You are here : Health

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




கழுதை பாலில் மறைந்துள்ள அழகின் இரகசியம்

2019-07-11



மற்ற விலங்குகளின் பாலை காட்டிலும் ஊட்டச்சத்து மிகுந்த பால் வகையாக கழுதைப்பால் இருக்கிறது. கழுதைத் பாலில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், ஜிங்க், சோடியம் போன்ற உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் சரிசமமான அளவில் இருப்பதால் கழுதைப் பாலை அருந்துபவர்களுக்கு அத்தனை விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கப் பெற்று உடல் வலிமையையும், உற்சாகமான மன நிலையையும் கிடைக்கின்றது.


அத்துடன் கழுதைப்பால் தாய்பால் அருந்தும் குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு மாற்றான ஒரு சிறந்த உணவாக இருக்கிறது. மனிதர்களின் தாய்ப்பாலில் இருக்கும் காரத்தன்மை 7 முதல் 7.5 pH அளவாக இருக்கிறது. அதே நேரத்தில் கழுதைப் பாலின் காரத்தன்மை 7 முதல் 7.2 pHஅளவாக இருக்கிறது. எனவே கழுதை பாலை வளரும் குழந்தைகளுக்கு தாராளமாக கொடுக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் கழுதைத் பாலில் அதிக அளவு கால்சியம் சத்து உள்ளது. இந்த கால்சியம் சத்து வளரும் குழந்தைகளின் எலும்புகளை மிகவும் வலிமை பெறச் செய்யும் திறன் கொண்டதாகவும் இருக்கிறது.

சரும அழகு
பழங்காலத்தில் எகிப்திய பேரழகியும், அரசியுமான கிளியோபாட்ரா தனது சரும அழகை காப்பதற்கு தினமும் கழுதை பாலில் குளியல் மேற்கொண்டதாக கூறப்படுவதுண்டு. இது குறித்து பலரும் பலவித கருத்துகளை கூறினாலும். தற்காலங்களில் விற்கப்படும் பல அழகு சாதனப் பொருட்களில் கழுதைப்பால் சேர்க்கப்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மையாக இருக்கிறது. கழுதைப்பால் மனிதர்களின் தோலில் ஈரப்பதம் தன்மையை அதிக நேரம் நீடித்திருக்கச் செய்ய உதவுகிறது. எனவே தான் இவை அழகு சாதனப் பொருட்களில் அதிகம் சேர்க்கப்படுகிறது. கழுதை பாலை முகம் மற்றும் உடல் முழுவதும் பூசிக் கொண்டு 20 நிமிடம் கழித்து குளிப்பவர்களுக்கு சருமத்தில் இருக்கின்ற கரும்புள்ளிகள், எண்ணெய் பிசுபிசுப்பு போன்றவை நீங்கி இளமையான தோற்றத்தையும், ஆரோக்கியத்தையும் தருகிறது.