You are here : Kovils

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




ஸ்ரீ பேச்சியம்மன் திருக்கோவில் ஆடி மாத மஹோற்சவம் 2018- பதுளை

2018-07-18


பதுளை இரிதிபான ஸ்ரீ பேச்சியம்மன் திருக்கோவில் ஆடி மாத மஹோற்சவ அலங்கார உற்சவம், எதிர்வரும் 26ந் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இம்மாதம் 30ந் திகதி இடம்பெறும் வைரவர் பூஜையுடன் நிறைவு பெறும். 

26ந் திகதி ஸ்ரீ விநாயகர் வழிபாடு இடம்பெற்று, கொடியேற்று நிகழ்வு நடைபெறும்.

27ந் திகதி காவடி, கரக என்பவற்றுடன் பால்குடபவனி இடம் பெற்று  தீமிதிப்பு, ஸ்ரீ பேச்சியம்மனுக்கு அஸ்டோத்திர சங்காபிஷேகம் ஆகியன இடம்பெற்று. அதனை தொடர்ந்து அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.

28ந் திகதி ஸ்ரீ விநாயகர் சகித கதிர்வேலும்இ சிவன் சமேத சக்தி ஸ்ரீ பேச்சியம்மன் ஆகிய தெய்வங்கள் எழுந்தருளிய சித்தரத்தேர் பதுளை மாநகர் வரை வீதிஉழாவாக சென்று மீண்டும் திருக்கோவிலை வந்தடையும்.

29ந் திகதி துங்கிந்த ஆதி விநாயகர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் வைபவம் நடைபெற்று 30ந் திகதி ஸ்ரீ பேச்சியம்மனுக்கு பிராயச்சித்த அபிஷேகமும் மாவிளக்குப் பூஜையும் ஆடிகூழ்  ஊற்றுதல் ஆகியன இடம்பெற்று அன்று மாலை வைரவர் பூஜை நடைபெறுவதுடன் அலங்கார உற்சவம் நிறைவை அடையும். 

இப்பூஜை நிகழ்வுகள் அனைத்தும் திருக்கோவில் பிரதம குரு சிவஸ்ரீ ஆர்.பி. சாமிக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர் குழுவினரால் நடத்திவைக்கப்படும்.

 திருக்கோவில் பரிபாலன சபையினர் திருவிழா ஏற்பாடுகளை முன்னெடுத்து வருவதுடன் அம்மனின் அருள் பெற அனைவரையும் அழைக்கின்றனர்.

எம். செல்வராஜா

பதுளை நிருபர்