You are here : Life

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




கரை சேறும் வழி!

2019-09-25


ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இக்கரையில் இரண்டு பேர் நின்று கொண்டிருக்கிறார்கள். ஓடம் இல்லை. எப்படி அக்கரைக்குப் போவது?


இரண்டு நண்பர்கள் கரை புரண்டு ஓடும்  ஆற்றை கடப்பது எப்படி என்று தெரியாமல் யோசித்து  கொண்டிருந்தனர். அப்போது  ஒரு காளை மாடு அங்கே வந்தது. அது வந்த வேகத்தில் ஆற்றில் பாய்ந்து நீந்த ஆரம்பித்தது. இதைப் பார்த்த இரண்டு பேரில் ஒருவர்  நீரில் குதித்து காளை மாட்டின் வாலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். காளை மாடு சுலபமாக அவனை இழுத்துச் சென்று அக்கரையில் சேர்த்துவிட்டது.


அடுத்தவன் அவனை பின்பற்ற எண்ணினான்.  நமக்கு ஒரு ‘வால்’ கிடைக்காதா என்று எதிர்பார்த்தான். அந்த நேரம் ஒரு நாய்வந்து ஆற்றில் குதித்தது.


இதுதான் நேரம் என்று இவனும் ஆற்றில் விழுந்து அந்த நாயின் வாலைப் பிடித்துக் கொண்டு கரையை கடக்க முட்பட்டான். ஆனால்  அவனை  இழுத்துக் கொண்டு நாயால் ஆற்றினை கடக்க  முடியவில்லை.  ஒரு கட்டத்தில் நாய், இருவருமே ஆற்று நீர் போகும் திசையிலேயே மிதந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் போக வேண்டிய திசை வேறு. போய்க் கொண்டிருக்கிற திசை வேறு.


வாழ்க்கையும் இப்படி தான் நாம் பற்றி கொள்ளும் கேட்பாடுகளுக்கு ஏற்ப நம் வாழ்வை வடிவமைக்கின்றது. சரியான ஒரு பாதையை தெரிவுசெய்பவன் கரை காண்கின்றான்.