You are here : Kovils

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழா! பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

2019-02-11


 தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழாவை யொட்டி ஏப்ரல் 2ஆம் திகதி நடைபெற உள்ள  கொடியேற்றத்திற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.


இது உலக பாரம்பரிய சின்னமாக 1000 ஆண்டுகள் கடந்து தமிழரின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாகவும் திகழும் தஞ்சை பெரியகோவிலின் சித்திரை திருவிழா சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த விழாவாகும்.

 
மாமன்னன் ராஜராஜன் காலத்தில் சித்திரை திருவிழாவின் சிறப்பு பற்றி பெரியகோவிலில் உள்ள கல்வெட்டுகள் கூறப்பட்டுள்ளன. காலப்போக்கில் நின்றுபோயிருந்த இந்த விழாக்களை தஞ்சையை ஆண்ட நாயக்கர், மராட்டிய மன்னர்கள் 18 நாட்கள் கொண்ட விழாவாக ஏப்ரல், மே மாதங்களில் நடத்தியுள்ளதாகவும் திருவிழாவில் 15-ம் நாளன்று தேரோட்டம் நடைபெற்றதாகவும் அறிய முடிகின்றது. 


காலப்போக்கில் தேர் சிதிலமடைந்த நிலையில் 100 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறாமல் இருந்ததை அடுத்து மீண்டு புதிதாக தேர் செய்யப்பட்டு கடந்த 4 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெற்று வருகிறது. 


இந்த ஆண்டு சித்திரை திருவிழா ஏப்ரல் 2ஆம் திகதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் கொடி மரத்திற்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற உள்ளது. 


தொடர்ந்து விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் உள்வீதி உளா நடைபெற்று  உள்ளதுடன் பரதநாட்டியம், திருமுறை இன்னிசை நிகழ்ச்சி என்பனவும் நடைபெற உள்ளன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் சித்திரைப்பிறப்புடன் ஏப்ரல் 16-ந் தேதி நடைபெறஉள்ளது.