You are here : Astrology

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS
குருப்­பெ­யர்ச்சி பொதுப்பலன்

2019-10-28


மேடம் :

அச்­சு­வினி, பரணி, கார்த்­திகை முதற்கால் நட்­சத்­தி­ரங்­களில் பிறந்த மேட ராசி­யினர் ஒரு அதிர்ஷ்­டக்­கா­ரர்­க­ளா­கவே அமைவர். இது­வரை காலமும் எட்டாம் வீட்­டி­லி­ருந்து எட்டிப் பார்த்த குரு­வா­னவர் ஒன்­பதாம் வீட்­டுக்கு அதுவும் அவ­ரது சொந்த வீடான ஆட்சி வீட்­டுக்கு வரு­வது மிகவும் நன்­மைக்­கு­ரி­ய­தா­கவே அமையும். தொழில் நிலையில் முன்­னேற்றம், பொரு­ளா­தார நன்­மைகள் ஏற்­படும். அரச தொழிலில் உள்­ள­வர்கள் பதவி உயர்­வினை பெற்று மன­திற்­கி­னிய இட­மாற்­றத்­தி­னையும் பெறுவர். மாண­வர்கள் கல்­வியில் சிறப்­ப­டைவர். திரு­மணம் ஆகா­த­வர்­க­ளுக்கு திரு­மணம் நடை­பெறும். அர­சி­யலில் உள்­ள­வர்கள் அமோ­க­மாக செயற்­பட்டு வெற்றி பெறுவர். விவ­சா­யிகள், வியா­பா­ரிகள் கூடு­த­லான முத­லீ­டு­களால் நல்ல பலா­ப­லன்­களை பெற்று மகிழ்ச்­சி­ய­டைவர். மேட ராசி­யி­ன­ருக்கு மிகவும் மகிழ்ச்­சியைக் கொடுப்­ப­வ­ரா­கவே குரு அமைவார்.

 

இடபம் :

கார்த்­திகை பின்­முக்கால், ரோகிணி மிருக சீரி­டத்து முன்­ன­ரையில் பிறந்த இடப ராசி­யி­ன­ருக்கு இது­வரை ஏழாம் வீட்­டி­லி­ருந்து நன்­மை­களை செய்ய குரு­வா­னவர் முற்­பட்­ட­போ­திலும் அட்­ட­மத்து சனியின் பார்­வை­யினால் அவ­ரது நற்­ப­லன்­களில் தடைகள் ஏற்­பட்டு மறைந்­தாலும் எட்டாம் வீடு என்று ஏக்கம் கொள்ளத் தேவை­யில்லை. தனது ஆட்சி வீட்­டி­லி­ருந்து உங்கள் வீட்டை பார்ப்­பதால் நன்­மை­களை செய்வார். தொழிலில் ஓர­ளவு மந்­த­நிலை தோன்றி மறையும். பொரு­ளா­தாரம் போது­மா­ன­தாக இல்­லா­விட்­டாலும் கடன் வாங்கும் நிலைக்கு தள்ள மாட்டார். அரச தொழிலில் உள்­ள­வர்கள் அமை­தி­யாக கட­மையில் ஈடு­பட்டு நற்­பெயர் பெறுவர். மாண­வர்­களின் கல்­வியே மேலோங்கும். அர­சி­யலில் உள்­ள­வர்கள் சிந்­தித்து செய­லாற்றி வெற்றி பெறுவர். விவ­சா­யிகள், வியா­பா­ரிகள் கூடு­த­லான முத­லீ­டு­களை தவிர்த்து அள­வுடன் வைத்துக் கொண்டால் எந்­த­வித பாதிப்பும் ஏற்­ப­டாது. இடப ராசி­யினர் அட்­ட­மத்து வியாழன் என்று அலட்டிக் கொள்­ளாமல் கரு­ம­மாற்­று­வது நன்மை தரும்.

 

மிதுனம் :

மிரு­க­சீ­ரி­டத்து பின்­னரை, திரு­வா­திரை புனர் பூசத்து முன்­முக்கால் நட்­சத்­தி­ரங்­களில் பிறந்த மிதுன ராசி­யி­ன­ருக்கு கடந்த ஒரு வரு­ட­மாக ஆறாம் வீட்­டி­லி­ருந்து ஆறி­யி­ருந்த குரு பகவான், ஏழாம் வீட்­டுக்கு வரு­வது மிகவும் எழுச்சி மிகுந்த கால­மா­கவே அமையும். தொழில் நிலை கஷ்­டங்கள் தீர்ந்து முன்­னேற்றம் ஏற்­படும். பண­வ­ரவு திருப்­தி­க­ர­மாக அமையும். எதையும் திட்­ட­மிட்டு செய்தால் நன்மை உண்­டாகும். அரச தொழிலில் உள்­ள­வர்கள் பதவி மாற்றம், உயர்ச்­சி­யினை பெற்று மகிழ்­வ­டைவர். குடும்­பத்தில் மகிழ்ச்சி நிலவும். மாண­வர்கள் கல்­வியில் மேலோங்கி பரீட்­சையில் வெற்றி பெறுவர். அர­சி­யலில் உள்­ள­வர்கள் பல­வித நன்­மை­க­ளையும் அடைவர். விவ­சா­யிகள், வியா­பா­ரிகள் கூடிய ஆதாயம் அடைந்து சொத்­துக்கள் சேர்ப்பர். மிதுன ராசி­யி­ன­ருக்கு குரு பார்வை கூடு­த­லா­கவே அமைந்து மகிழ்ச்­சியைக் கொடுப்பார்.

 

க­டகம்

புனர்­பூ­சத்து நாலாங்கால், பூசம், ஆயி­லியம் நட்­சத்­தி­ரங்­களில் பிறந்த கர்க்­க­டக ராசி­யி­ன­ருக்கு இது­வ­ரையும் ஐந்தாம் வீட்­டி­லி­ருந்த குரு பகவான் ஆறாம் வீட்­டிற்கு வந்­தாலும் அவ­ரது ஆட்சி வீட்டில் இருந்து கொண்டு உச்ச வீடான உங்கள் ராசியைப் பார்ப்­பதால் ஐந்தாம் வீட்டில் இருந்­ததை விட பல மடங்கு நன்­மை­களை குரு செய்வார். தொழில் மிகவும் சிறந்து விளங்கும். பொரு­ளா­தார நன்மை கூடு­த­லாக அமையும். குடும்­பத்தில் மகிழ்ச்­சிக்­கு­ரிய சம்­ப­வங்கள் நடந்­தேறும். மாண­வர்­களின் கல்வி நிலை சிறந்து விளங்கி பரீட்­சை­களில் நல்ல பெறு­பே­று­களை பெறுவர். அர­சி­யலில் உள்­ள­வர்கள் எதிர்­பார்த்த பதவி வந்து சேரும். அரச தொழிலில் உள்­ள­வர்­களின் எதிர்­பார்ப்­புகள் நிறை­வேறி மகிழ்ச்சி தரும். விவ­சா­யிகள், வியா­பா­ரிகள் கூடு­த­லான இலாபம் பெறுவர். குரு எந்­த­வித பாதிப்பும் தராது.

 

சிம்மம் :

மகம், பூரம், உத்­த­ரத்து முதற்கால் நட்­சத்­தி­ரங்­களில் பிறந்த சிங்க ராசி­யி­ன­ருக்கு கடந்த ஒரு வரு­ட­கா­ல­மாக நான்காம் வீட்­டி­லி­ருந்து நாடி பிடித்து பார்த்த குரு பகவான், ஐந்தாம் வீட்­டிற்கு வரு­வது மிகவும் ஐஸ்­வ­ரி­யத்தை கொடுத்து பல­வித நன்­மை­களை செய்வார். இது­வரை தொழிலில் இருந்து வந்த தொல்­லைகள் நீங்கும். பண­வ­ரவும் தாரா­ள­மாக கிடைக்கும். குடும்­பத்தில் சந்­தோஷம் நிலவும். பிள்­ளை­களால் இது­வரை இருந்து வந்த தொல்­லைகள் நீங்கும். மாண­வர்­க­ளுக்கு சிறந்த உயர் கல்வி வாய்ப்பு ஏற்­படும். பரீட்­சை­களில் நல்ல பெறு­பே­று­களைப் பெறுவர். அர­சி­யலில் உள்­ள­வர்கள் புதிய பத­வி­களை பெற்று மன­நி­றைவு பெறுவர். அரச தொழில் உள்­ள­வர்­க­ளுக்கு எதிர்­பார்த்த பதவி உயர்­வுகள் கிடைக்கும். விவ­சா­யிகள், வியா­பா­ரிகள் மகிழ்ச்­சி­யுடன் செயற்­பட்டு நல்ல வரு­மானம் பெற்று உயர்­வ­டைவர். சிங்க இரா­சி­யி­ன­ருக்கு குருவின் பார்வை, கோடி நன்­மை­களை தரக்­கூ­டி­ய­தாக அமையும்.

 

கன்னி

உத்­த­ரத்துப் பின்­முக்கால், அத்தம், சித்­தி­ரையின் முன்­ன­ரையில் பிறந்த கன்னி ராசி­யி­ன­ருக்கு இது­வரை மூன்றாம் வீட்­டி­லி­ருந்த குரு பகவான் நான்காம் வீட்­டுக்கு வரு­வது நன்­மைக்­கு­ரி­ய­தா­கவே அமையும். கடந்த ஒரு வருடம் இருந்­ததை விட பல­வித நன்­மை­க­ளையும் கொடுக்கக் கூடி­ய­தற்­கான தனது ஆட்சி வீடான தனுசு ராசிக்கு வரு­வது கன்னி ராசி­யி­ன­ருக்கு மிகவும் அதிர்ஷ்டம் என்றே கூறலாம். தனது வீட்­டி­லி­ருந்து தனது புதன் வீடான கன்னி ராசியை அவர் பார்ப்­பதால் தொழிலில் சிறந்த நிலையும், பொரு­ளா­தா­ரமும் சிறந்து காணப்­படும். குடும்­பத்தில் மகிழ்ச்சி நிலவும். உற­வி­னர்­களின் ஒத்­தா­சைகள்  கிடைக்கும். மாண­வர்கள் எதிர்­பார்த்த கல்வி கிடைத்து மகிழ்ச்­சி­ய­டைவர். அரச தொழிலில் உள்ளோர் கவ­லை­யில்­லாமல் தமது கட­மை­யினைச் செய்து நற்­பெயர் பெறுவர். அர­சி­யலில் உள்­ள­வர்கள் கூடிய விழிப்­புடன் செய­லாற்றும் திறனை கொடுப்பார். விவ­சா­யிகள், வியா­பா­ரிகள் இலாபம் பெறுவர். கன்னி ராசி­யி­னரை கலக்கம் அடை­யாமல் பாது­காத்து கரு­மங்­களை செய்ய வழி சமைப்பார்.

 

 துலாம் 

சித்­தி­ரையின் பின்­னரை சுவாதி விசா­கத்து முன்­முக்கால் நட்­சத்­தி­ரங்­களில் பிறந்த துலா ராசி­யினர் இது­வரை இரண்டாம் வீட்­டி­லி­ருந்து இலட்­சுமி கரம் நீட்­டிய குரு பகவான் மூன்றாம் வீட்­டிற்கு வந்து விட்டார் என்று முகம் சுளிக்­கத்­தேவை யில்லை. அவ­ரது பார்வை எப்­போதும் உங்­க­ளுக்கு உண்டு. குரு தனது சொந்த வீட்­டிற்கு செல்­வதால் நன்­மையே செய்வார். தொழிலில் மிகவும் அவ­தா­னத்­துடன் செயற்­ப­டு­வது நன்மை தரும். பண விட­யங்­களில் அவ­தானம் தேவை. குடும்­பத்தில் முரண்­பா­டுகள் தவிர்த்து, விட்டு கொடுத்து நடப்­பது நன்மை தரும். பிள்­ளை­களால் தொல்­லைகள் ஏற்­பட்டு மறையும். மாண­வர்கள் கல்­வியில் கூடிய கவனம் கொள்­வது நல்­லது. அரச தொழில் புரி­ப­வர்கள் மேல­தி­கா­ரி­க­ளுடன் இணைந்து செய­லாற்­று­வது நல்­லது. அர­சி­யலில் உள்­ள­வர்கள் அற்ப சலு­கை­களைப் பெறுவர். விவ­சா­யிகள், வியா­பா­ரிகள் மத்­திம லாபம் பெற்று மகி­ழச்­சி­ய­டைவர். துலாம் இரா­சி­யினர் துயரம் கொள்ளத் தேவை­யில்லை.

 

விருச்­சிகம் :

விசா­கத்து நாலாங்கால் அனுஷம், கேட்டை நட்­சத்­தி­ரங்­களில் பிறந்­த­வர்­க­ளுக்கு இது­வரை இரா­சியில் இருந்து ஓர­ளவு நன்மை தந்த குரு­வானர் இரண்டாம் வீட்­டிற்கு செல்­வது மிகவும் சிறந்த நற்­பெ­யர்­களை தந்து மகிழ்­வ­டையச் செய்வார். தொழிலில் எதிர்­பார்ப்பு நிறை­வேறும். பொரு­ளா­தாரம் மேலோங்கும். குடும்­பத்தில் இது­வரை இருந்து வந்த பணக்­கஷ்­டங்கள் தீரும். பிள்­ளை­களால் மன மகிழ்ச்சி ஏற்­படும். எதிர்­பார்த்த பல விட­யங்கள் நிறை­வேறி குடும்­பத்தில் மகி­ழ்ச்­சியை தரும். மாண­வர்­க­ளுக்கு சிறந்த பெறு­பே­று­களும், உயர் கல்­வியும் கிடைக்கும். அரச தொழில் செய்வோர் பதவி, உயர்­வு­க­ளுடன் மனத்­திற்­கி­னிய இட­மாற்­றத்­தி­னையும் பெறுவர். அர­சி­யலில் உள்­ள­வர்கள் கூடிய நன்­மை­களைப் பெற்று உயர்­வ­டைவர்.  

 

தனுசு :

 மூலம், பூராடம் உத்­த­ராடம் முதற்கால் நட்­சத்­தி­ரங்­களில் பிறந்த தனுசு ராசிக்­கா­ரர்கள் மிகவும் யோக­மு­டை­ய­வர்­க­ளாவர். இவர்­க­ளது இரா­சிக்கே வியாழன் வந்து ஆட்சி செலுத்­து­வதால் எதிர்­வரும் ஒரு வருட காலம் மட்­டு­மல்ல அடுத்து வரும் இரண்­டா­மி­டமும் சேர்ந்து இவர்­களை அதிர்ஷ்­ட­சா­லி­க­ளாக திகழ வைத்து விடும். குரு­வுக்கு தனுசும், மீனமும் ஆட்சி வீடா­னதால் தனுசு ராசிக்­காரர் எந்­த­வித இடை­யூறும் இன்றி கரு­மங்கள் ஆற்றி வெற்றி பெறும் தன்­மைக்கு குரு வந்­துள்ளார். தொழிலில் வெற்­றியும், சுபிட்­சமும் ஏற்­படும். பொரு­ளா­தாரம் மிகவும் சிறந்து விளங்கும்.  எதிர்­பார்த்த கரு­மங்கள் யாவும் சுமு­க­மாக முடி­வுற்று மன மகிழ்ச்­சியைத் தரும். குடும்­பத்தில் சந்­தோஷம் நிலவும். திரு­ம­ண­மா­கா­த­வர்கள் நல்ல திரு­மண வாய்ப்­பினை பெறுவர். மாண­வர்­க­ளுக்கு உயர்ந்த நிலை கல்வி கிடைக்கும். அரச தொழில் செய்வோர் உயர்ந்த நிலை பத­வி­யினைப் பெறுவர். அர­சி­யலில் உள்ளோர் அல்­லது அதில் பிர­வே­சிப்­ப­வர்கள் அளப்­ப­ரிய வெற்­றியை  பெறுவர். விவ­சா­யிகள் வியா­பா­ரிகள் கூடிய முத­லீ­டு­க­ளையும் லாபத்தையும் பெற்று மன மகிழ்ச்சி கொள்வர். தனுசு ராசி­யினர் மிகுந்த செல்­வாக்கும் உயர்வும் அடைய குரு வழி­ச­மைக்கும்.

 

மகரம் :

உத்­த­ரா­டத்து பின்­முக்கால் திரு­வோணம் அவிட்­டத்து முன்­னரை நட்­சத்­தி­ரங்­களில் பிறந்த மகர ராசி­யி­ன­ருக்கு இது­வரை பதி­னோராம் வீட்­டி­லி­ருந்து நன்­மை­களை செய்த குரு பன்­னி­ரெண்டாம் வீட்­டிற்கு வந்­துள்­ளது என மனக்­க­லக்கம் கொள்ளத்  தேவை­யில்லை. பக்­கத்து வீட்­டில்­இ­ருந்து உங்­களை கவ­னித்துக் கொள்வார்.  தொழிலில் இடை­யூ­றுகள் வந்­தாலும் சமா­ளிக்கும் திறமை ஏற்­படும். நன்­மை­யான காரி­யத்தின் பொருட்டு செல­வுகள்  உண்­டாகும். பணக்­கஷ்டம் இருந்­தாலும் சமா­ளிக்கும் திறன் ஏற்­படும். குடும்­பத்தில் வீண் சச்­ச­ர­வு­களை தவிர்த்து கொள்­வது நன்று. மாண­வர்கள் கல்­வியில் கூடிய கவனம் எடுப்­பது நன்மை தரும். உத்­தி­யோ­கத்தில் உள்­ள­வர்கள்  பொறு­மை­யுடன் கட­மை­களை செய்­வ­துடன் யாரி­டமும் உங்கள் பொறுப்­பு­களை ஒப்­ப­டைப்­பதை தவிர்த்து நடக்­கவும் அர­சி­யலில் உள்­ள­வர்­க­ளுக்கு மனக்­கஷ்­டங்­களைத் தந்து பின்னர் நன்மை தருவார். சிலர் பத­வி­களை விட்டு விலக நேரிடும். விவ­சா­யிகள் வியா­பா­ரிகள் கூடிய முத­லீ­டு­களை தவிர்த்து அள­வுவுடன் வைத்துக் கொள்­வது இலாபம் தரக்­கூ­டி­ய­தாக அமையும். மக­ரத்­துக்கு குரு நீசம்  பெற்­றவர் என்­பதால் பெரி­தான தீமை­களை செய்ய மாட்டார். 

 

கும்பம் :

அவிட்­டத்து பின்­னரை, சதயம், பூரட்­டாதி முன்­முக்கால் நட்­சத்­தி­ரத்தில் பிறந்த கும்­ப­ரா­சி­யி­ன­ருக்கு கடந்த ஒரு வரு­ட­மாக பத்தாம் வீட்டில் இருந்து பதற்றம் காட்­டிய குரு­வா­னவர் பதி­னோராம் வீடான இலட்­சுமி ஸ்தானத்­துக்கு வரு­வதால் மிகவும் சிறந்த நற்­ப­லன்­களை பெற்று சகல விட­யங்­க­ளிலும் சுடர்­விட்டு பிர­கா­சிப்பர். தொழிலில் உயர்வு நிலை தோன்றும். பொரு­ளா­தாரம் சிறப்­புற்று விளங்கும் குடும்­பத்தில் மகி­ழ்ச்­சியும் முன்­னேற்­றமும் ஏற்­படும். மாண­வர்கள் கல்வி நிலையில் உயர்ச்­சியும் பரீட்­சை­களில் வெற்­றியும் ஏற்­படும். அரச தொழில் புரிவோர் சிறந்த பதவி உயர்வும் மாற்­றங்­க­ளையும் பெறுவர். சிறப்­புற தொழில் புரிவர். அர­சி­யலில் உள்­ள­வர்கள் எதிர்ப்­புகள் நீங்கி புதிய பத­வி­களை பெற்று  மகிழ்ச்­சி­ய­டைவர். விவ­சா­யிகள் வியா­பா­ரிகள் கூடிய முத­லீ­டு­களால் சிறந்த இலா­ப­ம­டைவர். கும்ப இரா­சி­யி­ன­ருக்கு குதூ­கலம் தருவார் குரு.

 

மீனம் :

பூரட்­டாதி நாலாங்கால்  உத்­தி­ரட்­டாதி ரேவதி நட்­சத்­தி­ரங்­களில் பிறந்த மீன ராசி­யி­ன­ருக்கு எந்­த­வித தீமையும் செய்­யாமல் இது­வரை ஒன்­பதாம் இடத்­தி­லி­ருந்து  செய்த பலன்­க­ளை­விட தனுசு ஆட்சி வீட்­டி­லி­ருந்து நேராக உள்ள மீன ராசி­யி­னரின் ஆட்சி வீட்டைப் பார்த்து அளப்­ப­ரிய நன்­மை­களை செய்வார் குரு. தொழில் முன்னர் இருந்­ததை விட சிறப்பாக அமையும். பொருளாதாரம் சிறப்புற இருந்தாலும் இடையிடை பணக்கஷ்டம் தோன்றி மறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலவும். பிள்ளைகளால் சிலருக்கு கவலைகள் ஏற்பட்டு மறையும். மாணவர்கள் கல்வியில் மகிவும் நன்மை பெறுவர். அரச தொழில் புரிவோர் பதவி மாற்றங்களை பெற்று உயர்வடைவர். அரசியலில் இருப்பவர்கள் ஆழமாக சிந்தித்து செயலாற்றி நன்மைகளை  பெறுவர்.  விவசாயிகள், வியாபாரிகள்  கூடிய முதலீடுகளை தவிர்த்து இருப்பதைக் கொண்டு நடந்தால் கூடிய லாபம் அடைவர். மீனி ராசியினருக்கு எந்தவித கெடுதல்களும் துன்பங்களும் அடையாமல் பாதுகாத்து தேவையான கருமங்களில் வெற்றியை கொடுத்து மன மகிழ்ச்சியடைய செய்வார் குரு.