You are here : Lifestyle

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




தலை­மு­டிக்கு உயி­ருள்­ளதா?

January 9 , 2018


பொது­வா­கவே முடிக்கு உயி­ருள்­ளது. உயி­ரில்­லா­விட்டால் வள­ர­மு­டியுமா என்­பதை அவ­தா­னிக்­க­வேண்டும்.

முடி, மயிர் அல்­லது சிகை (Hair) என்­பது அடித்­தோலில் (dermis) காணப்­படும் மயிர்க்­கால்­க­ளி­லி­ருந்து வளரும் இழை வடி­வ­மு­டைய உயி­ரியப் பொரு­ளாகும். முடி வளர்­வது பாலூட்­டி­களின் (மனித இனம் மற்றும் மிரு­கங்கள் உள்­ளிட்ட உயி­ரி­னங்கள்) ஒரு குறிப்­பி­டத்­தக்கப் பண்­பாக உள்­ளது.

மயி­ரற்ற தோல் (glabrous skin) பகு­தி­களைத் தவிர்த்து, மனி­தர்­களின் தோல்­ப­குதி முழு­வதும் தடித்த இறு­தி­யான மற்றும் நய­மான இள­ம­யிர்­களை உரு­வாக்கும் மயிர்க்­கால்கள் பர­வி­யுள்­ளன.

முடி வளர்த்தல், அதன் வகைகள், பரா­ம­ரிப்புக் குறித்த பர­வ­லான ஆர்வம் இருந்­தாலும் மயி­ரா­னது, முதன்­மை­யாக கெரட்டின் (நக­மியம்) என்ற புர­தத்­தா­லான முக்­கி­ய­மான உயி­ரியப் பொரு­ளாகும்.

பொது­வாக, பல மனித சமூ­கங்­களில் பெண்கள் தலை­மு­டியை நீள­மா­கவும், ஆண்கள் குட்­டை­யா­கவும் வளர்க்­கின்­றார்கள்.

முடி என்­பது இரண்டு தனிப்­பட்ட வடி­வங்­களைக் குறிப்­பி­டு­கின்­றது:

முத­லா­வ­தாக, தோலுக்­க­டி­யி­லுள்ள மயிர்க்­கால்­க­ளையும், தோலி­லி­ருந்து நீக்­கப்­பட்ட மயிர்க்­கு­மிழ்­க­ளையும் குறிக்­கின்­றது.

இவ்­வு­றுப்பு அடித்­தோலில் அமைந்­துள்­ளது. இது, முடி விழுந்­த­வு­டனோ அல்­லது நீக்­கப்­பட்­ட­வு­டனோ மீண்டும் வளரும் குருத்­த­ணுக்­களைப் (stem cells) பரா­ம­ரிக்­கி­றது. இவை காய­மேற்­பட்­டப்பின் தோல் மீண்டும் வள­ரவும் உப­யோ­கப்­ப­டு­கி­றது.

இரண்­டா­வ­தாக, தோலின் மேற்­பு­ற­முள்ள கடி­ன­மான இழை­வ­டிவ மயிர்த்­தண்­டு­களைக் குறிக்­கின்­றது. மயிர்த்­தண்டின் குறுக்­கு­வெட்டுப் பகு­தி­களை மூன்­றாகப் பிரிக்­கலாம். மயி­ரி­ழை­களின் வடிவம் பல அடுக்­கு­க­ளா­லா­னது:

கூரை ஓடு­களைப் போல ஒன்­றின்­மே­லொன்­றாக தட்­டை­யா­கவும், ஒல்­லி­யா­கவும் உள்ள செல்­களின் பல அடுக்­கு­களைக் கொண்டப் புறத்தோல் (cuticle) பிரம்பு போன்ற (சுமாராக) கெரட்டின் கற்றைகளை, செல் வடிவங்களிலுடைய புறணி (cortex).

 மயிரிழையின் நடுவிலுள்ள ஒழுங்கற்ற, திறந்த பகுதிகளை உள்ளடக்கிய அகணி (medulla) .

ஒவ்வொரு மயிரிழையும் அகணி, புறணி, புறத்தோல் பகுதிகளைக் கொண்டதாகும்.  உள்ளார்ந்தப் பகுதியான ஒழுங்கற்ற, திறந்த பகுதிகளை உள்ளடக்கிய அகணி எல்லா நேரங்களிலும் இருப்பதில்லை.

உயர் வடிவமும், ஒருங்கமைவுமுள்ள புறணி (அல்லது முடியின் மைய அடுக்கானது) வலுவிற்கும், நீர் உறிஞ்சுவதற்கும் மூலமாக உள்ளது.