You are here : Kovils

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




100 ஆண்டுகளுக்கு பிறகு சித்திரை பெருவிழா திருக்கொடியேற்றம் - ஊரே திருவிழாக் கோலம்

2019-04-11


கும்பகோணம் திருக்கோடீஸ்வரர் ஆலயத்தில்  100 ஆண்டுகளுக்கு பிறகு சித்திரை பிரம்மோற்சவ பெருவிழா நடைபெற உள்ளது.


கும்பகோணம் திருவிடைமருதூர் அருகே உள்ள திருக்கோடிக்காவலில் பிரசித்தி பெற்ற திரிபுரசுந்தரி அம்பாள் சமேத திருக்கோடீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் நூறு ஆண்டுகளுக்கு பிறகு சித்திரை பிரம்மோற்சவ பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 


ஏற்பாடுகளை திருக்கோடிக்காவல், அம்மாபேட்டை கிராமவாசிகள் மற்றும் பக்தர்களின் ஏற்பாட்டில் இவ் சித்திரைத்திருவிழா ஏற்பாடுச்செய்யப்பட்டுள்ளது. 


காலை நடைபெற்ற விக்னேஸ்வர பூஜை வாஸ்து சாந்தி  பூஜைகளைத் தொடர்ந்து பஞ்ச மூர்த்திகள் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருள, கோயிலின் பிரதான கொடி மரத்திற்கு மஞ்சள் சந்தனம், பால், வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. 


தொடர்ந்து சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்,க தேவார திருவாசகப் பாடல்கள் பாடப்பட்டு, மங்கள வாத்தியங்கள் இசைக்க திருக்கொடியேற்றம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் சித்திரை பிரம்மோற்சவ பெருவிழாவில், வரும் 14-ம் திகதி ஓலைச் சப்பரம் புறப்பாடும், 16ஆம் திகதி திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 18-ம் திகதி நடைபெறுகிறது. மறுநாள் தீர்த்தவாரியுடன் சித்திரை பிரம்மோற்சவ பெருவிழா நிறைவடைகிறது. 


100 ஆண்டுகளுக்கு பிறகு சித்திரை பெருவிழா நடைபெறுவதால் ஊரே திருவிழாக் கோலம் கொண்டுள்ளது.