You are here : Kovils

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




அச்சுவேலி மிட்டிலாங்கூடல் நடராஜா அம்பலவாணர் விநாயகர் ஆலய தேர்த் திருவிழா 2018

2018-06-27


யாழ், அச்சுவேலி பத்தமேனி மிட்டிலாங்கூடல் நடராஜா அம்பலவாணர் விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா நேற்று செவ்வாய்க்கிழமை(26) முற்பகல் சிறப்பாக இடம்பெற்றது. 


ஆலயத்தின் மூலஸ்தான மூர்தத்தியான விநாயகப் பெருமானுக்கு நடைபெற்ற விசேட அபிஷேக பூசைகளை தொடர்ந்து காலை-08 மணிக்கு வசந்தமண்டபப் பூசைகள் இடம்பெற்று உள்வீதி வலம் வரும் நகழ்வு இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து முற்பகல்-09.30 மணியளவில் அலங்கார தேரில்   விநாயகப் பெருமான்  எழுந்தருளி தெய்வ தரிசனம் தந்தார்.


பக்த  அடியார்கள் ஒன்றிணைந்து வடம் படிக்க சித்திரத் தேர் பவனி  இடம்பெற்று முற்பகல்-11 மணியளவில் மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.

 


தேர் பவனி வரும்போது ஆண் அடியவர்கள் அங்கப் பிரதட்சணை செய்வதனையும், பெண் அடியவர்கள் அடியளித்தும், கற்பூரச் சட்டிகளைக் கைகளில் ஏந்தியும் நேர்த்திக் கடன்களை  நிறைவேற்றுவதையும் படத்தில் காணலாம்.