You are here : Features

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS
பிறப்பும் இறப்பும் ஒரே திக­தியில்...

January 9 , 2018


பிறப்பும் இறப்பும் ஒரே திக­தியில்...

இறப்­புக்கும் பிறப்­புக்கும் இடை­யி­லா­ன­துதான் வாழ்க்கை என்­பது பொது­வா­ன­தொரு கோட்­பாடு.

ஆனால், பிறப்பை கொண்­டாடும் அள­வுக்கு நாம் இறப்பை கொண்­டா­டு­வ­தில்லை. அதே­போன்று இந்த பிறப்பும் இறப்பும் ஒரே திக­தியில் அமை­வ­துவும் மிக அரிது.

அதிலும் இவ்­வாறு பிர­ப­லங்­களின் இறப்பும் பிறப்பும் ஒரே திக­தியில் அமை­வது மிக மிக அரிது. இன்னும் சில பிர­ப­லங்கள் பிறந்த அல்­லது இறந்த திக­திகள் குறித்து பல்­வே­று­பட்ட கருத்­துக்கள் நில­வி­வ­ரு­கின்­றன.

எது எப்­ப­டியோ பிறந்த அதே திக­தியில் இறந்­த­தாகக் கூறப்­படும் பிர­ப­லங்கள் பற்றிப் பார்க்­கலாம்.

ஜெர்ட்­ரூடு ஆஸ்டர்

 ஜெர்ட்­ரூடு ஆஸ்டர் (Gertrude Astor)  என்­பவர் ஓர் ஆங்­கில நடிகை. இவர் 1915 -– 1942 வரை இடைப்­பட்டக் காலத்தில்  நடித்து வந்­தவர்.

இவர் தனது வாழ்­நாளில் 250க்கும் மேற்­பட்ட படங்­களில் நடித்­துள்ளார். தி கேட் அன்ட் தி கனாரி மற்றும் தி மேன் ஹூ ஷாட் லிபர்டி வாலன்ஸ் போன்ற படங்கள் இவர் நடித்த சிறந்த படங்­க­ளாகத் திகழ்­கின்­றன.

இவர் தனது 90ஆவது அக­வையில், தான் பிறந்த அதே தின­மான நவம்பர் 9ஆம் திகதி (1977) மரணம் அடைந்தார். இவ­ரது கல்­லறை கலி­போர்­னி­யாவில் அமைந்­தி­ருக்­கி­றது.

ரபேல் (Raphael)

மைக்கேல் ஏஞ்­சலோ மற்றும் லியோ­னார்டோ டா வின்சி வாழ்ந்த கால­கட்­டத்தில் புகழ்­பெற்ற மற்­று­மொரு கலை­ஞ­ராக திகழ்ந்­தவர் ரபேல்.

இவ­ரது ஓவி­யங்கள் எல்லாம் மறு­ம­லர்ச்சி ஏற்­ப­டுத்­தின என வியந்து கூறுவர். ஆனால், இவ­ரது படைப்­புகள் போல இவர் நீண்ட நாள் வாழ­வில்லை.

தனது 37ஆவது பிறந்­த­நாளில், ஏப்ரல் 6, 1520இல் மரணம் அடைந்தார் ரபேல். இவ­ரது மர­ணத்தின் காரணம் என தெளி­வான தக­வல்கள் எதுவும் இல்லை.

சிட்னி பெச்ச்ட்

சிட்னி ஒரு சிறந்த ஜாஸ் சாக்­ஸ­போனிஸ்ட் (சாக்ஸ்போன் எனும் இசைக்­க­ரு­வியை வாசிப்­பவர்). இவர் லூயிஸ் ஆர்ம்ஸ்ட்க்ஸ்ரோங் என்­ப­வ­ருடன் சேர்ந்து பல­முறை டூயட் பாடல்கள் இசைத்­துள்ளார்.

இவ­ரது இசைக்கு பலர் அடி­மை­யாக இருந்­தனர். சிட்னி நுரை­யீரல் புற்­றுநோய் கார­ண­மாக தனது 62ஆவது அக­வையில் மே மாதம் 14ஆம் நாள் 1959ஆம் ஆண்டு மரணம் அடைந்தார்.

அமெ­ரிக்­காவில் இருந்து பாரிஸ் சென்ற இவ­ரது உடல், பிரான்ஸில் அடக்கம் செய்­யப்­பட்­டுள்­ளது.

இங்க்ரிட் பெர்க்மன்

இங்க்ரிட் பெர்க்மன் ஹொலி­வூட்டின் தலை­சி­றந்த நடி­கை­களுள் ஒரு­வ­ராகத் திக­ழ்ந்­தவர்.

இவர் ஆகஸ்ட் 29, 1915இல் பிறந்தார். தான் பிறந்த அதே நாளான ஆகஸ்ட் 29, 1982இல் தனது 67ஆவது அக­வையில் மர­ண­ம­டைந்தார்.

இவர் நீண்ட கால­மாக மார்­பக புற்­று­நோ­யுடன் போராடி வந்தார். இவர் மூன்று முறை அகா­டமி விருது வென்­றவர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. 

பல கிளாசிக் படங்கள் இவ­ரது பெயரை உச்­சத்­துக்குக் கொண்­டு­போ­யின.

கெபி ஹர்ட்நெட்

 சார்லஸ் லியோ கெபி ஹர்ட்நெட் என்­பது இவ­ரு­டைய முழுப்­பெயர் ஆகும். இவர் ஒரு பிர­பல பேஸ்போல் வீரர்.

வர­லாற்றில் சிறப்பு மிக்க பிடி­களை எடுத்த நபர் என்ற பெருமை  கொண்­டவர். இரு­ப­துக்கும் மேற்­பட்ட முறை ஹோம் ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமை பெற்­றி­ருந்­தவர்.

இவர் தனது 72ஆவது அக­வையில், தான் பிறந்த டிசம்பர் 20ஆம் (1972) மரணம் அடைந்தார்.

வில்­லியம் ஷேக்ஸ்­பியர்

பாடல் மற்றும் நாட­கங்கள் எழு­து­வதில் பெரும் புலமை பெற்­றி­ருந்த எழுத்­தாளர் வில்­லியம்ஸ் ஷேக்ஸ்­பியர்.

இவர் தனது பிறந்­த­நா­ளாக கரு­தப்­படும் ஏப்ரல் 23  அன்றே மரணம் அடைந்தார். இன்றுவரை இவர் எப்­படி இறந்தார் என்­பது மர்­ம­மா­கவே இருந்து வரு­கி­றது.

இவர் இறப்பதற்கு இரு­பது நாட்கள் முன்பு வரை மிகவும் ஆரோக்­கி­ய­மாக தான் இருந்தார் என கரு­தப்­ப­டு­கி­றது.

இவர் மார­டைப்பு கார­ண­மாக இறந்­தி­ருக்­கலாம் என சிலர் கரு­து­கி­றார்கள்.

கிராண்ட் வுட்

கிராண்ட் வுட் என்­பவர் ஒரு தலை­சி­றந்த அமெ­ரிக்க ஓவியர். அமெ­ரிக்க மதம் சார்ந்த ஓவி­யங்­களை வரைந்து புரட்சி செய்து வரலாற்றில் இடம்பிடித்தவர். தனது ஐம்பதுவயதில் இவர் மரணமடைந்தார்.

இவருக்கு கணையத்தில் புற்றுநோய் ஏற்பட்டிருந்தது என கூறப்படுகிறது. இவர் பெப்ரவரி 13ஆம் திகதி தனது பிறந்தநாள் அன்றே மரணமடைந்தார்.