You are here : General

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




யாழ். பல்­க­லைக்­க­ழக கலைப்­பீ­டத்தில் இருந்து கலை­யாழி

December 05 , 2017


யாழ்ப்­பாணப்பல்­க­லைக்­க­ழகக்கலைப்­பீ­டத்தின் 37 ஆவது அணி­யி­னரின் (மூன்றாம் வருட அணி­யி­னரின்)  வெளி­யீ­டாக அமைந்த கலை­யாழி என்ற மாதப் பத்­தி­ரி­கையின் வெளி­யீட்டு விழா 29.11. 2017 புதன்­கி­ழமை யாழ்ப்­பாணப் பல்­க­லைக்­க­ழக கைலா­ச­பதி கலை­ய­ரங்கில் நடை­பெற்­றது.

மூன்றாம் வருட மாணவர் பிர­தி­நிதி மகேந்­திரன் புதி­ய­ஜோதி தலை­மையில் நடை­பெற்ற இந்­நி­கழ்வில் பிர­தம விருந்­தி­ன­ராக யாழ்ப்­பாணப் பல்­க­லைக்­க­ழகத் துணை­வேந்தர் பேரா­சி­ரியர் இ.விக்­னேஸ்­வ­ரனும் சிறப்பு விருந்­தி­ன­ராக கலைப்­பீ­டா­தி­பதி கலா­நிதி கே.சுதா­கரும் கலந்து கொண்­டனர்.

பத்­தி­ரி­கைக்­கான வெளி­யீட்­டு­ரையை செஞ்­சொற்­செல்வர் கலா­நிதி ஆறு.திரு­மு­ருகன் ஆற்­றினார். மதிப்­பீட்­டு­ரையை கோப்பாய் ஆசி­ரிய கலா­சாலை பிரதி அதிபர் ச.லலீசன் வழங்­கினார்.  பத்­தி­ரி­கையின் முதற்­பி­ர­தியை கலா­நிதி ஆறு.திரு­மு­ருகன் வெளி­யிட்டு வைக்க துணை­வேந்தர் இ.விக்­னேஸ்­வரன் பெற்­றுக்­கொண்டார்.

பத்திரிகை ஆசிரியர் வி.மகா சேனன் நன்றியுரை நல்கினார். கலைப்பீட மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் பல இடம்பெற்றன.