You are here : Features

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




இந்தியாவில் 2-வதாக உயர்நிலை வன உயிரின பாதுகாப்பு நிறுவனம் வண்டலூரில்

October 12 , 2017


வண்டலூர் உயிரியல் பூங்காவில் ரூ.7.13 கோடி செலவில் கட்டப்பட்ட ஆராய்ச்சி மையத்தை திறந்து வைத்த முதல்-அமைச்சர் பூங்காவில் உள்ள 7 மாத ஆண் சிங்கக் குட்டிக்கு விஷ்ணு என்று பெயர் சூட்டியுள்ளார்

வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே புதிதாக உயர்நிலை வன உயிரினப் பாதுகாப்பு நிறுவனம் கட்டப்பட்டு உள்ளது.

ரூ.7.13 கோடி செலவில் கட்டப்பட்ட இந்நிறுவன ஆராய்ச்சி மையத்தை இன்று காலை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று திறந்து வைத்தார்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள 7 மாத ஆண் சிங்கக் குட்டிக்கு விஷ்ணு என்று பெயர் சூட்டினார்.

2011-ம் ஆண்டு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஒரு பெண் சிங்கக் குட்டிக்கு ஜான்சி என்ற பெயர் சூட்டினார். தற்போது அந்த சிங்கம் ஈன்ற குட்டிக்குதான் அவர் பெயர் சூட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வன உயிரின பாதுகாப்பு நிறுவனத்தில் வன உயிரின பாதுகாப்பு, ஊழியர்களுக்கு பயிற்சி போன்றவை மேற்கொள்ளப்படும்.