You are here : Life

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




பகவத்கீதையை மீண்டும் மீண்டும் படிப்பதால் என்ன பயன்?

2019-08-13



ஒரு பெரியவர் எப்போது பார்த்தாலும் தன்னுடைய வீட்டு வாசலில் அமர்ந்தபடி பகவத்கீதையை படித்துக் கொண்டே இருப்பார். பல நாட்களாக இதனை கவனித்த இளைஞன் ஒருவன்  ஒரு நாள் அவரிடம் வந்து கேட்டான் ,


" தாத்தா! எப்பப் பாத்தாலும் இந்த புத்தகத்தையே படிச்சிட்டு இருக்கீங்களே. இதை எத்தனை நாளா படிக்கிறீங்க? "என்றான்.
பெரியவர் சொன்னார், " ஒரு அம்பது அம்பத்தஞ்சு வருஷம் இருக்கும் ". "அப்படின்னா இந்தப் புத்தகம் உங்களுக்கு மனப்பாடம் ஆகியிருக்குமே ஏன் இன்னும் படிக்கிறிங்க ?" என்றான்.
தாத்தா சிரித்தபடி கூறினார், " எனக்கு ஒரு உதவி செய். நீ செய்து முடித்ததும்  நான் பதில் சொல்றேன்".


இளைஞனும் சம்மதித்தான். பெரியவர் ஒன்றும் பேசாமல் பக்கத்தில் அடுப்புக் கரி இருந்த ஒரு மூங்கில் கூடையை எடுத்த அதை ஒரு மூலையில் கொட்டினார்.


பல நாட்களாகக் கரியை சுமந்து சுமந்து அந்தக் கூடையின் உட்புறம் கருப்பாக மாறி இருந்தது.


பெரியவர் சொன்னார்,
" தம்பி, அதோ இருக்குற பைப்புல இருந்து இந்தக் கூடையில கொஞ்சம் தண்ணி பிடியேன்"
இளைஞனுக்கு சிரிப்பு வந்தது.


இருந்தாலும் பெரியவர் சொல்லி விட்டதால் எடுத்துச் சென்று தண்ணீர் நிரப்பி எடுத்து வந்தான். அவன் வந்து சேருவதற்கு முன்பே எல்லா நீரும் தரையில் ஒழுகிப்போனது. 


பெரியவர் சொன்னார், " இன்னும் ஒரு முறை " . இளைஞன் மீண்டும் முயன்றான்.
ஆனால் மூங்கில் கூடையில் தண்ணீர் எப்படி நிற்கும்? மீண்டும் சிந்திப் போனது.
பெரியவர் கேட்டார், " தாத்தாவுக்காக இன்னும் ஒரே ஒரு முறை மட்டும் "


இளைஞன் ஒரு முடிவுக்கு வந்தான். "இம்முறை மட்டும் அவர் சொல்கிறபடி செய்து விட்டு திரும்பிப் பார்க்காமல் ஓடிவிடுவோம். அவர் எந்தப் புத்தகத்தைப் படித்தால் எனக்கென்ன வந்தது?" என எண்ணியப்படி தண்ணீர் பிடித்தான். வழக்கம் போலவே எல்லாத் தண்ணீரும் தரையில்.


" தாத்தா, இந்தாங்க உங்க கூடை. இதில் தண்ணி நிக்காதுன்னு உங்களுக்குத் தெரியுமா தெரியாதா? எதுக்கு என்னை இந்தப் பாடு படுத்தினிங்க "என்றான்.


அவர் புன்னகையோடு சொன்னார், " இதுல தண்ணி நிக்காதுன்னு எனக்கும் தெரியும்.
நீ முதல்ல தண்ணீர் பிடிக்கப் போகும் போது இதோட உட்புறம் எப்படி இருந்தது?" என்றார்.
இளைஞன் சொன்னான் , " ரொம்ப அழுக்குப் பிடிச்சு கருப்பா இருந்தது "
"இப்போ பார்"என்றார்.


தண்ணீர் பட்டுப் பட்டுக் கூடையின் உட்புறம் சுத்தமாகி இருந்தது. பெரியவர் சொன்னார்," தம்பி,


நீ கேட்ட கேள்விக்கு பதிலஇதுதான்.


எத்தனை முறை தண்ணீர் பிடிச்சாலும் மூங்கில் கூடை நிரம்பவே இல்லை.ஆனாலும் ஒவ்வொரு முறையும் கூடை சுத்தமானது. அது போலத்தான் எத்தனை முறை படிச்சாலும் முழு பகவத்கீதையும் மனப்பாடம் ஆயிடும்னு சொல்ல முடியாது.


ஆனா படிக்கிற ஒவ்வொரு முறையும் உள்ளுக்குள்ள இருக்கும் அழுக்கும், கறையும் சுத்தமாகிக்கிட்டே இருக்கும்" என்றார். பதில் இல்லாது ஸ்தம்மபித்தான் இளைஞன். 


கீதையின் பெருமையை இதைவிட யாராலும் விளக்க முடியாது.