You are here : Health

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




மழைக்கால தும்மலை விரட்டும் பாட்டி வைத்தியம்

2019-06-10



சிலருக்கு மழைக்காலம் வந்ததும் கூடவே தும்மலும் வந்து விடுகின்றது. தொடர்ச்சியாக வரும் இத் தும்மல் பலரையும் பாடாய்ப் படுத்திவிடும். தும்மி முடிந்தவுடன் மூக்கிலிருந்து தண்ணீர் வடியத்தொடங்கும். இதற்கு நாட்டு மருந்தில் சிறந்த காசாயம் ஒன்று கூறப்பட்டுள்ளது. 

இந்தக் கசாயமானது தும்மலை நீக்கக் கூடியதுமட்டுமன்றி  நுரையீரல் மண்டல நோய்களை நீக்கக் கூடிய அற்புதம் கொண்டது.
 

தேவையான பொருட்கள்
பட்டை தூள் -2g
ஏலக்காய் விதை தூள் -2g
திப்பிலி தூள் -2g
பனை வெல்லம் -. 5g
தண்ணீர் - 400ml
(பனங்கற்கண்டு அல்லது நாட்டுச் சர்க்கரையும் பயன்படுத்தலாம் )

செய்முறை
 நான்கு பொருட்களையும் 400ml தண்ணீருடன் சேர்த்து 100ml வரும்வரை காய்ச்சி  இறக்கி வடிகட்டிக் கொள்க.

அருந்தும் முறை


இந்த கசாயத்தை நாளொன்றுக்கு ஒரு வேளை மருந்தாகக் குடித்து வர வேண்டும். இந்தக் கசாயத்தைக் குடித்து வர உடம்பில் ஏற்படக் கூடிய ஒவ்வாமை சம்பந்தப்பட்ட தும்மல் வேகமாகக் குணமாவதைக் காண முடியும்


ஒரு மருந்தாக அல்ல மூலிகைத் தேநீராகவும் குடித்து வரலாம். அடிக்கடி சளி இருமல் காய்ச்சல் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப் படும் குழந்தைகளுக்கு இந்தக் கலவையை மாத்திரைகளாகச் செய்து வைத்துக் கொண்டு ஆரம்பிக்கும்போதே ஒரு மாத்திரையைச் சப்பி சாப்பிடக் கொடுக்க குணம் அடைவார்கள்.