Kalaikesari
You are here : General

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




இன்றைய ராசிபலன் 01/05/2018

May 01.2018


மேஷம்: காலை 10 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

ரிஷபம்: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். கல்யாணப் பேச்சு வார்த்தை கூடி வரும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு பல ஆலோசனைகள் தருவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்

மிதுனம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக் கிடைக்கும். திடீர் யோகம் கிட்டும் நாள்.

கடகம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

சிம்மம்: தடைகளைக் கண்டு தளர மாட்டீர்கள். தாயாருடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். புது வேலை அமையும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

கன்னி: பேச்சில் முதிர்ச்சி தெரியும். சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். தைரியம் கூடும் நாள்.

துலாம்: காலை 10 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எதிலும் அவசரப்பட வேண்டாம். பிற்பகல் முதல் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் அமைதி நிலவும். மனசாட்சி படி செயல்படும் நாள்.

விருச்சிகம்: காலை 10 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். விட்டுக் கொடுத்து செல்ல வேண்டிய நாள்.

தனுசு: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். நெருங்கியவர்கள் சிலரால் தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

மகரம்: எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிறப்பான நாள்

கும்பம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள்.

மீனம்: காலை 10 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் டென்ஷன் வந்துச் செல்லும். பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உற்சாகமான நாள்.