You are here : Kovil

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




உலகில் முதல் மூன்று இடங்களில் உள்ள மிகப்பெரிய இந்து ஆலயங்கள் இவைதான்

2018-06-14


1.அங்கோர் வாட்,கம்போடியா,ஆசியா


அங்கோர் என்பது நகரத்தையும், வாட் என்பது கோயிலையும் குறிக்கும் கெமர் மொழிச் சொல்லாகும். கெமர் பாரம்பரியத்தின் உயர்தர கட்டமைப்பை கொண்டவிளங்கும் இக்கோயில் இரண்டாம் சூரியவர்மன் (கிபி 1113-1150) என்பவரால் 12ஆம் நூற்றாண்டில்  அங்கோர் (யசோதரபுரம்) கட்டப்பட்டது.162.6 எக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள  உலகின் மிகப்பெரிய மத வழிபாட்டுத்தலமாக இவ் ஆலயம் விளங்குகின்றது. அப்போதைய அரசர்களின் சைவ பாரம்பரியத்தை உடைக்கும் விதமாக இக்கோயில் இறைவன் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கபட்டது ஆரம்பத்தில் இந்துக்கோயிலாக  விளங்கியிருந்தயலும் பின்னர் இவ் ஆலயம் புத்த மதக் கோயிலாக மாற்றம் பெற்றது.

 

2.ஸ்ரீ ரங்காநாதசுவாமி கோவில்,ஸ்ரீரங்கம்,திருச்சி, தமிழ்நாடு


 17 ஆம் நூற்றாண்டின் கட்டிடகலை அம்சங்களுடன் விளங்கும், இந்தியாவின் 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஸ்ரீரங்கம் தீவு நகரத்தில் அமைந்துள்ளது இத் திருத்தலம். 
108 வைணவத் திருத்தலங்களுள் முதன்மையாக விளங்கும் இவ் ஆலயம் ஏழு சுற்று மதில்களுக்குள் அமையப்பெற்றுள்ளது.இச்சுற்று மதில்களில் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
72 மீட்டர் (220 அடி) உயரம் இவ் ஆலயத்தின் இராஜகோபுரம்  தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகின்றது


3.அக்ஷர்தம் கோவில்,டெல்லி


அக்சரதாம் இந்தியாவின் தில்லியிலுள்ள ஓர் இந்துக் கோயில் ஆகும். இது சுவாமி நாராயணன் அக்சர்தாம் என்றும் சிறப்பாக குறிப்பிடப்படுகிறது, இவ்வளாகமானது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பாரம்பரியமுடைய இந்திய பண்பாட்டையும் இந்து பண்பாட்டையும் கட்டடக்கலையையும் ஆன்மீகத்தையும் வெளிப்படுத்துகிறது. 
இக்கட்டடத்துக்கு போச்சாசன்வாசி ஸ்ரீ அக்சர் புருசோத்தம் சுவாமிநாராயணன் சான்சுதாவின் மதத் தலைவர் பிராமுக் சுவாமி மகாராஜ் உயிர்ப்பூட்டியவராவார். இவரின் 3,000 தொண்டர்களும் 7,000 கைவினைத்தொழிலாளர்களும் அக்சர்தாம் கட்ட உதவினார்கள்.
இவ் ஆலயமானது சுவாமிநாராயணன் வாழ்க்கை மற்றும் இந்திய வரலாறு ஆகியவற்றின் சம்பவங்கள் பற்றிய பொருட்காட்சிகள், இன்னிசை நீர்த்தாரைகள், பெரிய இயற்கைக்காட்சியமைப்புத் தோட்டம் ஆகியவற்றை கொண்டு விளங்குகின்றது.