You are here : Kovils

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




பிட்டுத்திருவிழா - சுந்தரேசுவரர் கோவிலின் திருவிளையாடல் திருவிழாமதுரை

2018-08-07


மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலின் ஆவணி மூலத்திருவிழா எனப்படும் பிட்டுத்திருவிழா வருகிற 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 


இவ் திருவிழாவில் 14-ஆம் திகதி வரை காலை, மாலையில் சந்திரசேகரர் உற்சவம் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து வருகிற 15-ந் தேதி கருங்குருவிக்கு உபதேசம் நடைபெறுகிறது. 
ஆலய திருவிழாவில் நாரைக்கு முக்தியளித்தல், மாணிக்கம் விற்ற லீலை, தருமிக்கு பொறிகிழி வழங்குதல், உலவாக்கோட்டை, பாணனுக்கு அங்கம் வெட்டியது ஆகிய திருவிளையாடல் அடிப்படையிலான விழாக்கள் நடைபெறுகின்றமை விசேட அம்சமாகும். 


இதனைத் தொடர்ந்து திருஞானசம்பந்தர் சைவ சமயத்தை நிலைநாட்டிய லீலை நிகழ்த்திக்காட்டப்படுகிறது. 

சுந்தரேசுவரருக்கு சுவாமியின் பட்டாபிஷேகத்தினை தெடர்ந்த நடை பெறுகின்ற பிட்டு திருவிழா இவ் ஆலயத்தின் விசேட விழாவாகும். 


பிட்டுக்கு மண் சுமந்த லீலை விழா தினத்தன்று கோவிலில் இருந்து புறப்பாடாகும் சுவாமி, அம்மன் மற்றும் திருஞான சம்பந்தர் சுவாமிகள் ஆரப்பாளையம் பகுதியில் உள்ள புட்டுத் தோப்பு பகுதிக்கு செல்கின்றனர். 


இங்கு லீலை நடத்தப்பட்டு இறைவன் பக்தர்களுக்கு அருள் தருகின்றார்.