You are here : Life

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




உங்கள் மனதின் எதிர்மறையான பதிவுகள் தகர்த்தெரியும் ஆழ்மன தியானம் - பயிற்சி

2019-09-21



நம் மூளையில் உள்ள எண்ணங்களில் மூன்று நிலைகள் உள்ளது அவை ஆல்ஃபா, பீட்டா, டெல்டா ஆகும். இதில் பீட்டாநிலையானது  தூக்க நிலைக்கும் விழிப்பு நிலைக்கும் இடைப்பட்ட நிலையில் வலது பக்க மூளையின் ஆழமான சக்தியோடு தொடர்புடையது. ஆல்பா தியானம் மூலம் நமது வலதுபக்க மூளையின் செயல்திறனை அதிகரிக்கச் செய்து நினைத்ததை அடையலாம். - 


நாம் அதிகமாக பீட்டா நிலையில் தான் இயங்குகிறோம். அதாவது சாதாரண கான்ஷியஸ் மைண்ட் தொடர்ந்து இயங்குவதால் என்ன நிகழும் என்று நாம் ஒரு உதாரணத்துடன் இப்பொழுது காண்போம். 
யானைக்கு சிறுவயதில் காலில் சங்கிலி கொண்டு கட்டுவார்கள். சிறு வயதில் யானையால் அந்த சங்கிலியை உடைக்க முடியாது. நாட்கள் செல்ல செல்ல யானை வளர்ந்துவிடும். ஆனாலும் அதே சங்கிலியால்தான் யானையை கட்டிப் போட்டு வைத்திருப்பார்கள். யானையால் இப்பொது அந்த சங்கிலியை தகர்த்து போக முடியும். ஆனால் யானை அப்படி செய்யவில்லை. ஏன் என்றால் அதன் மனதில் சிறு வயதிலிருந்தே அதனை உடைக்க முடியாது என்று பதிவாகிவிட்டது. இதுபோல தான் நமது மனதிலும் பல்வேறு தேவையற்ற எதிர்மறையான பதிவுகள் இருக்கிறது. நம்மால் இவ்வளவுதான் செய்யமுடியும் என்று நாம் ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் நம்மை அடங்கி விடுகிறோம். அதுதான் நம்முடைய முன்னேற்றத்தை தடை செய்ய ஒரு காரணமாக அமைகிறது. 
நமது வலது பக்க மூளையை ஊக்குவித்து அதன் செயல்திறனை அதிகரிப்பதன் மூலும் இவ்வகையான எண்ணங்களை தவிர்க்கலாம். இந்த நிலையை தொடர்ந்து பழகுவதன் மூலம் நாம் நினைத்ததை காரியத்தை  செய்ய இயலும். அத்துடன் ஆல்பா தியானத்தை தொடர்ந்து செய்தால் மனதிற்கு நிம்மதியும் உடலிற்கு ஆரோக்கியமும் கிடைக்கும். 

ஆல்பா நிலை என்பது விழிப்பும் உறக்கமும் அற்ற தூங்காமல் தூங்கும் தியான, மோன நிலை (A Hypnotic State). டெல்டா என்பது சமாதி நிலை. நாம் விழித்துக் கொண்டிருக்கும் போது ஐம்புலன்களுக்கும் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருப்பதால் தொடர்ந்து தகவல்களை ஆய்ந்தும், தொகுத்தும், பகுத்தும் கொண்டிருப்பதால் நினைவு மனம் அதிக இயக்கத்திலும் அதாவது விழிப்பு நிலையிலும் ஆழ்மனம் (Sub Conscious Mind) உறக்க நிலையிலும் இருக்கிறது.


ஆல்பா தியானம் 
நீங்கள் ஆல்பா தியானத்தை செய்யவதற்கு அதிகாலை வேளை தான் சிறந்தது எனினும் முடியாவிடில் இரவு நேரத்தில் செய்யலாம். இந்த பயிற்சியின்  மூலம் உங்களுடைய ஆற்றலையும் உள்ளுணர்வின் செயல்திறனையும் அதிகரிக்க முடியும். அத்துடன் உங்களுடைய மன அழுத்தத்தை குறைக்க ஆல்பா தியானம் உதவும். 


ஆல்பா தியானம் செய்முறை
அமைதியான மற்றும் காற்று உள்ள இடத்தில் தனிமையில் அமர்ந்து கொண்டு உடல் முழுவதும் தளர்ந்த நிலையில்  வைத்து செய்ய வேண்டும். ஆல்பா தியானத்தை படுத்துக்கொண்டு செய்யக்கூடாது
ஆழ்மனம் நம்மை இந்தப் பிரபஞ்ச மனத்தோடு இணைக்கும் நடுநிலை மனம் நாம் விரும்பும் எதுவாக இருந்தாலும் நாம் எந்த நிலையிலிருந்தாலும் பெற்றுத்தரும் ஆற்றல் வாய்ந்த பொக்கிஷம். இதற்காக பெஞ்சமின் ஃபிராங்கிளின் ஒரு உத்தியை பின்பற்றியிருக்கிறார்.


பெஞ்சமின் ஃபிராங்கிளின் கையில் ஒரு கூழாங்கலை வைத்துக் கொண்டு ஒரு சாய்வு நாற்காலியின் கைப்பிடியின் வெளியே கை இருக்குமாறு வைத்துக் தளர்வாக, ஓய்வாக்க் கண்களை மூடி அமர்ந்து கொண்டு உறங்குவதுபோல் இருப்பாராம். உறக்கம் வருகிறபோது கைப்பிடி தளரந்து கூழாங்கல் தரையில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு உலோகத் தகட்டின் மீது விழுந்து ஒலி உண்டாக்கும். அந்த நிலை தூங்காமல் தூங்கும் அறிதுயில் என்கிற ஆல்பா தியான நிலை.


இந்த நிலையில் தன்னுடைய பிரச்சனைகள் குறித்து சிந்திக்கும்போது மின்னல் கீற்றென சில சிந்தனைகள், விடைகள், தீர்வுகள் உண்டாகும். அவை பிரபஞ்ச பதிவிலிரந்து கிடைக்கும் செய்திகள். இந்த வகையான செயல்பாட்டிற்கு பின்னர் நாம் இதை மறந்து இருக்கும்பொழுது சில நேரங்களில் திடீரென்று சில சிந்தனைகளை மனம் உருவாக்கித் தரும். மனதை கசக்கிப் பிழிவதை விட (Brain Storminng) வலிந்து சிந்திப்பதை விட ஓய்வாக மகிழ்ச்சியாக இருக்கும்பொழுதே கற்பனை ஊற்றெடுக்கும். அந்த கற்பனைகள் எமக்கு இதுவரை இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வாகலாம் அல்லது புதிய ஒரு வழியை காண்பிக்கலாம். ஆனால் நிச்சயம் உங்கள் வாழ்வில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.