You are here : Thelogy

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




வளம் தரும் வியாழக்கிழமை... இன்று உங்கள் ராசிக்கு என்ன நடக்கும் என்று பார்க்கலாமா

March 08.2018


நிலவு வழிபாட்டால் நிம்மதி காண வேண்டிய நாள். நிச்சயித்த காரியங்களில் மாற்றம் ஏற்படும். நண்பர்கள் பகையாகலாம். வாக்குறுதிகள் கொடுக்கும் பொழுது கவனம் தேவை.

ரிஷபம்

நண்பர்களின் சந்திப்பால் நலம் காணும் நாள். வெளியூர் பயணங் கள் விரும்பும் விதத்தில் அமையும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.

மிதுனம்

உத்தியோக மாற்றம் உறுதியாகும் நாள். குலதெய்வப் பிரார்த் தனைகளை நிறை வேற்றுவீர்கள். கூட்டுத் தொழிலில் இருந்த குழப்பங்கள் விலகும். மன உறுதியுடனும் செயல்படுவீர்கள்.

கடகம்

சுபச் செய்திகள் வந்து சேரும் நாள். நீண்ட நாளையப் பிரச்சினை யொன்று நல்ல முடிவிற்கு வரும். குடும்பத்தினர்களின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். பயணத்தால் பலன் கிடைக்கும்.

சிம்மம்

புதிய பாதை புலப்படும் நாள். பொருளாதார முன்னேற்றம் உண்டு. பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிட்டும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். தனவரவு தாராளமாக வந்து சேரும்.

கன்னி

குடும்பப் பிரச்சினைகள் தீரும் நாள். கொள்கைப் பிடிப்பைத் தளர்த்திக் கொள்வீர்கள். பாதியில் நின்ற பணிகள் மீதியும்தொடரும். புதிய சொத்துக்களை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் மேலோங்கும்.

துலாம்

மகிழ்ச்சிக்குரிய தகவல் வீடு வந்து சேரும் நாள். விருப்பங்கள் நிறைவேறும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவார்கள். பொதுநலத்தில் ஈடுபாட்டால் புகழ் பெறுவீர்கள். வரவு திருப்தி தரும்.

விருச்சகம்

வெற்றிக் கனியை எட்டிப் பிடிக்கும் நாள். தீடீர் பயணங்களால் தித்திக்கும் செய்தி வந்து சேரும். தெய்வப் பிரார்த்தனை களை நிறைவேற்றுவீர்கள். எதிர் பாராத தனலாபம் உண்டு.

தனுசு

வருமானம் பெருக வழியமைத்துக் கொள்ளும் நாள். தொழிலில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். எந்த முக்கிய முடிவையும் யோசித்து எடுப்பது நல்லது. கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது.

மகரம்

சம்பள உயர்வால் சந்தோ‌ஷம் காணும் நாள். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். அஞ்சல்வழிச் செய்தி நெஞ்சை மகிழ்விக்கும். வியாபாரரீதியாக வரவேண்டிய பாக்கிகள் வந்து சேரும்.

கும்பம்

வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டும் நாள். தடைப்பட்ட ஒப்பந்தங்கள் தானாக வந்து சேரும். அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும். ஆரோக்கியம் சீராகும்.

மீனம்

யோகங்கள் ஏற்பட யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். பிறருக்கு பொறுப்புகள் சொல் வதைத் தவிர்ப்பது நல்லது. தொழிலில் புதிய முதலீடுகள் செய்யலாமா என சிந்திப்பீர்கள்.