You are here : Kovils

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




இன்று திருக்கோவில் கொடியேற்றம்

2018-07-25


வரலாற்றுப்பிரசித்திபெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின்  ஆடிஅமாவாசை உற்சவத்திற்கான  கொடியேற்றம் இன்று  புதன்கிழமை இடம்பெற உள்ளது.


இம்முறை கும்பாபிசேகத்தினை தொடர்ந்து இடம்பெற்ற உள்ள ஆடிஅமாவாசைத்தீர்த்தம் சிறப்பாக  நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது என  ஆலயபரிபாலனசபைத்தலைவர் சு.சுரேஸ் தெரிவித்துள்ளார்.
தந்தையை இழந்தோர் ஆடிஅமாவாசை விரதம் அனுஸ்ட்டித்து தீர்த்தமாடுவது எமது முக்கிய கடமைகளில் ஒன்று. ஆயிரக்கணக்கானோர் பிதிர்க்கடன் செலுத்தும் முக்கிய புண்ணியதலமாக இவ் ஆலயம் திகழ்கிறது. 


தொடர்ந்து 17 நாட்கள் திருவிழாக்கள்  நடைபெற்று 18ஆம் நாள் ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி சனிக்கிழமை தீர்த்தோற்சவத்துடன்  நிறைவடையும் எனவும் திருவிழா நாட்களில் மகேஸ்வரபூஜை தொடர்ந்து இடம்பெற உள்ளதாகவும் ஆலயபரிபாலனசபைத் தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.


தீர்த்தோற்சவத்தையடுத்து 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பூங்காவனத்திருவிழாவும் 13ஆம் திகதி பைரவர் பூஜையும் இடம்பெறவுள்ளது.