You are here : Kovils

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




அருள்மிகு டொரிங்டன் திரு­மு­ருகன் ஆலய குட­மு­ழுக்கு

2018-06-24கொழும்பு – 05, டொரிங்டன் அவெ­னி­யூவில் அமைந்­துள்ள அருள்­மிகு திரு­முருகன் ஆலய மகா கும்­பா­பி­ஷேகம் இன்று 25 ஆம


கொழும்பு – 05, டொரிங்டன் அவெ­னி­யூவில் அமைந்­துள்ள அருள்­மிகு திரு­முருகன் ஆலய மகா கும்­பா­பி­ஷேகம் இன்று 25 ஆம் திகதி காலை 9.35 முதல் 10.23 வரை­யுள்ள சுப­வே­ளையில் இடம்­பெ­ற்றது.

அறு­பது ஆண்­டு­க­ளுக்கு முற்­பட்ட வர­லாறு கொண்ட இவ்­வா­ல­யத்தின் கும்­பா­பி­ஷே­கத்­திற்கு முன் தினங்­க­ளான 23 மற்றும் 24 ஆம் திக­தி­களில் காலை ஒன்­பது மணி முதல் ஏழு மணி வரை இரு நாட்­க­ளுக்கு எண்ணெய்க் காப்பு இடம்­பெற்றது.


கொழும்பு – 07 இல் உள்ள ஒரே பழை­மை­யான இந்த ஆலயம் இது­வென்றே குறிப்­பிட வேண்டும். டொரிங்டன்,  திம்­பி­ரி­கஸ்­யாய, நார­ஹேன்­பிட்டி ஆகிய பகு­தி­க­ளி­லுள்ள இந்து மக்­களின் வழிப்­பாட்­டுத்­த­ல­மாக இது விளங்­கு­கின்­றது.  சிறு ஆல­ய­மாக விருந்த இவ்­வா­லயம் காலஞ்­சென்ற அப்­பாவு சுப்­பை­யாவின் முயற்­சியால் புன­ர­மைப்பு செய்­யப்­பட்டு 1966 இல் அன்­றைய இரா­ஜாங்க அமைச்­சரும், தற்­கா­லிக பிர­த­ம­ரா­கவும், முன்­னாளில் ஜனா­தி­ப­தி­யா­கவும் இருந்த ஜே.ஆர்.ஜய­வர்­த­ன­வினால் திறந்து வைக்­கப்­பட்­டது. தொடர்ந்து சகல இந்து சமய விழாக்கள் இடம்­பெற்ற இவ்­வா­ல­யத்தில் இடம்­பெறும் இரண்­டா­வது மகா கும்­பா­பி­ஷேகம் இது­வாகும். நித்­திய, நைமித்­திய பூசை­களும் தவ­றாது இடம்­பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது.


தற்­போது சிவஸ்ரீ குமார ஸ்ரீநி­வா­ச­சர்மா பிர­தம குருக்­க­ளாக இருந்து ஆலய புன­ருத்­தா­பனம் உட்­பட சகல திருப்­ப­ணி­க­ளையும் மேற்­கொண்டு வரு­கின்றார். கும்­பா­பி­ஷேகப் பெரு­வி­ழாவைச் சிறப்­பாக நடத்­து­வ­தற்­காக அவுஸ்­தி­ரே­லியா( பேர்த்) இந்­தி­யாவின் திருச்­செந்தூர் ஆகிய இந்து ஆல­யங்­க­ளி­லி­ருந்து வருகை தந்­துள்ள சிவாச்­சா­ரி­யார்­க­ளுடன் நம் நாட்டின் சிவாச்­சா­ரி­யர்­களும் இணைந்­துள்­ளனர்.


மகா கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து  நாற்பத்தெட்டு நாட்கள் மண்டலாபிஷேகமும் இடம்பெறவுள்ளது

த.மனோகரன்
[துணைத்தலைவர் அகில இலங்கை இந்து மாமன்றம்]