Kalaikesari
You are here : Theology

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




பிரதோஷ காலத்தில் ஆலயம் சென்று வழிபாடு செய்ய முடியாதவர்கள் செய்யவேண்டிய வழிப்பாட்டு முறை

2018-06-12


சைவர்களின் வழிப்பாட்டு முறையில் பிரதோஷம் காலம் மிக முக்கியமானதாகும். வளர் பிறை,தேய் பிறை ஆகிய இரண்டு காலங்களிலும் திரயோதசி திதியில் கதிரவன் மறைவதற்கு முன் 4.30 மணி முதல் 6.00 மணி வரை உள்ள நேரமே பிரதோஷ காலமாகும்.
மாதாந்திரப் பிரதோஷம் என்பது மாதம் இருமுறை வருவது ஆகும். சனிப்பிரதோஷம் என்பது சனிக்கிழமையன்று வரும் பிரதோஷம் ஆகும்.பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு,பிரதோஷம் சனிக்கிழமை நிகழ்ந்ததால்,சனிப்பிரதோஷம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாக சைவ வழிபாடு செய்பவர்களுக்கு இருக்கிறது. ஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயத்துக்குச் சென்றால், ஐந்து ஆண்டுகளுக்கு தினமும் சிவாலயம் சென்று வந்த புண்ணியப்பலன்கள் கிட்டும் என்பது முன்னோர்கள் வாக்கு!


பிரதோஷத்தன்று நாம் செய்ய வேண்டியது என்ன?


அத்தர்,சந்தனாதித்தைலம் போன்றவைகளையும்,சந்தனக்காப்புக்குத் தேவையான சந்தனத்தையும் ரிஷபவாகனமாகிய நந்திபகவான் அபிஷேகத்திற்குத் தர வேண்டும்.மேலும்,அபிஷேகம் நிறவடைந்ததும்,ரோஜாப்பூக்களால் கட்டப்பட்ட மாலை ஒன்றை  நந்திபகவானுக்கு அணிவிக்க வேண்டும்;அபிஷேகம் நிறைவடைந்தப் பின்னர்,தாமரை மலர்களின் மடல்களால்  அர்ச்சிக்க வேண்டும் இவ்வாறு செய்வதால்,நந்திபகவானின் முழுமையான அருளாசியைப் பெறலாம்;இந்த சனிப்பிரதோஷ நாளன்று மட்டுமல்ல;எந்த பிரதோஷ நாளாக இருந்தாலும்,இந்த முறைப்படி வழிபாடு செய்ய பிரதோஷத்தின் முழுப்பலன்களையும் நாம் பெற முடியும்.


பிரதோஷத்தன்று ஆலயம் சென்று வழிபாடு செய்ய முடியாதவர்கள் என்ன செய்யலாம்?


எந்த ராசியைச் சேர்ந்தவராக இருந்தாலும்,இந்த வழிபாட்டைசெய்யலாம். செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டால்,பிரதோஷ நேரத்தில் சிவாலயத்தின் எதாவது ஒரு பகுதியில் மஞ்சள் துண்டினை விரித்து,கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அதில் அமர்ந்து,இரு கைகளிலும் தலா ஒரு ருத்ராட்சத்தை வைத்து,கைகளை மடக்கி ஓம்சிவசிவஓம் ஜபிப்பதே போதுமானது;பல வேலைப்பளுவின் காரணமாக இந்த ஒன்றரை மணி நேரத்துக்கு ஜபிக்க முடியாவிட்டால்,கடைசி அரை மணி நேரமாவது ஜபிக்கலாம். கோவிலில் ஜபிக்க இயலாதவர்கள் இதே நேரத்தில் நமது வீட்டில் இருந்தும் ஜபிக்கலாம்.