You are here : Life

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




தோல்விகளை தோற்கச் செய்யும் தெளிவான மனநிலை!

2019-11-04


நெப்போலியனை பிரிட்டிஷ் ராணுவம்  சிறை பிடித்து ஆப்பிரிக்க தனிச்சிறையில் தனிமையில் வைத்தது. சிறையில் மன உளைச்சலில் அவரின் கடைசி காலம் கழிந்தது. அவரை பார்க்க வந்த அவரின் நண்பர் ஒருவர்  “இது உங்களின் சிந்தனையை செயல்பட வைக்கும் தனிமையை போக்கும்” என்று கூறி ஒரு சதுரங்க அட்டையை  அவரிடம் கொடுத்தார். ஆனால் சிறை படுத்தி விட்டார்களே என்ற மன உளைச்சலில் இருந்த மாவீரனுக்கு அதன் மீது கவனம்  போகவில்லை. சிறிது காலத்தில் இறந்தும் போனார் அவர். 


பிற்காலத்தில் பிரான்ஸ் அருங்காட்சியகம் மாவீரன் நெப்போலியனிடம் இருந்த சதுரங்க அட்டையை ஏலம் விட அதை ஆய்வு செய்த போது அந்த அட்டையின் நடு பக்கத்தில் சிறிய அளவில் ஒரு குறிப்பு இருந்தது. அதில் அந்த சிறைச்சாலையில் இருந்து தப்பிப்பதற்க்கான வழியை அந்த குறிப்பு சொல்லி இருந்தது. ஆனால் அவரின் மன உளைச்சலும்,பதட்டமும் அவரின் சிந்தனையை செயல்படாமல் செய்தது. அவர் சிறையிலிருந்து தப்புவதற்கான வழி கையில் இருந்த போதும்   அதனை அறிய முடியாமல் செய்தது.


எத்தகைய குழப்பமான சூழ்நிலையிலும் நம் நிதானம் தவராது செயற்படுதல் வேண்டும் அதுவே எமது பிரச்சினைகளுக்கான தீர்வை கண்டறியச் செய்யும்.