You are here : Life

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




உங்கள் மனதைக் குடையும் சிக்கலைத் தீர்க்க சில வழிகள்

2019-07-10



நமது மனோ நிலையை பொறுத்தே நமது தினசரி செயற்பாடுகள் அமைகின்றன. நமக்குள் ஒரு பிரச்சினை தோன்றிவிட்டதென்றால் அதன் காரணமாக ஏற்படும் மன அழுத்தம் நமது நடைமுறை வாழ்க்கையில் தாக்கம் செலுத்துகின்றது ஒவ்வொரு நாளும் எமக்குத் தோன்றும் பிரச்சினைகளுக்கு நாம் சரியான தீர்வை காண வேண்டும் இதன் மூலம் அந்தப்பிரச்சினைகளினால் ஏற்படும் சிக்கலை நீக்கி வாழ்வில் முன்னோக்கி பயணிக்கலாம்.


சரி ஒரு பிரச்சினைக்கான சரியான தீர்வை காண்பது  எப்படி எனும் கேள்வி எமக்குள் தோன்றும். இதற்கு உளவியல் ரீதியாக செயல்முறைகள் உள்ளன. இந்த செயல்முறை வெறுமனே வாழ்க்கையின் ஒவ்வொரு வகையான பிரச்சினைகளையும் சரியான முறையில் தீர்ப்பதற்கு உதவுகின்றது. எமது பிரச்சினைக்கான தீர்வு எமது சிந்தனையில் தான் மறைந்துள்ளது. எமது சிந்தனையில் எழும் பல தீர்வுகளில் சரியான தீர்வை தெரிவு செய்வதே  எந்தவொரு சிக்கலுக்கும் தீர்வு காணும் வழியாக உள்ளது. இதற்கான படிமுறையை உளவியல் நிபுணர்கள் முன்வைக்கின்றார்கள்.


உளவியலாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட சிக்கல்களைத் தீர்க்கும் படிகள் இதோ!


1. சிக்கலை அடையாளம் காணுதல் முதலில் உங்கள் மனதை வெளிப்படையாக ஆராய்ந்து பிரச்சினையை கண்டறிய வேண்டும் எந்த ஒளிவு மறைவும் இன்றி.


02. சிக்கலைப் புரிந்துகொள்வது.
அடையாளம் காணப்பட்டவுடன் சிக்கலைச் சரியாக வரையறுப்பது மிக முக்கியம். சிக்கலை வரையறுப்பதன் மூலம் மட்டுமே, அதைத் தீர்க்க மேலும் நடவடிக்கை எடுக்க முடியும். அதில் இருக்கும்போது, ​​எந்தவொரு பிரச்சினையையும் புரிந்து கொள்ள நீங்கள் வெவ்வேறு கண்ணோட்டங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்; இது வெவ்வேறு கண்ணோட்டங்களுடன் தீர்வுகளைத் தேடவும் உதவும்.
முழு சிக்கலையும் அதன் பின்னணியில் உள்ள காரணங்களையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், இது சிக்கலைத் தீர்ப்பதற்கான இரண்டாவது படியாகும்.

03. ஒரு மூலோபாயத்தை உருவாக்குதல்
ஒரு மூலோபாயத்தை உருவாக்குவது ஒரு தீர்வைக் கண்டுபிடிப்பதற்கான  அடுத்த கட்டமாகும். வெவ்வேறு சூழ்நிலையிலும் தனிநபரின் தனிப்பட்ட விருப்பங்களைப் பொறுத்து வெவ்வேறு உத்திகளை வகுக்க வேண்டும். உங்கள் சிக்கல்களுக்கு நீங்கள் என்னென்ன தீர்வுகளை நினைக்கின்றீர்களோ அவற்றைப் பட்டியலிடுங்கள். அவற்றை மீண்டும் வாசித்து அதில் நடைமுறைக்குக் கொண்டுவர இயலாத தீர்வுகளை நீக்கி விடுங்கள்.

04.  நீங்கள் இப்போது உருவாக்கியுள்ள தீர்வுகளின் பட்டியலை மீண்டும் வாசித்து அவ்முடிவுகளின் விளைவுகள் பற்றி கேள்வி எழுப்புங்கள். கிடைக்கும் முடிவுகளைத் தீர்வுகளின் முன்னால் குறித்த கொள்ளுங்கள்.


05. குறித்த தீர்வுகளை நடைமுறை படுத்தும் போது நீங்கள் அதற்காகச் செலவிடும் நேரம், பணம் ஏனைய வளங்கள் பற்றி கருத்தில் கொள்ளுங்கள். மற்றும் உங்களின் உடல் தகுதி, சிரமம் என்பவற்றையும் சித்தித்து அவற்றையும் தீர்வுகளுக்கு முன்னால் குறித்துக் கொள்ளுங்கள்.


06. சரியான முடிவுகளைத் தெரிவு செய்ய வேண்டுமெனில் உங்கள் விருப்பு வெறுப்புகள் பற்றி சற்று குறைவாகக் கவனம் செலுத்துங்கள். 


07. உங்கள் தீர்வுகளில் எது மிக அதிகமாக உங்களின் பிரச்சினையைத் தீர்க்க ஏற்றது என்பதை மதிப்பீட்டின் மூலம் அறியலாம். அந்த முடிவை நீங்கள் உங்கள் சிக்கலுக்குத் தீர்வாகக் கொள்ளுங்கள். நிச்சயம் அது உங்களுக்கு நன்மையைத் தரும்