You are here : Dance

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




நான்கு சகோதரிகளின் எழில்மிகு பரதநாட்டிய அரங்கேற்றம்

April 23.2018


செல்­விகள் சினேகா மோகன்,  சிந்­துர்ஜா மோகன், சுபா­னுஜா மோகன், அட்­சயா லோகச்­சந்­திரன் ஆகி­யோ­ரது பர­த­நாட்­டிய  அரங்­கேற்றம் கடந்த  07.04.2018 அன்று மாலை, பம்­ப­லப்­பிட்டி கதி­ரேசன் மண்­ட­பத்தில் சிறப்­பாக நடை­பெற்­றது.

 நாட்­டிய கலா­மந்திர் நட­னப்­பள்ளி ஸ்தாபக  இயக்­குநர் கலா­சூரி ஸ்ரீமதி வாசுகி ஜெக­தீஸ்­வ­ரனின் மாண­வி­க­ளான இவர்­க­ளது நடன அரங்­கேற்ற நிகழ்வில் பிர­தம அதி­தி­யாக தமிழ்­நாடு, ஜெயா தொலைக்­காட்சி  “தக–­தி­மிதா”   நிகழ்ச்சி கலை இயக்­குநர்  “ஆச்­சார்ய சூடா­மணி” ராதிகா சுராஜித் கலந்து கொண்டார்.

 கௌரவ  அதி­தி­யாக  டி.ஆர்.அத்­து­ல­பிட்­டி­கல  ஆரச்சியும்  சிறப்பு  அதி­தி­யாக  திரு­மதி டில்மி ரத்­நா­யக்­கவும் கலந்து கொண்­டனர்.

 வழ­மையில்  அரங்­கேற்றம்  ஒருவர்  அல்­லது இரு­வ­ருடன்  நடை­பெ­று­வ­தா­யினும்  இந்­நி­கழ்வில் ஒரு குடும்­பத்தைச் சேர்ந்த  நான்கு  மாண­வி­களின்  நடன அரங்­கேற்­ற­மாக  காண்­போரைக்  கவ­ரும்­ப­டி­யாக  கன­கச்­சி­த­மாக நடை­பெற்று சபை­யோரைக் கவர்ந்­தது.

 மிகவும் அழகும்  கம்­பீ­ர­மு­மான  பின்­ன­ணி­யுடன் அமைக்­கப்­பட்ட  அரங்கில்  இச்­ச­கோ­த­ரிகள், லாவண்­ய­மான   ஆடை அலங்­கா­ரத்­துடன் தோன்றி,  இறை­வ­ணக்­கத்தின்  பின் ஸ்ரீ.ஏ.ஆரூரனின் கம்­பீ­ர­மான  கீர்த்­த­னைக்கும்  பாடல்­க­ளுக்கும் குரு  ஸ்ரீமதி வாசுகி ஜெக­தீஸ்­வ­ரனின் நட்­டு­வாங்­கத்­திற்கும் ஏற்ப குரு ஸ்லோகம், புஷ்­பாஞ்­சலி, அலா­ரிப்பு, ஜதீஸ்­வரம், மகா­லக் ஷ்மி கௌதம், வர்ணம், கீர்த்­தனம் என  நடன உருப்­ப­டிகள் ஒவ்­வொன்­றையும் பக்திபூர்­வ­மா­கவும் அர்ப்­ப­ணிப்­போடும் கலா­பூர்­வ­மா­கவும் மேற்­கொண்டு  தமது  நட­னத்­தி­றனை வெளிப்­ப­டுத்­தினர்.

 நடன அரங்­கேற்­றத்தை சினேகா, சிந்­துர்ஜா, சுபா­னுஜா, அட்­சயா ஆகிய  இச்­ச­கோ­த­ரிகள்  அன்­றைய தினம் மேற்­கொண்­டனர்  எனினும்  இவர்கள்  நாட்­டிய கலா­மந்­திரின்  நடன நிகழ்­சி­களில்  ஏற்­க­னவே  பங்­கு­கொண்டு அனு­பவம் பெற்­ற­வர்கள்  என்ற கூற்றில் இருந்து  இவர்­க­ளது  பாங்­கான  ஆடல் திறனை மேலும் அவ­தா­னிக்க முடிந்­தது.

அத்­துடன்  நட­னத்தில்  சளைத்­த­வர்கள் அல்ல  என்­ப­தனை  நிருத்தம், வர்ணம், கீர்த்­தனம்  என்னும் நடன  உருப்­ப­டி­க­ளின்­போது  தமது  அர்ப்­ப­ணிப்­பான  நடன பாவங்கள்  மூலம்  வெளிப்­ப­டுத்­தி­ய­தையும்  காண­மு­டிந்­தது. குறிப்­பாக  “வேலனைக் காண்போம் வாரீர்” என்ற  வர்­ணத்­திற்கும்  “மகா­தேவ சிவ சம்போ” மற்றும்  ஆனந்­தா­மிர்­த­கர்­ஷினி ஆகிய கீர்த்­த­னங்­க­ளுக்கும் “காத்­தி­ருப்பான் கமலக் கண்ணன்” என்னும் பதத்­திற்கும்  நன்கு அபி­ந­யங்கள் மற்றும் பாவங்­களைப்  புலப்­ப­டுத்தி சிறப்­பாக ஆடி சபை­யோரை மகிழ்­வித்­தனர். 

குரு கலா­சூரி  வாசுகி ஜெக­தீஸ்­வரன்  நடன அமைப்­பை மேற்­கொண்­ட­துடன்  நட்­டு­வாங்­கத்­தையும்  மேற்­கொண்டு  தமது  சிஷ்­யர்­களின்  நடனத் திறன்­களை  சிறப்­பாக  வெளிக்­கொ­ணர்ந்தார்.