You are here : Health

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




தலைச்சுற்றலுடன் பார்வை மங்குகிறதா? இந்த ஆசனம் உங்களுக்கு நன்மை தரும்

2019-05-15



தலைச்சுற்றலுடன் பார்வை மங்குவது போன்ற உணர்வு ஏற்படும்போது நாம் நிலை தடுமாருகின்றோம். சாதாரனமான ஒருவருக்கு இப்படிதோன்றுவது ஏதாவது நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். தொடர்ந்து தலை சுற்றல் உணர்வு உள்ளவர்கள் மருத்துவர்களை ஆலோசிப்பது நல்லது. 


தூக்கம் இன்மை மன உளைச்சல் மற்றும்பல காரணங்கள் இதற்கு ஏதுவாக அமையலாம். தலைசுற்றல் உணர்வை கட்டுப்படுத்த யோகாவில் உள்ள சில ஆசனங்களை தொடர்ந்து செய்வது நன்மை தரும். இதன் மூலம், ரத்தஓட்டமும் ஆக்ஸிஜன் பரிமாற்றமும் சரியான அளவில் இருக்கும். தலைசுற்றலைத் தடுக்கப்படும்.
தலைச்சுற்றலுடன் பார்வை மங்குதலை சரிபடுத்த உதவும்  ஆசனம் ஒன்றை இங்கு பார்க்கலாம்.


ஷண்முகி முத்ரா ஆசனம் 

செய்முறை
விரிப்பில் நேராக அமர்ந்து கொள்ள வேண்டும். கை மூட்டியைத் தோள் வரை தூக்கி காதுகளை பெருவிரல்களால் மூடிக்கொள்ள வேண்டும்.
ஆட்காட்டி விரல் மூலம், கண்களை மூடிக்கொள்ள வேண்டும். நடுவிரல்கள் மூலம் மூக்கை மூடிக்கொள்ள வேண்டும். மூச்சை நன்கு இழுத்து வைத்து, விட வேண்டும். இந்த நிலையில் சில விநாடிகள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும். 

பயன்கள்
இந்த ஆசனம் செய்வதன் மூலம் நரம்பு மண்டலத்திற்கும், மனதிற்கும் அமைதி கிடைக்கும். பதட்டம், எரிச்சல் உணர்வைத் தவிர்க்க உதவும்.