You are here : Theology

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




ஆதி அந்தம் இல்லா சிவனின் பல்வேறு வடிவங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்!

April 25.2018


பெரும்பாலும் கோயில்களில் லிங்க வடிவில் தான் அருள்பாலிப்பார் சிவபெருமான், சில கோயில்களில் விஷேச வடிவங்களில் அவர் காட்சி தந்து அருள்புரிகிறார்.

அத்தகைய சிறப்பு வாய்ந்த வடிவங்கள் பற்றியும் கோயில் குறித்தும் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

  • நஞ்சுண்ட நீலகண்டன் அம்பிகையின் மடியில் சயனித்திருக்கும் நிலையில் காசியில் உள்ள அனுமன் காட்டிலும் ஆந்திராவில் உள்ள சுருட்டப்பள்ளியிலும் அருள் பாலிக்கிறார்.
  • மூன்று கால்களுடன் இறைவன் காணப்படுவதால் ஜ்வாரகேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். காஞ்சிபுரம் மற்றும் வேலூர் கோட்டையில் இவரின் இந்த உருவத்தை தரிசிக்க முடியும்.
  • சிவன் லேசாக வலப் புறம் சாய்ந்திருக்கும் வடிவத்தில் கரூரில் உள்ள பசுபதீஸ்வரர் கோயிலில் அருள்பாலிக்கிறார்.
  • காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோயிலில் இறைவன் எட்டு திருக்கரங்களுடன் காணப்படுகிறார்.
  • பிருங்கி மகரிஷி வண்டு வடிவில் வந்து சிவலிங்கத்தை துளைத்து வழிபட்டதால் அந்த வண்டு துளைத்த அடையாளத் தோடு சிவலிங்கம் இருக்கும் இடம் திருநல்லூர் ஆகும். இங்கு இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர் என்கிற பெயரில் அழைக்கப்படுகிறார்.
  • காசி, காஞ்சி கைலாசநாதர் கோயில், நேபாளம், காளஹஸ்தி, திருவானைக்காவல், சித்தேஸ்வர் மஹாதேவ் , ராசிபுரம் ஆகிய இடங்களில் சிவன் ஐந்து முகமுடன் காட்சியளிக்கிறார்

 

  • சிவன் நெய் மலையாகவே காட்சி தரும் இடம் ஒன்று உள்ளது. ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த இந்த லிங்கம் கேரளாவில் உள்ள திருச்சூரில் உள்ளது.
  • நண்டு ஒன்று சிவபெருமானின் மேல் பக்தியோடு வழிபட்டதால் சிவலிங்கத்தின் மேல் பாகத்தில் நண்டு குடைந்த அடையாளத்துடன் இறைவன் அருட்சோமநாதர் என்கிற பெயரில் நீடூர் எனும் ஊரில் அருள் புரிந்து வருகிறார்.
  • மானும் மழுவும் ஏந்தும் சிவனின் திருக்கை திருசக்கிரம் ஏந்திய கோலத்தில் உற்சவமூர்த்தியாக அருள் பாலிக்கிறார். இக்கோயில் மயிலாடுதுறையில் உள்ள திருவிற்குடியில் உள்ளது. இங்கு இறைவனுக்கு துளசியால் அர்ச்சனை செய்யப்படுகிறது.
  • 32 இதழ்களை உடைய ஆவுடையாரில் சுயம்பாக எழுந்தருளியுள்ள லிங்கம் சொர்ணபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறது. இக்கோயில் செம்பனார் கோயில் என அழைக்கப்படுகிறது.
  • ரத்தினகிரியில் உள்ள வேந்தன் ஒருவனை இறைவன் சோதனை செய்த போது அந்த வேந்தனின் வாள் பட்ட தழும்புடன் இறைவன் காட்சி தருகிறான். இந்த இறைவனுக்கு ரத்தினகிரீஸ்வரர் என்று பெயர்.
  • குங்குமத்தால் ஆன சிவலிங்கம் மகாராஷ்டிர மாநிலம் குஸ்மேசம் எனும் பகுதியில் இருக்கிறது.
  • பாஞ்சன்ய சங்கை சிவனை வழிபட்டு பெற்றுக் கொண்டார் பெருமாள். அந்த வழிபாடு நடந்த இடத்தியிலேயே சங்காரண்யேஸ்வரர் இறைவன் அருள்பாலித்து வருகிறார். இந்தக் கோயில் தலைச்சங்காட்டில் உள்ளது.
  • விஷ்ணு கோயில்களில் மட்டும் வைக்கப்படும் சடாரி எனும் சம்பிரதாயம் மூன்று சிவன் கோயில்களிலும் கடைப்பிடிக்கப் படுகிறது. அவை காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் , காளஹஸ்தி மற்றும் சுருட்டப்பள்ளி சிவன் கோயில்கள் ஆகும்.
  • திருவிஜயமங்கலத்தில் அர்ஜுனனின் அம்பு பட்ட லிங்கம் இருக்கிறது. இங்கு இறைவன் விஜயநாதேஸ்வரர் என்கிற பெயரில் அருள்பாலிக்கிறார்.
  • சுயம்புலிங்கம் ஒன்றின் மேற்புறம் பலாப்பழத்தின் மேற்புறம் போல முட்களாக காணப்படுகிறது. இந்தக் கோயில் தஞ்சையில் உள்ள குடவாசல் அருகே உள்ளது. இங்குள்ள இறைவனின் பெயர் பிலாசவனேஸ்வரர்.
  • தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலில் மூன்று முகம் கொண்ட அர்த்தநாரீஸ்வரராக இறைவன் அருள் பாலிக்கிறார்.
  • சந்திரன் போலவே 15 நாட்கள் வளர்ந்தும் 15 நாட்கள் தேய்ந்தும் லிங்க வடிவில் அருள்பாலித்து வருகிறார் சிவன் . பிரசித்தி பெற்ற அமர்நாத் கோயிலில் தான் இத்தகைய சிவலிங்கம் உள்ளது.