You are here : Health

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




பற்கள் அசிங்கமா மஞ்சளா இருக்கா? ஒரே இரவில் வெள்ளையாக்கும் சில வழிகள் இதோ!

March 12.2018


உங்களுக்கு பற்களில் இருக்கும் மஞ்சள் கறைகளை இயற்கை வழியில் அகற்றும் முறைகளைத் தெரிந்து கொள்ள வேண்டுமா?

அப்படியானால் இக்கட்டுரை மிகவும் உபயோகமாக இருக்கும். ஏனெனில் கீழே ஒரே இரவில் பற்களில் இருக்கும் மஞ்சள் கறையைப் போக்கும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

அதைப் படித்து பின்பற்றி உங்கள் புன்னகையை அழகாக்குங்கள்.
 

ஆப்பிள் சீடர் வினிகர் * 1/2 டீஸ்பூன் ஆப்பபிள் சீடர் வினிகரை 1 கப் நீருடன் கலந்து கொள்ள வேண்டும். * பின் பற்களைத் துலக்கும் முன் இந்த நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும். * இப்படி ஒரு வாரத்திற்கு 2-3 முறை காலை வேளையில் செய்ய வேண்டும். * ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள அமிலம், பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கி, பற்களை வெண்மையாக்கும்.

 பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை * ஒரு பௌலில் 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா, 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். * பின் டூத் பிரஸ் கொண்டு இந்த கலவையை பற்களில் தடவி 1-2 நிமிடம் கழித்து, வாயை நீரால் கழுவ வேண்டும்.

 * இப்படி 10 நாளைக்கு ஒருமுறை செய்து வந்தால், பற்களில் உள்ள அசிங்கமான மஞ்சள் கறைகள் நீங்கி, பற்கள் எப்போதும் வெள்ளையாக இருக்கும்.