You are here : Health

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




ஒரோ இரவில் வாய்ப்புண் குணமாக வேண்டுமா? - நாட்டு மருந்து

2019-04-08


கோடைக்காலத்தில் அனைவரும் அவதியுரும் ஒரு பிரச்சினை தான் வாய்ப்புண். சிறுவர் முதல் பெரியவர் வரை வாய்ப்புண்ணின் தாக்கம் வேதனை தரும். உண்ணுதல், பேசுதல், சுவாசித்தல் என மனிதனின் பிரதான தேவைகள் பலவற்றைச் செய்யும் வாயில் ஏற்படும் இக் கோளாரை விரைவாகக் குணமாக்கி சுகம் அடைய சில இலகுவான கை மருந்துகளை இங்கு தருகின்றோம்.


இவற்றை சரியாக பின்பற்றினால் ஒரோ இரவில் வாய்ப்புண் குணமாகிவிடும்.


தேங்காய் பாலை 


தேங்காய் பாலை புண் உள்ள இடத்தில் அடிக்கடி தடவுங்கள். வாய்ப்புண் குணமாகும்.


தேன் 


ஒரு கரண்டி தேங்காய் பாலில் சிறிதளவு தேன் சேர்த்து வாயில் புண் உள்ள இடத்தில் பூசிவிடுங்கள்.


வல்லாரை கீரை


வல்லாரை கீரையை இடித்து அல்லது அரைத்து அதனை சாறு வடித்து  சிறிதளவு சாற்றினை வாய்ப் புண்ணில் பூசினால் வாய்ப்புண் குணமாகும்.


கற்றாழை


கற்றாழை சோற்றை சிறிதளவு எடுத்து அதில் நெய் சிறிதளவு சேர்த்து வாயில் பூசி வர வாய்ப்புண் குணமாகும். 


அகத்தி


அகத்தி இலைகளை சிறியதாக அரிந்து சிறிது நெய் ஊற்றி வதக்கி சாப்பிட்டால் வாய்புண் மற்றும் வயிற்றுப் புண் குணமாகும். 


அகத்தில் இலையை பால் குழம்பு போன்றவற்றிலும் சேர்த்து சாப்பிட்டால் உடல் சூடு குறைவதுடன் வாய்ப்புண் குணமாகும். 


வெண்டிக்காய் 


 வெண்டிக்காய் இதை சட்டியில் நெய் விட்டு ஒரு நிமிடம் வறுத்து அப்படியே சாப்பிட்டால் வயிற்றுப் புண் மற்றும் வாய்ப்புண் குணமாகும்.


நெல்லிக்காய்


நெல்லிக்காயை அப்படியே வாயில் போட்டு சப்பி சாப்பிட்டால் வயிற்றுப் புண்னுடன் வாய்ப்புண்ணும் குணமாகிவிடும்.