You are here : Kovils

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




பலப்படுத்தப்பட்ட பாதுகாப்புடன் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய விசாகப்பொங்கல் விழா ஏற்பாடு !

2019-05-15



நாடுமுழுவதிலிமிருந்து பல இலட்சக்கணக்கான அடியவர்கள் பங்குபற்றும் வரலாற்று சிறப்புமிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின்  வருடாந்த விசாகப் பொங்கல் உற்சவம் எதிர்வரும் 20/05/2019  ஆம் திகதி நடாத்த ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.


பொங்கல் விழாவின் பாரம்பரிய நிகழ்வுகளில் ஒன்றான  கடலில் உப்புநீர் எடுக்கும் நிகழ்வு 13ஆம் திகதி நடைபெற்றதை அடுத்து  7நாட்களுக்கு உப்புநீரில் தீபம் ஏற்றபடும் நிகழ்வும் நடைபெற்று வருகின்றது.


இந்த நிலையில் நாட்டின் ஏற்பட்டுள்ள பதட்டமான சூழல் காரணமாக ஆலயத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டள்ளது,  முப்படையினரின் மூவளைய பாதுகாப்பு, பொலிஸாரின் முழுமையான உடல்,உடைமை சோதனை, பிரதான வீதியுடன் மட்டுப்படுத்த பட்ட வாகன போக்குவரத்து வசதிகள் ( ஆலய வளவினுள் எந்த வாகனங்களுக்கும் அனுமதி இல்லை),வியாபார நிலையங்களுக்கான மட்டுப்படுத்தப்பட்ட அனுமதி போன்ற நடவடிக்கைகள்.

முன்னெடுக்கப்படுகின்றமையால் அடியவர்கள் தங்கள் நேர்த்தி கடன்களை அச்சம் தவிர்த்து  நிறைவேற்ற முடியும் என் ஆலய நிர்வாகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாதுகாப்பு தரப்பினரால்  பறவை காவடிகளுக்கான அனுமதி வழங்கப்படாமையால் இவ்வருடம் பறவை காவடி நேர்த்திக்கடன் தவிர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.                                 

நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த அவசர நிலைமைகளின் காரணமாக ஆலய பொங்கல் உற்சவத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள்  தேவையற்ற பொதிகளுடன் ஆலய வளவிற்குள் பிரவேசிப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறும், கட்டாயமாக தங்களது தேசிய அடையாள அட்டை அல்லது அதற்கு சமமான ஆள் உருதிப்படுத்தல்  ஆவணங்களுடன் ஆலயத்திற்கு வருகைதருமாறும், பாதுகாப்பு தரப்பினரின் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குமாறும்  வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயநிர்வாகத்தினால் வேண்டப்பட்டுள்ளது.