You are here : Life

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




வீண் விவாதத்திற்கு கிடைத்த தண்டனை

2019-09-24



ஒரு காட்டில் கழுதைக்கும் புலிக்கும் இடையே புல்வெளியில் நிறம் குறித்து விவாதம் மூண்டது. அப்போது கழுதை “புல்லின் நிறம் நீலம்” என்று சொன்னது. உடனே புலி, “நீ தப்பாக சொல்கிறாய், புல்லின் நிறம் பச்சை” என்று சொன்னது.


பின்னர் இருவருக்கும் இடையேயான விவாதம் தீவிரமானது. இருவரும் தங்கள் சொந்த வார்த்தைகளில் உறுதியாக இருந்தன.   à®‡à®¤à®±à¯à®•à¯ ஒரு முடிவு தெரியவேண்டும் என்றால் நாம் காட்டு ராஜ சிங்கத்தை சந்தித்து, இதற்கு தீர்ப்பு வழங்க சொல்வோம் என்று இருவரும் சிங்கத்திடம் சென்றன.


காட்டின்  மத்தியில், சிங்கம், சிம்மாசனத்தில் உட்கார்ந்து இருந்தது. இரண்டும் சேர்ந்து “எங்களுக்கு ஒரு தீர்ப்பு வழங்க வேண்டும் காட்டு ராஜவே என கேட்டன.   à®®à¯à®¤à®²à®¿à®²à¯ கழுதை  “மேன்மை தாங்கிய காட்டு ராஜாவே புல்லின் நிறம் நீலம்தனே” என்று  சொன்னது.  அதற்கு சிங்கம் “ஆமாம்  புல்லின் நிறம் நீலம்தான்” என்று சொன்னது.
உடனே கழுதை, 'இதை இந்த புலி நம்பவில்லை. எனவே புலியை கடுமையாக  தண்டிக்க வேண்டும் ராஜா” என்று சொன்னது. இதை கேட்ட சிங்கம் “புலிக்கு ஒரு வருடம் சிறை என்று தீர்ப்பு சொன்னது. கழுதை  மகிழ்ச்சியில் குதித்தது. புலிக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.


இதை கேட்ட புலி சிங்கத்திடம் சென்று “ராஜாவே 'ஏன் புல்லின் நிறம் பச்சை இல்லை, புல்லின் நிறம் பச்சைதானே” என்று கேட்டது. அதற்கு 'சிங்கம், “ஆம் புல்லின் நிறம் பச்சைதான்” என்று சொன்னது. அதற்கு புலி “பிறகு  நான் ஏன் சிறையில் அடைக்கப்படுகிறேன்?”  என்று கேட்டது.


காட்டுராஜா சிங்கம், புலியை பார்த்து நிதானமாக  "புல்லின் நிறம் நீலமாகவோ அல்லது பச்சையாகவோ இருந்துவிட்டு போகட்டும். இதற்காக நீ தண்டிக்கப்படவில்லை. நீ ஒரு வலிமை வாய்ந்தவன், புத்திசாலியானவன். நீ போய் ஒரு முட்டாள் கழுதையுடன் விவாதம் செய்திருக்கிறாய், அதுவும் இல்லாமல் அதற்கு முடிவு எடுக்க அந்த முட்டாள் கழுதையை என்னிடம் வேறு கூட்டிக்கொண்டு வந்திருக்கிறாய்  இதற்க்காத்தான் நீ தண்டிக்கபட்டாய்” என்று சொன்னது.