You are here : Kovils

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்!

2019-10-24


கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றும் அதிசய அம்மன் தான் காலதேவி அம்மன்.


12 ராசிகள், 27 நட்சத்திரங்கள், 9 நவகிரஹங்கள் அமைந்துள்ள காலராத்திரியை இங்கு ‘காலதேவி அம்மன்’ சிலையாக வணங்கப்படுகின்றது. 


 இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் இந்த அதிசய ஆலயம்  மதுரை மாவட்டம் எம்.சுப்புலாபுரம் அருகில் உள்ள சிலார் பட்டி எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. 


காலதேவி அம்மன் ஆலயத்தில் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு நடைதிறக்கப்பட்டு, சூரிய உதயத்திற்கு முன் நடை சாத்தப்படுகிறது. இரவு முழுவதும் பக்தர்களின் தரிசனத்திற்காக, நடை திறந்திருக்கும். இப்படி இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் ஒரே கோயில் உலகிலேயே இது ஒன்றுதான். 


“நேரமே உலகம்” என கோயிலில் கோபுரத்திலே எழுதப்பட்டுள்ள வாசகம் ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு நம்பிக்கையையும் பக்தியையும் ஏற்படுத்துகின்றது.


 காத்தல், அழித்தல், பஞ்ச பூதங்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள், முப்பத்தி முக்கோடி தேவர்கள் இவவை அனைத்தையும் கட்டுபடுத்தி  இயங்கும் சக்தி காலதேவிக்கு உண்டு. இவள் இயக்கத்தில்தான் ஈரேழு புவனங்களும் இயங்குகிறது. 
நேரத்தின் அதிபதியான காலதேவியால் ஒருவரது கெட்ட நேரத்தை கூட நல்ல நேரமாக மாற்றமுடியும், என்பதுதான் இக்கோயிலின் தத்துவம். 


பவுர்ணமி, அமாவாசை தினங்களில் இங்கு பக்தர்களின் கூட்டம் அதிகம் இருக்கும். கால தேவிக்கு உகந்த நாட்களாக இவை கருதப்படுகிறது. 


நம்பிக்கை.
கோயிலை தலா 11சுற்றுகள் வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் சுற்றி வந்து, காலச்சக்கரத்தின் முன் அமர்ந்து 11 வினாடிகள் தரிசித்தால்போதும்.கெட்டநேரம் அகன்று நல்லநேரம் வரும் என்பதுதான் இக்கோயிலின் நம்பிக்கை.


வேண்டுதல்
 காலச்சக்கரத்தின் முன்னிருந்து வேண்டும் போது, எனக்கு அதைக்கொடு, இதைக் கொடு, அவனை பழிவாங்கு என வேண்டுதல்கள் இல்லாமல்,“எனக்கு எது நல்லதோ அதைக் கொடு’ என வேண்டினால் போதும்.