You are here : Features

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




பவள விழாவும் நூல் வெளியீடும்

December 04 , 2017


சித்திலெப்பை ஆய்வு மன்ற ஈராண்டுப் பூர்த்தியை முன்னிட்டு ஜின்னாஹ் ஷரிபுத்தீனின் பவள விழாவும் "காப்பியக் கோ 75" நூல் வெளியீடும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை கொழும்புத்தமிழ்ச் சங்கத்தில் சட்டத்தரணி மர்சூம் மௌலான தலைமையில் நடைபெற்றது.

பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட பேராசிரியர் எஸ். தில்லை நடராஜா, முதன்மை அதிதி பேராசிரியர் சோ. சந்திரசேகரம் ஆகியோர் நூலின் பிரதிகளை வழங்கி வைத்தனர். முதல் பிரதியை புரவலர் ஹாஷிம் உமர் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து சிறப்பு பிரதிகள் கலந்து கொண்டோருக்கு வழங்கப்பட்டதோடு, சைவப் புலவர் சு. செல்லத்துரை உரையாற்றினார்.   சோ. சந்திரசேகரம்  ஜின்னாஹ் ஷரிபுத்தீனை கௌரவித்தார்.