கும் தகு­திக்கும் ஏற்றாற் போல் தம்மை பக்­கு­வப்­ப­டுத்திக் கொண்டு செயற்­ப­டு­வார்கள். குடும்­பத்தில் பெரும் உயர்வு நிலை கொண்டு வரு­வ­தற்­காக தமது உடல் உழைப்­பையும் மிகவும் சிறப்­பாக வாரி வழங்­கு­வார்கள். எல்லா வகை­யிலும் முன்­னின்று முயற்சி செய்து வாழ்வில் முன்­னிலை பெறு­வார்கள்.
அவிட்டம்  நட்­சத்­தி­ர­மு­டைய பெண்­க­ளுக்கு ஒரு­வகை அதிர்ஷ்டம் வந்து அமைந்து விடும். எதிர்­பா­ராத வகை சிறப்பும் நன்­மையும் அமையும் நிலை சிறப்­புற இருக்கும். நட்­சத்­திர அதி­பதி செவ்வாய், ராசி அதி­பதி சனீஸ்­வரன், ராசி நிலை குடும்ப ஸ்தான அதி­பதி சனி, குரு கிர­கங்கள் தங்­களின் தேவை­களை திட்டம் போட்டு செயற்­ப­டுத்தும் ஆற்றல் கொண்ட இவர்கள் தொடர்ந்து அய­ராது தமது செயற்­பாட்­டு­க­ளுக்­காக உழைக்கும் உழைப்­பா­ளி­க­ளாக இருப்­பார்கள்.  குடும்ப வாழ்வும் இவர்­க­ளுக்கு மிகவும் அதிர்ஷ்­ட­க­ர­மா­ன­தாக அமையும். எதையும் துணி­வோடு எதிர்­கொள்ளும் இயல்பை கொண்ட இவர்கள் தம் நிலை­க­ளுக்கு ஏற்­பு­டை­யதாய் மனதை மாற்றிக்  கொள்­வார்கள். குடும்ப நிலையில் சற்று போராட்ட நிலை இவர்­க­ளுக்கு அமைந்­தி­ருந்­தாலும் சமா­ளித்து செயற்­படும்  ஆற்றல் கொண்­ட­வர்­க­ளாக இருப்­பார்கள். அத்­தோடு இவர்­களின் களத்­தி­ரஸ்­தான கிர­கங்­க­ளாக சந்­திரன், சூரியன் கிர­கங்கள் அமை­கின்­றன. எனவே சஞ்­ச­ல­மான சிறு சிறு போராட்ட நிலை அமைந்­தி­ருக்கும். இருந்­த­போதும் இயற்­கை­யாக இவர்­க­ளுக்கு ஏதோ ஒருவகையில் அனு­கூ­ல­மான நன்­மைகள் அமையும்  நிலை அமைந்­தி­ருக்கும்.  தமது எண்­ணங்­க­ளிலும் செயற்­பா­டு­க­ளிலும் சற்று சஞ்­ச­லத்­தன்­மை­யோடு இருப்­பார்கள். தமது நன்மை செயல் என்பனவற்றிற்கு அமைய, தம் செயல்களை அமைத்து வெற்றி காணும் சாணக்கியம் அதிகமாக இவர்களிடம் இருக்கும். பிறந்த வீட்டிலும் புகுந்த வீட்டிலும் சுகபோகமாக வாழும் நிலைகள் இவர்களுக்கு அமைந்திருக்கும் நிலையிருக்கும். எதையும் எதிர்கொண்டு வாழ்கின்ற திறன் பெற்று வாழ்வில் நன்மை பெறுவர். 

   -கலா­நிதி -  துன்­னையூர்
   ராம் தேவ­லோ­கேஸ்­வரக் குருக்கள் 

            
  (தொடரும்)