You are here : Health

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




ஆரோக்கியமான சைவ சமையல் - காய்கறி குருமா

2019-02-10


சைவ உணவின்  அவசியம், அரோக்கியம் பற்றி தற்போது அனைவரும் மிகச்சிறந்த தெளிவை பெற்றுள்ளனர். நாமே விரும்பினாலும் அசைவ உணவிற்கு பழக்கப்பட்டுவிட்ட நமது நாவினை மாற்றுவது சற்று சிரமம்தான்.  அதற்கு சுவையான முறையில் சைவஉணவுகளை தயார் செய்ய பழகிக்கெள்வது மாற்று வழியாக இருக்கும் எனவேதான் இவ் ஆரோக்கிய சைவசமையல் முறைகளை பதிவிடுகின்றோம்.

காய்கறி குருமா

இன்று காய்கரி குருமா செய்யும் முறையை இங்கு பார்க்கலாம். மனிதனின் அற்றாட போசணை தேவையில் காய்கறிகள் மிக முக்கிய  பங்கு வகிக்கின்றன. நாள் ஒன்று குறைந்தது 4 வகையான காய்கறியை நாம்  சேர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு காய்கறி குருமா சிறந்த உணவாக அமையும்.

 

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு. : 2
கேரட். : 1
குடைமிளகாய். : 1
வெங்காயம். : 1(பொடியாக நறுக்கவும்)
தக்காளி. : 1(பொடியாக நறுக்கவும்)
இஞ்சி பூண்டு விழுது. : 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள். : 2 டீஸ்பூன்
தனியாத்தூள். : 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள். : 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா தூள். : 1 டீஸ்பூன்
ஏலக்காய். : 1
கிராம்பு. : 1
பட்டை. : 1 துண்டு
தேங்காய் துருவல். : 2 டேபிள்ஸ்பூன்
கசகசா. : 1 டீஸ்பூன்
சோம்பு. : 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை. : சிறிது
புதினா இலை. : சிறிது

 

 

செய்முறை

1.உருளைக்கிழங்கை நன்றாக வேகவைத்து தோல் நீக்கி சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கவும்.

2.வானலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் ஏலக்காய் கிராம்பு பட்டை சேர்த்து தாளிக்கவும்.

3.நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.

4.இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

5.நறுக்கிய கேரட் மற்றும் குடைமிளகாயை சேர்த்து நன்றாக வதக்கவும்.

6.வேகவைத்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

7.அதில் மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் தனியாத்தூள் கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.

8.தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

9.பத்து நிமிடத்திற்கு பிறகு தேங்காய் துருவல் மற்றும் கசகசா மற்றும் சோம்பு போட்டு நன்றாக அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.

10.இறுதியில் கொத்தமல்லி தழை மற்றும் புதினா இலை தூவி இறக்கவும்.