You are here : Health

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




கருப்பை சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் அசோக மரத்தின் மருத்துவம்

2018-09-12


பெண்களை மிகவும் பாதிக்கும் பிரச்சினைகளில் கருப்பை சார்ந்த பல பிரச்சனைகள் மிகமுக்கியமனவை இதனால் பெண்கள் உடல் உள ரீதியாக மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு ஆங்கில மருத்துவத்தில் முழுமையான வைத்தியம் இல்லாத போதும் நாட்டு மருத்துவத்தில் இதற்கு சிறந்த நிவாரணியாக அமைவது அசோக மரம். இதன் பட்டையை கொண்டு செய்யப்படும் மருத்துவம்  கருப்பை பலவீனம், கருப்பையில் கட்டி, கருப்பை வீக்கம், கருப்பையில் சதை வளர்ச்சி, கரு சரியான நேரத்தில் கருப்பைக்கு வராத நிலை, சினைப்பையில் உண்டாகும் நீர்க்கட்டி, சினைப்பையையும் கருப்பையையும் இணைக்கும் பாலோப்பியன் டியூப்களில் உண்டாகும் குறைபாடுகள், மாதவிலக்கு ஒழுங்கின்மை, மாதவிடாயின் போது உண்டாகும் வயிற்றுவலி  போன்ற அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் சக்தி உடையது.

 

 

கருப்பை கட்டி


அசோக மரத்தின் பட்டை 25கிராம்
 கருப்பு எள் 50 கிராம்


 இரண்டையும் அரைத்து தூள் செய்து கொள்ளுங்கள். இதில் ஒரு மேசைகரண்டி எடுத்து 2 டம்ளர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து பாதியாக சுண்ட வைத்து கொள்க.
காலை – மாலை இருவேளை பருகி வர வேண்டும். 

மாதவிலக்கு 


ஒரு சிலருக்கு பல்வேறு காரணங்களினாலும் உடல் சார்ந்த குறைபாடுகளினாலும் மாதவிலக்கு முறையாக வராமல் இருக்கும். அப்படியானவர்கள் இந்த பொடியை சாப்பிட்டு வர மாதாந்திர சுழற்சி முறையாக ஏற்படும்.


தேவையான பொருட்கள்
அசோகப்பட்டை - 250 கிராம்
 மாவிலங்கப்பட்டை - 100 கிராம்
சுக்கு -  25 கிராம்
 கருஞ்சீரகம் -  25 கிராம் 


ஆகியவற்றை அரைத்து தூள் கொண்டு  இதில் மூன்று கிராம் அளவு காலை – மாலை இரு வேளையும் வெறும் வயிற்றில் சாப்பிட்ட வேண்டும்.

 

மாதவிடாயின் போது உண்டாகும் வயிற்றுவலி குணமடைய

தேவையான பொருட்கள்


அசோகப்பட்டை - 100 கிராம் 
பெருங்காயத்துள் - 25 கிராம் 
பசு வெண்ணெய்


 அசோகப்பட்டையுடை அரைத்து பெருங்காயத்துளை கலந்து வைத்து கொள்ளுங்கள். இதில் 2 கிராம் எடுத்து பசு வெண்ணெயில் குழைத்து தினமும் மூன்று வேளை சாப்பிட்டு வரவும். இதனால் ஓரிரு மாதங்களில் மாதவிடாயின் போது உண்டாகும் வயிற்றுவலி முற்றிலுமாய் குணமாகிவிடும்.

 

கருப்பப்பை கோளாறுகள் நீங்க.


பொதுவாக பெண்கள் கருப்பை பிரச்சினைகளை ஆரம்பத்தில் அறிவது குறைவு. அதுமட்டுமன்றி இதனை சாதரன பிரச்சினைகளாகவே கருதுகின்றனர். கருப்பை ஆரோக்கியத்தை பேணுதல் இதற்கு தீர்வாக அமையும். 


அசோக  மரப்பட்டை, மாதுளம் பழம் சேர்த்த இந்த பொடியை தொடர்ந்து சேர்த்துகொள்வதன் மூலம் கருப்பை கோளாறுகளில் இருந்து எம்மை காத்துக்கொள்ள முடியும்.
அசோக மரப்பட்டை, மாதுளம் பழம் ஆகிய இரண்டையும் எடுத்து நன்றாக காய வைத்து பொடி செய்து தினமும் 1 தேக்கரண்டி அளவு காலை, மாலை சாப்பிட்டு வெந்நீர் குடித்து வந்தால் பெண்களுக்கு கருப்பை கோளாறுகள் குறையும்.