You are here : Life

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




கழுதை கற்று தந்த பாடம்

2019-09-23



ஒரு விவசாயி வளர்த்து வந்த வயதான கழுதை ஒன்று தோட்டத்தில் உள்ள வறண்ட  பாழும்கிணற்றில் தவறி விழுந்துவிட்டது.

உள்ளே விழுந்த கழுதை அலறிக்கொண்டே இருந்தது.....!!  அதை  காப்பாற்ற எடுக்கும் முயற்சிக்கு புதிதாக கழுதை ஒன்றை வாங்கிவிடலாம் என எண்ணினான் வியாபாரி.


மிகவும் வயதான கழுதையும் மிகவும் வயதானது எனவே பாழும்கிணற்றில் கழுதயை வைத்து அப்படியே மூடிவி முடிவெடுத்தான்.


அயலவரை  உதவிக்கு கூப்பிட்டு சற்று அருகில் இருந்த ஒரு மண் திட்டிலிருந்து மண்ணை அள்ளி கொண்டு வந்து அந்த கிணற்றில் போட ஆரம்பித்தான். 


கழுதை நடப்பதை உணர்ந்து தற்போது மரண பயத்தில் அலறியது. ஆனால் அதன் அலறலை எவரும் பொருட்படுத்தவில்லை. இவர்கள் தொடர்ந்து மண்ணை அள்ளி கொட்டினர். 


சிறிது நேரத்தில் அதன் அலறல் சத்தம் அடங்கிவிட்டது. கிணற்றை எட்டிப்பார்த்த  விவசாயிக்கு ஒரு வியப்பு காத்திருந்தது.
ஒவ்வொரு முறையும் மண்ணை கொட்டும்போது, கழுதை தனது உடலை ஒரு முறை உதறிவிட்டு, மண்ணை கீழே தள்ளி, அந்த மண்ணின் மீதே நின்று வந்தது. இப்படியே பல அடிகள் அது மேலே வந்திருந்தது.


இவர்கள் மேலும் மேலும் மண்ணை போட போட கழுதை தனது முயற்சியை கைவிடாது, உடலை உதறி உதறி மண்ணை கீழே தள்ளி அதன் இடைவிடாத இந்த முயற்சியால் அனைவரும் வியக்கும் வண்ணம் ஒரு வழியாக கிணற்றின் விளிம்பிற்கே வந்துவிட்டது.
விளிம்பை எட்டியவுடன் மகிழ்ச்சியில் கனைத்தப்படி ஒரே ஓட்டமாக ஓடி தோட்டத்திற்குள் சென்று மறைந்தது.....!!


வாழ்க்கை பல சந்தர்ப்பங்களில் இப்படித் தான் , நம்மை படுகுழியில் தள்ளிக் , குற்றச்சாற்றுகளையும், பழியையும் முன்வைத்து  நம் வாழ்வையே இருள் உடையதாக்கும்.  நாம் தான் இந்த கழுதை போல , தன்னம்பிக்கையும் ? விடாமுயற்சியும் கொண்டு, தடைக்கல்லை படிக்கல்லாக்கி அவற்றை உதறித் தள்ளி மேலே வரவேண்டும்.....!!!