You are here : Kovils

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலய கொடியேற்றம்

2018-07-15


வரலாற்றுப்பிரசித்திபெற்ற 2000 வருடங்கள் பழைமையும் பெருமையும் உடைய திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் புனராவர்த்தன மகா கும்பாபிசேகத்தினை தொடர்ந்து ஆடி அமாவாசை தீர்த்தோற்சவப் பெருவிழா எதிர்வரும் ஜூலை மாதம் 25ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ந்து 17 நாட்கள் திருவிழாக்கள் நடைபெற்று 18ஆம் நாள் ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி சனிக்கிழமை தீர்த்தோற்சவத்துடன்விழா நிறைவடையும் என ஆலயபரிபாலனசபைத் தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.

மகாகும்பாபிஷேகத்தின் பின்னரான ஆடிஅமாவாசை உற்சவம்என்பதால் இம்முறை வெகுசிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளதாக ஆலயபரிபாலனசபைத்தலைவர் சு.சுரேஸ் தெரிவித்தார்.

கிரியைகள்  அனைத்தும் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக் குருக்கள்  தலைமையிலும் ஆலயகுரு சிவஸ்ரீ நீதிநாதக்குருக்கள் அங்குசநாதக்குருக்கள் முன்னிலையிலும் நடைபெறவுள்ளது. ஆயிரக்கணக்கானோர் பிதிர்க்கடன் செலுத்தும் முக்கிய புண்ணியதலமாக இவ்வாலயம் திகழ்கிறது. 

திருவிழா நாட்களில் வருடாந்த உபயகாரர் க.பாஸ்கரனின் மகேஸ்வரபூஜை தொடர்ந்து இடம்பெறும். 

தீர்த்தோற்சவத்தையடுத்து 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பூங்காவனத்திருவிழாவும் 13ஆம் திகதி பைரவர் பூஜையும் இடம்பெறவுள்ளது என தலைவர் சு.சுரேஸ் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை கடந்த 25ஆம் திகதி மகா கும்பாபிஷேகம் வெகுசிறப்பாக இடம்பெற்று தற்சமயம் மண்டலாபிஷேகப் பூஜைகள் இடம்பெற்றுவருகின்றன. எதிர்வரும் 24ஆம் திகதி சங்காபிஷேகம் இடம்பெறவிருக்கின்றது.மறுநாள் கொடியேற்றம் இடம்பெறும்.

(காரைதீவு நிருபர்)