You are here : Kovils

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




கோயில்களில் அமைந்திருப்பது வெறும் கற் சிலையா? அறிந்து கொள்ளுங்கள் ஆலயங்களின் மகத்துவத்தை

2018-06-28


சிலை வழிபாடு அதிகமாக காணப்படுவது இந்து மதத்தில்தான். ஆலயங்களில் அமைந்திருப்பவை வெறும்சிலைகளா இல்லை அங்கு ஏதாவது சக்தி இருக்கின்றதா என பலரின் மனதில் சந்தேகத்துடன் கேள்வி எழலாம்.


ஆகமமுறைப்படி அமையப்பெற்ற கோவில்கள் ஒவ்வொன்றும் அறிவியல், மருத்துவம், விஞ்ஞானம்  என்பவற்றுடன் தொடர்புடையவையாக உள்ளன. பொதுவாக புராதன காலத்து ஆலயங்கள் ஊர்எல்லைகள் மலை உச்சி போன்ற இடங்களில் தான் அமைந்திருக்கும். இது ஏன் என நீங்கள் எப்போதாவது சிந்தித்ததுண்டா? இங்கு தான் காந்த அலைகள், நேர்மறையான அலைகள், அதிகமாக பரவியிருக்கும். மிக மிக அதிகமான காந்த அலைகள் பரவியிருக்கும் இடத்தில், செப்பு தகடுகளை பதித்து, அதன் மீது சிலையை அமைத்து, மூலஸ்தானம் உருவாக்கப்பட்டிருக்கும்.


இங்கு பதிக்கப்படும் செப்பு தகடுகளின் தன்மையானது பல நேர்மறை அலைகளை கிரகித்து, அதை பல மடங்காக்கி சிலை மூலம் வெளிக்கொண்டுவரும். இந்த நேர்மறை அலைகள் ஒருமித்து கிடைக்ப்பதற்காகவே ஆலயங்களின் மூலஸ்தானம் மூன்று பக்கமும் மூடி, வாசல் மட்டும் திறந்திருக்கும் படி அமைந்திருக்கும்.
இதே போல், மூலஸ்தானத்தில், அணையாவிளக்கு ஒன்று எப்போதும் இருக்கும். அதைச் சுற்றி கண்ணாடியும் இருக்கும். மூலஸ்தானத்தில் உருவாகும்  நேர்மறை அலைகளை பரவச் செய்யும், ஒரு நுட்பமான செயல் தான் கண்ணாடி வைத்திருப்பதன் நோக்கம். 


 தங்க நகைகளை அணிந்து ஆலயத்திற்கு செல்லும் போது இந்த உலோகங்கள் அங்குள்ள நேர்மறை சக்தியை கவர்ந்து  எமக்கு கொடுக்கின்றது.


எமத மூதாதையர்கள் வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களின் போது, பாதுகாப்பாக இருக்க, பிரமாண்டமான கோவில்களின் தஞ்சம் புகுந்தனர். இங்கு உள்ள காந்த அலைகள் இயற்கைக்கு எதிராக செயற்பட்டு பாதுகாப்பு அளிக்கின்றமையே இதற்கு காரணமாகும்.