You are here : Health

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




உச்சம் தலை உள்ளம் கால் வரை அழகை அள்ளித்தரும் அரிசி கழுவிய நீர்

2019-09-09


அரிசி கழுவிய நீர் சருமம், கூந்தல் ஆகியவற்றின் அழகு பராமரிப்பில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நீரில் கார்போஹைட்ரேட்டுகளும், ஊட்டச்சத்துகளும் வளமாக நிறைந்துள்ளதால் உடலுக்கு ஆற்றல் கிடைக்கும். அரிசியை வேகவைத்து வடித்த தண்ணீரோடு உப்பு கலந்து குடிக்கும்போது சத்துக்கள் வீணாகமல் முழுமையாக கிடைக்கும். 


அத்துடன் அழகு பராமரிப்புக்கு சில குறிப்புகள் இதோ..


கூந்தல்
அரிசி கழுவிய நீரில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது இதன் மூலம் கூந்தலை சுத்தப்படுத்தும் போது  கூந்தலின் எலாஸ்சிட்டியை அதிகரிப்பதுடன் கூந்தலின் பாதிப்புகள்  தடுக்கப்படுகிறது.
கூந்தல் அதிக வறட்சியுடனும், மென்மையின்றியும் இருந்தால். அரிசி கழுவிய நீரால் கூந்தலை அலசி சிறிது நேரம் காத்திருந்து பின்பு சுத்தமான நீரால் கூந்தலை அலச வேண்டும். இதனால் கூந்தல் இயற்கை நிறத்துடனும் மிகவும் வலுவாகவும், அடர்த்தியாகவும் மற்றும் நீளமாகவும் காணப்படும்.


முகம்
அரிசி கழுவிய நீரினை சிறிய பருத்தி துணியை பயன்படுத்தி முக்கியெடுத்து முகத்தை துடைப்பதால், அரிசி கழுவிய நீரில் உள்ள சத்துக்கள் நேரடியாக சருமத்தில் பொளிவை ஏற்பத்தும்.

சருமம் வறட்சி
வெயிலினால் சருமம் வறண்டு விரைவிலேயே வயதான தோற்றத்தை ஏற்படுத்தும். இதனை தவிர்க்க தினமும் அரிசி கழுவிய நீரில் முகத்தை கழுவுவதால் என்றும் இளமையாக இருக்கலாம்.