You are here : Life

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




ஆருடம் உங்கள் வெற்றிப்பாதையில் தடைக்கல்லா?

2019-09-18



கிருஷ்ண தேவராயர் ஒருமுறை எதிரியைத் தாக்கப் படையோடு புறப்பட்டுப் போனார். ஆற்றங்கரையை கடக்க வேண்டிய நேரத்தில், அரசவை ஜோசியர், “மன்னா, இன்றைக்கு நாள் நன்றாக இல்லை. அடுத்த திங்கள்கிழமை போருக்குப் போனால் வெற்றி நிச்சயம்” என்று சொன்னார்.


கிருஷ்ணதேவராயர் குழம்பினார். அவ்வளவு நாட்கள் கொடுத்தால், எதிரி உஷாராகி விடுவான். அவன் எதிர்பாராத நேரத்தில் உடனே தாக்கினால்தான் வெற்றி.


ஆனால், ஜோசியர் சொன்ன பின் சந்தேகம் வந்து விடவே., தெனாலிராமனிடம் ஆலோசனை கேட்டார்.


தெனாலிராமன் ஜோசியரை அழைத்தான். “எல்லோருக்கும் ஆருடம் சொல்கிறீர்களே, நீங்கள் இன்னும் எத்தனை வருடம் உயிரோடு இருப்பீர்கள் என்று சொல்ல முடியுமா?  என்று கேட்டான்.
இன்னும் இருபது வருடங்கள் வாழ்ந்து இருப்பேன்” என்றார் ஜோசியர். தெனாலிராமன் சடக்கென்று வாளை உருவி அவர் கழுத்தில் பதித்து,
“இந்த விநாடியே உங்கள் ஆரூடத்தை என்னால் பொய்யாக்க முடியுமா, முடியாதா?” என்று கேட்டான்.
ஜோசியரின் விழிகள் அச்சத்தில் பிதுங்கின. “முடியும்.. முடியும்” என்று அலறினார். அவ்வளவுதான் மன்னா ஜோசியம்..
உங்களுக்கு எதிரான எந்த ஜோசியத்தையும் உங்களால் பொய்யாக்க முடியும்” என்று புன்னகைத்தான் தெனாலிராமன். கிருஷ்ண தேவராயர் ஆற்றைக் கடந்தார். எதிரியை வெற்றி கொண்டார்.

உங்கள் பாதையில் யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் பேசட்டும். உங்கள் பாதையில் உறுதியாகச் செல்லுங்கள். அவரிடம் நம்பிக்கை வையுங்கள், இவரிடம் நம்பிக்கை வையுங்கள் என்றெல்லாம் பிறர் சொல்வதைக் கேட்டு மயங்காதீர்கள். முதலில்  உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். உங்கள் மீது வைக்கிற அசைக்க முடியாத நம்பிக்கையே வெற்றிக்கு வழி வைக்கும்.


நீங்கள் தீர்மானமாக இருந்தால், எந்த கோள்களால் உங்களை எதுவும் செய்ய முடியாது. வீண் சந்தேகங்களை விலக்கி, உங்கள் மீது நம்பிக்கை வைத்துத் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.