You are here : Health

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




உங்கள் உயிர்காக்க தன்னை அழித்துக்கொள்ளும் சிறுநீரகம் : ஏ சி அறை பிரியர்களா நீங்கள்?

2018-07-11


நவீன வாழ்க்கைமுறைக்கு பழக்கப்பட்டுள்ள நாம் நமது வீடுகளையும் நவீனமுறையில் அமைப்பதையே விரும்புகின்றோம். வீடு என்பது அழகினை மட்டும் அடிப்படையாக கொண்டு அமைய வேண்டிய விடயம் அல்ல ஒரு வீட்டின் அமைவில் அந்த குடும்பத்தின் ஆரோக்கியமே தங்கியுள்ளது எனவே வீடுகளை அமைக்கும் போது இதனையும் கருத்தில் கொள்ளுதல் வேண்டும்.

ஏ.சி. அறையிலோ அல்லது நுளம்புகளுக்கு பயந்து பூட்டிய அறையிலோ இயற்கை காற்றோட்டம் இல்லாமல் தூங்கும் போது நமது உடல் நலம் பாதிப்படைவதுடன் சிறுநீரகமும் வெகுவாக பாதிப்படைகின்றது. 

பொதுவாக காற்றில் 21 சதவீதம் ஒக்சிஜன் உள்ளது. ஒருவர் நான்கு மணி நேரம் தொடர்ந்து பூட்டிய அறைக்குள் உறங்கும்போது இந்த ஒக்சிஜன் அளவு 10 சதவீதத்திற்கும் கீழே குறைகின்றது.

இதன்போது நுரையீரலால் இரத்தத்தில் இருக்கும் ஒக்சிஜன் அளவை சரியாக வைக்க முடியாத நிலை ஏற்படும், இது தொடர்ந்தால் மயக்கநிலை ஏற்படும். இதை தவிர்பதற்காக சிறுநீரகம்  நம் உடலில்  தண்ணீரில் இருக்கும் ஒக்சிஜனை பிரித்தெடுத்து உடலுக்கு கொடுக்கும். அதனால்தான் சிறுநீரகத்தை மனிதனின் ‘இரண்டாவது நுரையீரல்‘ என்று அழைக்கிறார்கள்.

இதனால் சிறுநீரகத்தின்  ரத்தத்தை வடிகட்டி சுத்தப்படுத்தும் வேலையை நிறுத்திவிடும். நமது உடலில் உள்ள தண்ணீரில் ஆக்சிஜன் அளவு குறைந்தவுடன் அது கழிவுநீராக மாறிவிடும்.  இதனால் சிறுநீரகம் அதிக வேலையை செய்வேண்டிய நிலை உண்டகின்றது.

சிறுநீரகத்தில் அழுக்கு சேர்வதுடன், ரத்தத்தில் யூரிக் அமிலம் முதலான அசுத்தங்களும் அதிகரிக்கின்றன. மூட்டுகளிலும் சிறுநீரகத்திலும் யூரிக் அமிலம் படிவமாக படிகிறது. ரத்தத்திலும் இந்த அமிலப் படிவங்களால் ரத்தக்குழாய்களில் தடிமன் அதிகரித்து இரத்த அழுத்தம், மூட்டு வலி என்பன ஏற்படுகிறது. 

இதனையே நமது பழந்தமிழர் மருத்துவத்தில் ‘காற்றுத்தீட்டு‘ என்று அழைத்தார்கள். இதனை நாம் உணராமல் மூடிய  அறையில் தூங்குவதையே  ஆரோக்கியம் என நினைக்கின்றோம் . இனியாவது உணர்ந்து செயற்பட்டு விலை மதிப்பற்ற சிறுநீரகத்தை காப்போம்.