You are here : Kovils

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க படுவார்களா?

2018-07-19


சபரிமலை ஐப்பனை தரிசிக்க உலகெங்கும் இருந்த பக்தர்கள் பக்தியாத்திரை மேற்கொள்கின்றனர். இவ் யாத்திரையானது பல கட்டுபாடுகளுக்கு உட்பட்டதாகும் முக்கியமாக 10 வயது முதல் 55 வயது வரையிலான பெண்கள் இவ் யாத்திரையை மேற்கொள்ள கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இருப்பினும் 10 வயது முதல் 55 வயது வரையிலான பெண்களை சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனுமதிக்க கோரி  உச்சநீதிமன்றத்தில் கேரள அரசின் சார்பில் பிரமானப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் இதன் மீதான விசாரணனை  உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.

இதன்போது நீதிபதி கூறுகையில், இறை வழிபாட்டில் ஆண் பெண் என பாகுபாடு பார்க்கக் கூடாது. வழிபாடு நடத்த ஆண்களை போல் பெண்களுக்கும் உரிமை உள்ளது. பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்காதது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று நீதிபதி வாதிட்டார்.

இதனை எதிர்த்த கோயில் நிர்வாகம் கூறுகையில் மாதவிடாய் காலத்தில் உள்ள 10 வயது முதல் 55 வயது வரையிலான பெண்களை கோயிலுக்குள் அனுமதித்தால் கோயிலின் புனிதம் பாதிக்கப்படும். எனவே அவர்களை அனுமதிக்க முடியாது என விவாதித்துள்ளனர்.