You are here : Health

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




இளமையை நீடிக்க வேண்டுமா? இதோ திபேத்தியர்களின் அற்புத மருந்து!

2018-10-11


மனிதனின் தோற்றம் முதுமைக்கு சென்றாலும் அவன் மனம் அத்தனை இலகுவாக முதுமையை அனுமதிப்பதில்லை. முதுமை தோற்றத்தை ஆரோகக்கியமான உணவுமுறை மூலம் தாமத படுத்தலாம் ஆனால் யாராலும் தவிர்க்க முடியாது.


முதுமையை தாமதபடுத்த பல விதமான மருத்துவமுறைகள் உள்ளபோதிலும் அவை அனைவருக்கும்  பொருந்துவதில்லை. சில ஆபத்தை தர கூடியனவாக உள்ளன. இயற்கை முறையில் கூறப்படும் மருத்துவமே அனைவருக்கும் இலகுவான மற்றும் பொருத்தமானதாகும்.  


திபேத்தியர்கள் பின்பற்றும் ஒரு முறையை இங்கு பார்க்கலாம். இவர்களின் ரகசிய கலவை நீண்ட ஆயுளுக்கும், முதுமை அடைவதை தாமதப்படுத்தவும் உதவும் ஒரு அற்புத  மருந்தாக உள்ளதாம்.


தேவையான பொருட்கள்.
– 10 பூண்டு பற்கள்
– 10 எலுமிச்சை பழச்சாறு
– 1 கிலோ இயற்கை தேன்


செய்முறை:
பூண்டை பொடியாக நறுக்கி தேன் மற்றும் எலுமிச்சை பழச்சாறுடன் நன்றாக கலக்கவும். இதை ஒரு சுத்தமான கண்ணாடி ஜாடியில் மாற்றி 8-10 நாட்கள் ஊறவிடவும்.
நன்றாக ஊறியவுடன் தினமும் 1 டீஸ்பூன் வீதம் காலை வெறும் வயிற்றிலும், மாலை உணவுக்கு முன்பும் சாப்பிடவும்.